மாதுளம்பழம்

மாதுளம்பழம்-thamil.co.ukமாதுளம்பழத்தில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இதில் எல்லா வகையும் சத்துள்ளதே. விட்டமின் c, மக்னீசியம், கந்தகம் ஆகிய சத்துக்கள் மாதுளையில் அதிகம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது. மாதுளம் பழச்சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அத்தோடு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான சத்துகளை மாதுளை வழங்குகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணிகள் தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம் என்கிறார்கள். கர்ப்பிணிகள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிடுவதால் தாய்க்கும், சேய்க்கும் கிடைக்க வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதய நோயாளிகளுக்கும் இது ஏற்றது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

மாதுளம்பழம் ஒரு நல்ல ஆன்டி ஆக்சிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. சிறுநீரகப் பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறைத் தொடர்ந்து கொடுத்துப் பரிசோதித்தபோது, அவர்களுக்கு சிறுநீரகத்துக்கு மட்டுமின்றி மேலும் பல நன்மைகளை மாதுளம் பழம் அளிப்பது தெரியவந்துள்ளது.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மாதுளை மிகவும் சிறந்தது.

மாதுளையின் விதைக்குக் காச ரோகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சுக்கிலத்தைப் பெருக்கும் சக்தியும் நீர்ச்சுருக்கு வயிற்று நோய்களைக் குணமாக்கும் தன்மையும் உண்டு.

 

-siddhar.science