இயற்கை பூச்சி கொல்லி மருந்து

அக்னி அஸ்தரம்என்பது இயற்கை முறையில் தயாரிக்கக் கூடிய பூச்சி கொல்லி மருந்தாகும்.

இவற்றை தயாரிக்க 4 கிலோ வேப்ப இலை, 1 கிலோ வெள்ளை பூண்டு, 2 கிலோ பச்சை மிளகாய், 1 கிலோ புகையிலை இவை அனைத்தையும் 30 லிட்டர் கோமியம் (பசுவின் சிறுநீர்) சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து பூச்சி கொல்லி மருந்தாக பயன்டுத்தலாம். இது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

வேம்பின் பயன்கள்
வேப்ப மரத்தில் பல்வேறு வகையான தாவர இரசாயன பொருட்கள் உள்ளது. இவற்றில் முக்கியமானது அசாடிராக்டின், நிம்பின், நிம்பிடின், நிம்பண்டையால், நிம்போலிடின், நிம்பியால்.

வேப்ப விதையில் விவசாயத்திற்கு தேவையான பயன்கள் நிறைய உள்ளது. ஒரு கிலோ வேப்பங்கொட்டை பருப்பில் ஒரு கிராம் அசாடிராக்டின் உள்ளது. வேம்பு சார்ந்த பொருட்களை பயிருக்கு தெளிப்பதன் மூலம்:
* சுற்றுச் சூழுலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை.
* இயற்கை விரோதிகளான ஒட்டுண்ணி, இரைவிழுங்கி போன்ற நன்மை தரும் உயிரினங்களைப் பாதிப்பது இல்லை. * நச்சுத்தன்மை பயிர்களில் தங்கி இருக்காது.
* தேனீக்களின் செயல்பாடு பாதிப்படைவதில்லை.
* புழுக்களை உண்ணும் பறவைகளுக்கும் பாதுகாப்பானது.
* பூச்சிகொல்லி மருந்து கொண்டு கட்டுப்படுத்த ஆகும் செலவை விட மிகக்குறைவு மருந்து.
* தெளிப்பவரின் ஆரோக்கியத்திற்கு இடையூறு விளைவிக்காது.

வேம்பு சார்ந்த பொருட்களின் நாற்றத்தின் மூலம்:
பூச்சிகள் உட்காராமல் செய்வது, கசப்பு தன்மையின் ருசி மூலம் உண்ணாமல் செய்வது, உண்ட பொருளை ஜுரணிக்க விடாமல் குமட்டச் செய்வது, புழுக்களில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுத்துவது, முதிர்ந்த பூச்சிகள் இன விருத்தி செய்வதைதத் தடுப்பது, முட்டைகள் பொரிக்க விடாமல் செய்வது, முட்டையிலிருந்த வெளிவரும் குஞ்சுகளைக் கொல்வது.

இவை செயல்படும் விதம் பயிரில் தொடுநஞ்சாகவும், குடல் நஞ்சாகவம் பயிரை பூச்சிகள் விரும்பி உண்ண விடாது தடுக்கும் ஊண் தடுப்பானாகவும் செயல்படுகின்றது. தாய் அந்திப் பூச்சிகள் முட்டை இடுவதை தவிர்க்கின்றன.

தேங்காய்ப்பால் மோர்கரைசல்

தேங்காய்ப்பால் மோர்கரைசல்1-thamil.co.ukதேங்காய்ப்பால் மோர் கலந்த கலவைக்கு இப்பெயர். நன்கு புளித்த மோர் 5 லிட்டர், 10 தேங்காய்களை உடைத்து துருவி எடுத்த தேங்காய் துருவலுடன் தேவையான நீர் சேர்த்து நன்கு அரைத்து 5 லிட்டர் பால் எடுக்கவும்.  தேங்காயினுள் இருக்கும் தண்ணீரையும் (இளநீர்) சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மோர்-thamil.co.ukஇவற்றை எடுத்து நன்கு கலந்து கொண்டு ஒரு மண்பானையில் 7 நாட்களுக்கு ஊற விட வேண்டும். கலவை நன்கு நொதித்தப் புளித்து வரும்.

இப்போது கலவையை எடுத்து 1 லிட்டருக்கு பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.

தேங்காய்ப்பால் மோர்கரைசல்2-thamil.co.ukஇதற்கு பயிர்களை வளர்க்கும் ஆற்றலும். பூச்சிகளை விரட்டும் குணமும் பூசண நோயைக் தாங்கி வளரும் தன்மையும் உண்டு. பயிர்களின் பூக்கும் திறன் அதிகரிக்கிறது. இந்தக் கரைசல் சைட்டோசைம் என்று அழைக்கப்படும் வளர்ச்சி ஊக்கிக்குச் சமமான ஆற்றலைக் கொண்டது. மிக எளிய முறையில் இக்கரைசலைத் தயாரிக்கலாம்.ஒருங்கிணைந்த இயற்கை வழி பூச்சி,நோய் கட்டுப்பாட்டு முறைகள்

உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் தீங்கு செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த பல்வேறு முறைகளை கையாளலாம். தற்போது நாம் கையாண்டு வரும் இரசாயனக் கட்டுப்பாட்டு முறைகளில் உள்ள விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு இம்முறையை தவிர்த்து மாற்றுவழிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம். இம்மாற்று வழிமுறைகளில் ஒருங்கிணைந்த இயற்கை வழி பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் முக்கியமானது. இம்முறைகளை கடைப்பிடித்த பின் கடைசியாக பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை பூச்சி விரட்டி மருந்துகளை தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

நன்மைகள்: நாம் வாழும் சுற்றுச்புறச் சூழ்நிலைகள் பாதிப்படைவதில்லை. பாதுகாக்கப்படுகிறது

பயன்படுத்தும் நிலம், நீர், காற்று மாசடைவதில்லை. பல்லுயிர் சூழல் காக்கப்படுகிறது. நச்சு எச்சம் இல்லாத உணவு கிடைக்கும்.

சாகுபடி நிலத்தை உழவு செய்வது சிறந்த முறையாகும். இதனால் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைக்கப்பட்டிருக்கும் பூச்சியின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்புழுக்கள் போன்றவைகள் அழிக்கப்படுகின்றன. நிலத்தில் நீர் பிடிப்பு தன்மை காக்கப்படுகின்றது.

கூட்டுப்புழுக்கள் 4-thamil.co.ukகூட்டுப்புழுக்கள்3-thamil.co.ukகூட்டுப்புழுக்கள் 1-thamil.co.ukகூட்டுப்புழுக்கள்2-thamil.co.uk