புற்றுநோயை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை

கறி வேப்பிலை-thamil.co.ukஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் விட்டமின் A, B, C,  கல்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

கறிவேப்பிலை, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சயன்டிஸ்ட் ஆப்சிசையரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.

இந்நிறுவனம் மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையவை மட்டுமல்ல, அவை பல மருத்துவ குணங்களை கொண்டவை என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்நிறுவனத் தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக், கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்சிடன்டாக இயங்குகிறது என்கிறார்.

இது புற்றுநோய், இதய நோய் அபாயங்களைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபகசக்தி பெருகுகிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை நுரையீரல், இதயம், கண் நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள விவசாய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெய்யில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி, தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. நரைமுடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அதிகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரைமுடி போயே போ‌ச்சு. இது அனுபவ ரீ‌தியாக‌க் க‌ண்ட உண்டமை. கண்பார்வை குறைவு ஏற்படாது.

கறிவேப்பிலையை அரைத்துச் சாப்பிட்டால் நுரையீரல், இதயம் சம்பந்தப்பட்ட, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது மேற்கண்ட ஆஸ்திரேலிய நிறுவனம்.

கறிவேப்பிலைதிருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழகத்தில், கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்கப் பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி மருத்துவக் குழுவினர் ஆராய்ந்தனர். அதில், கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கின்றன என்பது தெரியவந்தது. மேலும் free radicals ‘பிரிரேடிக்கல்ஸ்’ நிலை ஏற்படுவதையும் கறிவேப்பிலை தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கப்படுகிறது. கலங்களிலுள்ள புரோட்டீன் அழிகிறது. விளைவு, புற்றுநோய், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிக்கும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலைகளையும், மாலையில் 10 இலைகளையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாகக் குறைத்துவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமானது குறைக்கப்படும், சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவைப் பெருக்கவும் உதவுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும்.

கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு ஆகியவை மருத்துவத்திற்கு சிறந்தது. கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.

ஒரு பிடி கறிவேப்பிலை சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறும் வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும்.

கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்.

கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும்.

கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும். கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பத்தை அகற்றி சுரத்தைக் குணப்படுத்தும்.

-dinakaran.com