தானங்களால் ஏற்படும் பலன்கள்

தானம்-thamil.co.ukதானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு.அதாவது தர்மம் என்பது தனக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவருக்கு கூறி நல்வழிக்காட்டி அவரை வாழ்வில் உயர்த்துவது தர்மம் ஆகும்.தானம் என்பது தனக்கு தேவைக்கு மீறிய செல்வங்களை இலவசமாக கொடுப்பது.

1.ஆடைகள் தானம்:
ஆயுள் விருத்தியாகும்.புத்திர தோசம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:
புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

3.நெய்தானம்:
பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.

4.தீப தானம்:
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை,எளியவர்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

5.அரிசிதானம்:
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது வாழ்வில் நலிந்தவர்களுக்குஅரிசி தானம் செய்யவேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான், நாம் தானம் செய்த பலன் நமக்கு உணடாகும்.

6.கம்பளி-பருத்தி தானம்:
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.