கொன்றை

மூலிகையின் பெயர்  – கொன்றை
தாவரப்பெயர் – CASSIA FISTULA
தாவரக்குடும்பம் – CAESALPINIACEAE.
வகைகள் – புலிநகக்கொன்றை, மயில்க்கொன்றை, சரக்கொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, சிறுகொன்றை, மந்தாரக் கொன்றை, முட்கொன்றை.
வேறு பெயர்கள் – பெருங்கொன்றை,சிறுகொன்றை.
பயன்தரும் பாகங்கள் – பட்டை, வேர், பூ, காய்.

கொன்றை-thamil.co.ukவளரியல்பு – கொன்றை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப்படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. பல கிளைகள் விடும், ஒவ்வொரு கிளையிலும் பல சிறு கிளைகள் தோன்றி அதில் கொத்துக் கொத்தாக இலைக் கொத்துக்கள் தோன்றும், இதன் இலை நெல்லி இலை போல இருக்கும். ஒரே காம்பில் பல இலைகள் ஒன்றுக்கொன்று எதிர் வரிசையாகத் தோன்றும். ஒவ்வொரு இணுக்கு சேருமிடத்திலும் ஒரு சிறு கிளை தோன்றி, அதில் பல நரம்புகள் தோன்றி அந்த நரம்புகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் விட்டு சிகப்பு நிறப் பூக்கள் மலரும். இந்த பூ ஆவாரம்பூவின் வடிவத்திலிருக்கும். இடையிடையே இலேசான மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். பூவின் நடுவில் 5-6 மகரந்த நரம்புகள் வெளியே நீண்டிருக்கும். நீண்ட உருளை வடிவக் காய்களையும், உடைய இலையுதிர் மரம். இது விதை மூலம் இனப்பெருக்கம் ஆகின்றது.

மருத்துவப் பயன்கள்
மரம், நோய் நீக்கி உடல் தேற்றும். காய்ச்சல் தணிக்கும் மலமிளக்கும் வாந்தியுண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாய்வகற்றும் நுண்புழுக் கொல்லும் மலமிளக்கும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும்.

வேர்ப்பட்டை 20 கிராம் பஞ்சு போல் நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 5 கிராம் திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும் மாலையில் பாதியும் சாப்பிட காய்ச்சல் தணியும் இதய நோய் குணமாகும். நீண்ட நாள் சாப்பிட மேக நோய் புண்கள், கணுச்சூலை தீரும். ஒரு முறை மலம் கழியுமாறு அளவை திட்டப்படுத்திக் கொள்ள வேண்டும்.

10 கிராம் சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. ஆகக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிட வயிற்ற்றுப் புழுக்கள் கழிந்து நோயகலும். நீடித்துச் சாபிட மது மேகம் தீரும்.

பூவை வதக்கித் துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகலும்.

காயின் மேலுள்ள ஓட்டைப் பொடித்துக் குங்கமப்பூ சர்க்கரை சமன் கலந்து பன்னீரில் அரைத்து பெரிய பட்டாணி அளவாய் மாத்திரை செய்து உலர்த்திக் கொண்டு மகப்பேற்றின்போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் 10 நிமிடத்திற்கு 1 மாத்திரை கொடுக்க இறந்த குழந்தையை வெளித்தள்ளும்.

சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவுப் பாகங்களில் பயன்படுத்த மலச்சிக்கல் அறும்.

கொன்றைப் புளியை நீரில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப்போட கணுச்சூலை, வீக்கம் ஆகியவை தீரும்.

சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சமனளவு அரைத்துக் கொட்டைப் பாக்களவு பாலில் கலக்கி உண்டு வந்தால் வெட்டை, காமாலை, பாண்டு ஆகியவை தீரும்.

கொழுந்தை அவித்துப் பிழிந்த சாற்றில் சர்க்கரை கலந்து 200 மி.லி. கொடுக்க வயிற்றிலுள்ள நுண்புழுக்கள், திமிர் பூச்சிகள் அகலும்.

பூவை எலுமிச்சைச்சாறு சேர்த்து அரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளிக்கச் சொறி, கரப்பான், தேமல் ஆகியவை தீரும்.

கொன்றை மரத்தின் வேர்ப்பட்டையைக் கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, ஒரு கை பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகாக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலையாகக் கொடுத்து வந்தால் வாய்வு சம்பந்த மான வலிகள், வாத சம்பந்தமான வலிகள் உடலில் தோன்றும் அரிப்பு, சிறு சிரங்குகள், மேக கிரணம் இவைகள் படிப்படியாக மறைந்து விடும்.

கொன்றை மரத்தின் பட்டையை நறுக்கி, அதில் ஒரு கைப் படியளவும், தூதுவளைக் கொடியின் இலை, பூ, காய், வேர் இவைகளில் வகைக்கு 5 கிராம் வீதமும் எடுத்து அதையும் பொடியாக நறுக்கி, வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு. மொச்சைக் கொட்டையளவு தூளைஎடுத்து, ஒரு டம்ளர் காச்சிய பசும் பாலில் போட்டுக் கலந்து, காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் சுவாசகாசம் படிப்படியாக் குறைந்து அறவே நீங்கி விடும்.

கொன்றைப் பூக்களில் கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு 100 கிராம் நல்லெண்ணையை விட்டு நன்றாகக் காயவைத்து பூக்கள் சிவந்து வரும் சமயம் இறக்கி, எண்ணணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காது சம்பந்தமான ஏற்படும் கோளாறுகளுக்கு, காலை மாலை ஒரு காதுக்கு இரண்டு துளி வீதம் விட்டு பஞ்சடைத்து வந்தால், காது சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.

இலைகளை கண் இமைகளின் மேல் இரவு படுக்குமுன் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்துவிட வேண்டும் இந்த விதமாக ஐந்து நாட்கள் கட்டி வந்தால் கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.

-மூலிகைவளம்

அழகு மிளிரச்செய்யும் கொன்றை 

கொன்றை மரம்-thamil.co.ukதங்க நிற மலர்களுடைய கொன்றை மங்களகரமான மரம். திருத்துறையூர், திருப்பந்தணை நல்லூர், திருஅச்சிறுபாக்கம், திருக்கோவலூர் முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை (Golden Shower Tree) விளங்குகிறது. வன்னிக்கு அடுத்தபடியாக அதிகமான திருக்கோயில்களில் தலமரமாக அமைந்துள்ளது. சமஸ்கிருத மொழியில் கொன்றையின் பெயர் குண்டலினி ஆகும். தங்க மலர்களில் சுருண்டு இருக்கும் மகரந்த்தாள்கள் பாம்பாக உருவமுள்ள குண்டலினி சக்தியின் இருப்பிடம் என்று கருதப்படுகிறது.

ஏப்ரல் மாதம் முழுவதும் மரத்தில் கொத்துக்கொத்தாக மஞ்சள் வண்ணத்தில் பூத்திருக்கும் கொன்றை மலர்கள் பார்க்க பார்க்க அழகு மிளிரும். இதற்கு சித்திரைக் கனிப்பூ என்ற பெயரும் உண்டு. இந்தியாவில் தோன்றிய கொன்றை மரம் தற்போது ஸ்ரீலங்கா, மொரிசியஸ், தென்ஆப்ரிக்கா, பிரேசில், போன்ற தேசங்களிலும் காணப்படுகிறது. நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரமாகும்.

தமிழகமெங்கும் இயற்கையாக வளர்கிறது. இதன் வேர், பட்டை, இலைகள், விதைகள், மருத்துவ குணம் கொண்டவை. பழம் பழுத்துவர விதைகள் ஒன்றைவிட்டு ஒன்றாக பிரிந்து விடும். ஒரு செல் மாத்திரம் இருந்த பழம் பல செல்களாகும். கொன்றை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படும்.

கொன்றை இலை-thamil.co.ukசெயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்-  கொன்றையில் டேனின், ஆந்தராகுவினோன், ரெயின், எமோடின், ஸ்டிராய்டுகள், பிசின், எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு போன்றவை காணப்படுகின்றன.

தோல்நோய்களுக்கு மருந்து : இதன் சமஸ்கிருத பெயரின்படி, நோய்களை தீர்க்கும் குணம் உடையது. 3000 வருடங்களுக்கு முன்பே, சரகராலும், சுச்ரூதாவாலும் பல தோல் குஷ்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. கொன்றை பழக்கதுப்பை 12 வகையான மருந்தாக தயாரிக்கும் விதத்தை சரகர் கூறியிருக்கிறார். சரும நோய்களுக்கு இந்த மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார் தன்வந்திரி. நிகண்டு என்னும் நூலில் தோல்வியாதிகள், ஜூரம் இவற்றுக்கு மருந்தாக கொன்றை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் இலைகள் ஜூரத்தை குறைக்கவும், பூக்களும் விதைகளும் பித்தத்தையும், கபத்தையும் குறைக்கவும், பழக்கதுப்பு, பசியை உண்டாக்கும் என்றும் ப்ருஹத் நிகண்டு ரத்னாகரா தெரிவிக்கிறது.

ராஜமரமான கொன்றை : இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம். கொன்றை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மில்லி கிராம் எடுத்து சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி மலத்துடன் வெளியேறும். கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.

கொன்றை-thamil.co.ukஇதேபோல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இத்தனை பலன்களைத் தரும் கொன்றை மரம் ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.

கொன்றை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும்.

பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க மலத்தை இளக்கி வெளியேற்றும்.

பாலுடன் பூவைக்கலந்து காய்ச்சி உண்ண உள்உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்குப் பலன்தரும்.

கொன்றை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.

மரப்பட்டையின் கசாயம் 60 மிலி தேன் 5 மிலி கலந்து ஒரு நாளைக்கு இருவேளை 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால் அதிக உடல்பருமன் குறையும். மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும் .

கிருமி நாசினி : கொன்றை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி. பறிக்கப்பட்ட பழங்கள் வெய்யிலில் காயவைத்து பிறகு பழக்கோது பிரிக்கப்பட்டு காற்றுப்புகாத குப்பிகளில் அடைத்து வைக்கப்படும். பின்னர் மண்ணடியில் 7 நாள் வைக்கப்படுகின்றன.

பழக்கதுப்பு சிறப்பான கிருமிநாசினி. நுண்ணுயிர் நாசினி. பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கும் சக்தி உடையது. இதயத்திற்கு டானிக், நீரிழிவு, மூட்டுவலி, மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றிர்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. கொன்றையின் மற்ற பாகங்களை விட, பழக்கதுப்பு, சிறந்த கிருமி நாசினி. ஃபங்கஸ் எனப்படும் நுண்ணுயிர்களுக்கு கொன்னை மர வேர் எதிரி.

வேர்ப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் பால், மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், சோரியாஸிஸ்க்கும் நல்ல மருந்து. தோலில் அரிப்பு, நமைச்சல் இவற்றை போக்கும்.