தாழை மரம் தாயின் காப்பகம்

தாழை-thamil.co.ukஅரம்பை / புலவுத் தாழை / தாழை மரம் (Pandanus Odoratissimus) நீர் தெளிக்காமல் நீரோடைகளில், ஆறுகளில், கேட்பாரின்றிப் புதராக வளர்ந்து இன்மணம் பரப்புவதுடன் மலடு நீங்க மருத்துவம் தருகிறது. இதனை ஆங்கிலத்தில் Fragrant Screw pine இப்படியும் அழைப்பர். வடக்கில் வேரைப் பயன்படுத்துகின்றனர். தாழைமரத்தின் வேரை – வேர்க்கிழங்கை எடுத்துவந்து அதை அரைத்துப் பசும்பாலில் (நாட்டுப்பசு) கலந்து வடிகட்டாமலேயே தரலாம். தாய்மை ஏற்படுவது மட்டுமல்ல ஏற்கனவே உருவான கரு கலையும் ஆபத்தையும் தடுக்குமாம்.

தாழம்பூவுக்குச் சற்று வணிக முக்கியத்துவம் இருப்பினும் தாழையை நாடும் மக்கள் குறைவு. மருத்துவக் களஞ்சியத்தில் தாழையானது, வாதம், கபம், மேகம் சார்ந்த பிணியகற்றும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, முற்காலத்தில் பிரமேகம் என்ற நோய் வந்தால் தாழை வைத்தியம் செய்யப்படும். மேகநோய் என்பது உடல் வெப்பம் ஏறிச் சூட்டால் ஏற்படும் பல பிரச்சினைகள். உடல் ரணமாகும். இப்படி வரும்போது உப்பில்லாப் பத்தியம் இருந்து கொண்டு பின்வரும் வைத்தியம் செய்யலாம்.

Fragrant Screw pineவெக்கை தீவிரமாயிருந்தால் தாழங்கிழங்கு 2 தோலா எடைக்கு (ஒரு வெள்ளி ரூபாய் எடை) நறுக்கி அரைத்துச் சீனி சேர்த்து ஜூஸை ஒரு வாரம் வெறும் வயிற்றில் தரலாம் அல்லது தாழம்பூவையும் இதே அளவு கொழுந்தாக அரைத்துச் சீனியுடன் சீரகம் சேர்த்துத் தரலாம்.

இரண்டு தாழம்பூவைக் குறுக்கே அரிந்து ஒரு லிட்டர் நீரில், ஒரு நாள் ஊறல் போட்டுச் சாற்றைக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு கிலோ சீனாக் கற்கண்டு கலந்து தேன் பதமாகக் காய்ச்சி சிரப் செய்துகொண்டு சற்று நீர் கலந்து குடித்துவந்தாலும் வெப்பம் அகலும்.

தாழம்பூ மூக்குப்பொடி, தாழம்பூ பீடி எல்லாம் நாசி, தொண்டை நோய் மருந்து என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

kewra waterதாழையின் பரவலான பயன், தாழம்பூ சென்ட். இப்போது பாரீஸிலிருந்து விதம்விதமான உயர்ந்த ரக சென்டுகள் வருகின்றன.

தாழையில் சிவப்பு வெள்ளை என இரண்டு வகை உண்டு. இரண்டிலும் மணம் ஒன்றே. ஆடி, ஆவணியில் வெண் தாழம்பூ மடல் விரிக்கும். செந்தாழம்பூ என்றால் செக்கச் செவேலென்று இருக்காது. மஞ்சள் நிறத்தைத்தான் செந்தாழம்பூ என்று கூறுகின்றனர். இது பனிக்காலம் தாண்டி மடல் விரிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் செந்தாழம்பூ கிட்டும்.

தாழம்பூ தைலம் நல்லெண்ணெய்யில் காய்ச்சி எடுக்கப்படுகிறது. இது தலைவலிக்கு நல்லது. இயற்கை வழியில் தாழம்பூ சென்ட் எடுக்கலாம்.

தாழ‌ம்பூவை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்ச வே‌ண்டு‌ம். ‌நீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்து பூ‌வித‌ழ்க‌ள் வத‌ங்‌கிய ‌பி‌ன் வடிக‌ட்டி, தேவையான ச‌ர்‌க்கரை கூ‌ட்டி பாகுபதமா‌ய் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். இதுவே தாழ‌ம்பு மண‌ப்பாகு.

தாழம்பூ-thamil.co.ukதாழை--thamil.co.ukஇதனை ஒரு ‌தே‌க்கர‌ண்டி அளவு ‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருவேளை குடி‌த்து வர உட‌ல் உ‌ஷ்ண‌த்தை‌த் த‌ணி‌க்கு‌ம். இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்த நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியாவதை‌த் தடு‌க்கு‌ம்.

தாழ‌ம்பூ மண‌ப்பா‌கினை வெ‌யி‌ல் கால‌ங்க‌ளி‌ல் ‌தினச‌ரி உபயோ‌கி‌த்து வர அ‌ம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.

இதே‌போ‌ன்ற மண‌ப்பாகை தாழ‌ம்வே‌ரினை‌ப் பய‌ன்படு‌த்‌தி செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்டு உ‌ட்கொ‌ண்டு வர சொ‌றி, ‌சிர‌ங்கு, ‌தினவு, தோ‌ல் நோ‌ய்க‌ள் குணமாகு‌ம்.

உருவமும் குணமும்

“மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்.”

(பதவுரை)
தாழை மடல் பெரிது – தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது,
மகிழ் கந்தம் இனிது – மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே (தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது,
கடல் பெரிது – சமுத்திரம் பெரிதாயிருக்கிறது,
மண் நீரும் ஆகாது – ஆயினும் அதிலுள்ள நீர் (உடம்பழுக்கைக்) கழுவுவதற்குத் தக்க நீருமாகாது;
அதன் அருகு சிற்றூறல் – அதன் பக்கத்தே சிறிய மணற்குழியிற் சுரக்கும் ஊற்றுநீர்,
உண் நீரும் ஆகும் – குடிக்கத்தக்க நீருமாகும்;
(ஆதலினால்) உடல் சிறியர் என்று இருக்கவேண்டா – (ஒருவரை) உருவத்தினாலே சிறியவரென்று (மதியாமல்) இருக்கவேண்டா.

மண்ணுதல் – கழுவுதல்,
உருவத்தாற் பெரியவர் குணத்தாற் சிறியவராதலும் உருவத்தாற் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு.

தாழம்பூ மகிமை

தாழம்பூ மகிமை.

-tamilvu.org
-koodal.com
-nhdcindia.blogspot.co.uk

தொகுப்பு – thamil.co.uk