ஆவாரை

ஆவாரை-thamil.co.ukமூலிகையின் பெயர் – ஆவாரை
தாவரப்பெயர் – CACSIA AURICULATA
தாவரக்குடும்பம் – CAESALPINIACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர்.

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ”
“சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ
“ரெல்லா மொழிக்கு மெருவகற்று – மெல்லவச
மாவாரைப்பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே
யாவாரை மூலியது.”

“மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்
எவாரைக் கண்மடமாதோ?”

நிலவாகை என்ற நிலஆவாரை ஒருமொத்த மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். நமது உடலில் இருக்கும் பல மில்லியன் கலங்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கீழை நாட்டு வைத்திய தத்துவம். இது வெற்றியடைந்தால் கலங்களுக்கு அழிவில்லை,என்றும் இளமைதான்.

ஆவாரை பூ-thamil.co.uk

வளரியல்பு – ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை நிலங்களும் ஏற்றவை. எல்லா இடங்களிலும் தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள்பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களை உடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களை உடையது. மதிப்புத் தெரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூப்பூத்து மண்டிக் கிடக்கிறது. இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது.

இதன் முக்கிய வேதியப் பொருட்கள் – மரபட்டையில் டானின்கள் உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன.

மருத்துவப் பயன்கள்

“ சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ
ரெல்லா மொழிக்கு மெருவகற்று – மெல்லவச
மாவாரைப் பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே
யாவாரை மூலியது.”

ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.

முறை -அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும் கொடுப்பதுண்டு.

பூச்சூரணத்தையோ, பூவையோ குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சல் குணமாகும்.

20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.

ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல்படும். சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து.

ஆவாரை வேர் இலைகள், பூ, கிளைகள், காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.

இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவாரம் தேனீர் தயாரித்து அருந்தலாம். இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனுடன் நாவற்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன்படுத்தலாம். அதிக பயன் தரும்.

உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும். சிறந்த தோல் காப்பான். தொடர்ந்து பூசி குளித்து வர உடல் தங்கம் போல் ஆகும் .

ஆவாரை--thamil.co.ukஆவாரையின் பஞ்சங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுவதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல் ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.

பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம்.

இதன் பூவை இனிப்புடன் கிளறி அல்வா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், குறி எரிச்சல் நீங்கும். தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று, நோயின் பிடியில் இருந்து தப்பி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

-mooligaivazam