புற்றுநோயை குணப்படுத்தும் உணவுகள்

புற்றுநோய் கலங்கள்-thamil.co.ukகலங்களுக்குள் உள்ள நிறமூர்த்தங்களில் உண்டாகும் பாதிப்புகள் (mutation) புற்றுநோய் கலங்கள் உருவாக காரணம். கதிரியக்கத்துக்கு ஆட்படுதல் புகையிலைப் பொருட்களால் உண்டாகும்புண் போன்றவற்றாலும் கலங்கள் பாதிக்கப் படுகின்றன. ஓரளவுக்கு இந்த பாதிப்புகளை கலங்களே திருத்த முயன்றாலும் அதிக அளவில் கலங்கள் தாக்கப்படும் போது கட்டுப்பாடின்றி புற்றுநோய் கலங்கள் பெருகுகின்றன.

நாம் உண்ணும் சாதாரண உணவுப்பொருட்களில் சில புற்றுநோயை  துரத்தியடிக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனைக் கொய்யா/வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் avocado வில் அபரிமிதமாக காணப்படும் glutathione ஒரு சக்திவாய்ந்த antioxidant. இது புற்றுநோய் உருவாக்கும் free radicals நிறைந்த சிலவகை கெட்ட கொழுப்புகள் குடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. அதேவேளை இரத்த கொலெஸ்ட்ராலையும் குறைக்கிறது. ஈரலை பாதுகாத்து ஈரல் புற்றுநோயையும் தடுக்கிறது.

புரோக்கலி (broccoli) , முட்டைக்கோசு, பூக்கோசு ஆகியவற்றில் காணப்படும் indole-3-carbinol மார்பக புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதில் உள்ள sulforaphane மற்ற சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. மேலும் அதில் உள்ள lutein மற்றும் zeaxanthin என்ற antioxidant கள் புராஸ்டேட் புற்றுநோயை குறைக்கிறது.

கரட்டில் ஏராளமான beta carotene காணப்படுகிறது. இது எல்லா வகை புற்றுநோய்களின் தீவிரத்தை குறைத்து விடுகிறது. ஆனால் அதிக அளவில் அதாவது தினமும் 2 கிலோவிற்கு மேல் காரட் உண்பது கான்சரை உருவாக்கக் கூடும். முக்கியமாக கரட்டை சமைக்ககூடாது.

மிளகாயில் காணப்படும் capsaicin குடல் புற்றுநோய்க்கு காரணமான nitrosamines என்ற பொருளை செயலிழக்க செய்து குடல் புற்று அபாயத்தை குறைக்கிறது.

அத்திப்பழத்தில் காணப்படும் ஒரு வகை benzaldehyde சில கட்டிகளை சுருங்க செய்ய உதவும் என ஜப்பானிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் அத்திப்பழத்தில்(Fig) காணப்படும் விட்டமின் A, விட்டமின் C, கல்சியம், மக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை பசியை குறைத்து உடல் எடையை குறைக்கிறது. அத்திப்பழச்சாறு பக்டீரியாக்களை கொல்லும் தன்மையுள்ளது.

Flax எனப்படும் அல்லி விதைகளில் காணப்படும் lignans ஒரு antioxidant போல செயல்பட்டு புற்றுநோயை மிதப்படுத்துகிறது. மேலும் அதில் கானப்படும் omega-3 fatty acidகள் colon cancer மற்றும் இதயநோயிலிருந்து பாதுகாக்கிறது.

பூண்டில் காணப்படும் allium compounds (dialyl sulfides)கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயை எதிர்க்கிறது. மேலும் புற்றுநோய் உருவாக்கும் carcinogenகள் கலங்களுக்குள் ஊடுருவுவதை தடுக்கிறது. தினசரி உணவில் தவறாமல் பூண்டு சேர்த்து வருவது குடல் புற்று அபாயத்தை வெகுவாக குறைக்கிறது. குடல்புண் உருவாக்கும் Helicobacter pylori என்ற பக்டீரியாவிற்கு எதிராக பூண்டு செயல்படுகிறது.

ஆரஞ்சு, எலுமிச்சை, போன்ற சிட்ரஸ் பழவகைகளில் காணப்படும் monoterpeneகள் புற்றுநோய் உருவாக்கும் கார்சினொஜென்களை ஒழிப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இதில் காணப்படும் Iimonene புற்று கலங்களை ஒழிக்கும் lymphocytes போன்ற நோயெதிர்ப்பு கலங்களை தூண்டுகிறது.

திராட்சையில் காணப்படும் bioflavonoid ஒரு சக்தி வாய்ந்த ஆன்டஆக்ஸிடென்ட். இது புற்றுநோயைத் தடுக்க வல்லது. மேலும் அதில் உள்ள resveratrol, ellagic acid ஆகியவை புற்றுநோய் கலங்கள் வளர்வதை தூண்டும் நொதிகளை தடுக்கிறது.

ஆல்கஹால் இல்லாத சிவப்பு ஒயினில் காணப்படும் polyphenolகள் பலவகை புற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் பலவகை ஒயினில் காணப்படும் ஆல்கஹாலும் , sulfites களும் உடல் நலத்திற்கு தீது செய்யக்கூடும்.

பச்சைக் கீரைகள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது குடல்புற்றை குறைக்கிறது.

சில வகை உணவுக் காளான்களில் (mushrooms) கானப்படும் polysaccharideகள் குறிப்பாக Lentinan உடலின் நோயெதிர்ப்பு சக்தி வளரத் தேவையானது. காளான்களில் Beta Glucan அதிகம் உள்ளது. மேலும் அதில் காணப்படும் lectin புற்றுநோய் கலங்களைத் தாக்கி அவை பெருகாமல் தடுக்கிறது. காளான்கள் உடலில் interferon உற்பத்தியை தூண்டுகிறது.

பப்பாளியில் காணப்படும் விட்டமின் C ஒரு antioxidant ஆக செயல்பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் nitrosamine எனப்படும் புற்றுநோய் காரணிகள் குடலால் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. மேலும் பப்பாளியில் உள்ள folic acid, சிலவகை புற்று நோய்களையும் cervical dysplasia வையும் மிதப்படுத்திகிறது.

Raspberriesகள் குறிப்பாக Black raspberriesகளில் அதிகளவு புற்றுநோய் எதிர்ப்பு antioxidantsகள் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

Rosemary extract ல் காணப்படும் carnosol மார்பகப் புற்று மற்றும் தோல் கட்டிகளை தடுக்கிறது. மேலும்  நொதிகளின் நச்சுத்தன்மையை நீக்குகிறது.

கடல் தாவர உணவுகளில் காணப்படும் beta-carotene, protein, vitamin B12, fiber மற்றும் chlorophylones மார்பகப் புற்றுக்கு எதிராக செயல்படுகிறது.

டோஃபு போன்ற சோயா உணவுகளில் பலவகை phytoestrogensகாணப்படுகிறது. இது மார்பகபுற்று மற்றும் மூலநோயை தடுக்கிறது.ஆனால் மித மிஞ்சிய அளவு சோயா உணவு ஹார்மோன்கள் சமநிலையை பாதித்து புற்று நோயை தூண்டவும் கூடும்.

சர்கரை வள்ளிக்கிழங்கு அல்லது சீனிக்கிழங்கில் பலவகை புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன.

Green Tea மற்றும் Black teaயில் உள்ள polyphenols (catechins) என்ற antioxidant புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது.

தக்காளி, தர்பூசனியில் உள்ள lycopene, எனும் antioxidant புற்றுநோய்க்கு காரணமான free radical களை தாக்கி அழிக்கிறது.

மஞ்சளுக்கு புற்றுநோய் உருவாக காரணமான புண்களை ஆற்றும் சக்தி உண்டு என நம்பப்படுகிறது.