நோயை விரட்டும் இலைச்சாறுகள்

இலைச்சாறுகள்-thamil.co.ukஉடல்நல ஆரோக்கிய குறிப்புகள்

அருகம்புல் சாறு: எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது போலவும் உடலுக்கு புது இரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சக்தியை அளிக்கும். இரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உடலில் தேங்கியுள்ள அசுத்தநீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது. மலச்சிக்களை தீர்க்கும். ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும்.

இரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். ஆஸ்துமா இரத்த அழுத்தத்தை குறைக்கும் தாய்பாலை அதிகரிக்க செய்யும் உடலில் நச்சுத்தன்மையை அகற்றும் கொழுப்பு சத்தை குறைக்கும்.

துளசி இலைச்சாறு: காய்ச்சல், இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள் காதுவலி ஆகியவற்றறை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்யும்.

தூதுவளை இலைச்சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும். வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு: உடல்நிறம் பொலிவு பெறும். கண்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.

பொண்ணாங்காணி சாறு: உடலுக்கு வலிமை ஊட்டும். பொன்போல் உடல் பளபளப்பாகும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல்சூடு குறையும். பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள், நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும் இதயம் வலுவாகும்.

வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரிழிவு குறையும். வயிற்று புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்தபுத்தி மாறும். மஞ்சள் காமாலையை போக்கும். காலாரா குறையும்.

புதினா இலைச்சாறு: வாய் புண், வயிறு, குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். வெண்குஷ்டம் குறையும்.

நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள், குறையும். நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய் குறையும். உடல் பலமடையும்.

வாழைத்தண்டு சாறு: சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். இரத்த அழுத்தம் தொந்தி, அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும். உடல், கை, கால் வீக்கத்தை குறைக்கும். இரத்தம் சுத்தமாகும்.

கேரட் சாறு: கண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள், பல் நோய்கள் குறையும். அமிலத்தன்மையை குறைக்கும்.

அரச இலைச்சாறு: மலச்சிக்கல், உடல்சூடு, கர்ப்பப்பை நோய்களை குறைக்கும். காம உணர்ச்சியை தூண்டச் செய்யும்.

கொத்தமல்லி சாறு: பசியை தூண்டும். பித்தம், வாத நோய், காய்ச்சல் குறையும். மூலம், சளி, இருமல் குறையும்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும். நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.

வெற்றிலைச் சாறு: வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

வேலிப்பருத்தி சாறு: சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.

இஞ்சி சாறு : நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது. இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.

தண்­ணீர் விட்டான் கிழங்கு சாறு : தண்ணீ­ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும். பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வெள்ளைப் பூண்டு சாறு : வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.

இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!

-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்