மன அழுத்தம் விலக

மன அழுத்தம்-thamil.co.ukமன அழுத்தம் விலக ஆசனப் பயிற்சிகள்

மனம் விரிந்து குவிந்தது மாதவ
மனம் விரிந்து குவிந்தது வாயு
மனம் விரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம் விரைந்துரை மாண்டது முத்தியே.
மனம் நிம்மதி, மன அமைதி பெற ஒரு சில யோகப் பயிற்சிகள், பிராணாயமாப் பயிற்சிகள் குறிப்பாக சாந்தி ஆசனம் அத்துடன் நெற்றி ஈரத்துணிப்பட்டி, வயிற்று ஈரத்துணிப் பட்டி செய்திட மிக மிக நல்ல பலனை இலகுவாக, சுலபமாக செலவில்லாமல் செய்யலாம். உடல் களைத்தும், சோர்வாகவும் இருக்கும் சமயம் 10 நிமிடம் செய்தால் இரண்டு மணி நேரம் தூங்கியதன் பலன கிட்டி நாம் நல்ல புத்துணர்ச்சி பெறலாம்.

அற்புதமான காற்று, ஆகாயம் என்ற இரு பஞ்ச பூதங்கள் இணைந்த சிகிச்சையாகவும் உள்ளது. அனைவரும் தினமும் அவசியம் செய்யவேண்டும்.

சாந்தி ஆசனம்-thamil.co.ukசாந்தி ஆசனம் செய்முறை:
காலை, மாலை செய்யலாம். உணவுக்கு முன் செய்யலாம். களைத்த போது மன அழுத்தம், இரத்த அழுத்தம் மிகும் சமயம் செய்யலாம். காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்யலாம். வெறும் தரையில் செய்யாமல் விரிப்பு, பாய் மேல் செய்யலாம். படுத்தநிலை ஆசனம் எளிய குறைந்த உடையுடன் செய்யலாம்.

பாயின் மேல் அமர்ந்து கால்களை நீட்டவும். இருகைகளையும் இடப்புறம் வைத்திடவும். அதே நிலையில் மெதுவாக இடது கையை பின்னால் இறக்கி இடது புறமாக ஒருக்களித்துப் படுக்கவும். பின் உடலைத் திருப்பி மல்லாக்கப் படுக்க வேண்டும். முகம் வானம், கூரையைப் பார்த்த நிலை, கால்கள் கைகள் உடலைத் தொடாதவாறு ஒரு அடி இடைவெளியில் இயல்பாக விரிந்து இருக்கலாம். உள்ளங்கை வானத்தைப் பார்த்த நிலை. கண் மூடி இருக்கலாம். ஒவ்வொரு உறுப்புகளும் அற்புதமாக ஓய்வு பெறும். கால் முதல் உச்சந்தலை வரை 60 புள்ளிகள் தயார் செய்து ஒவ்வொரு புள்ளியாக மூன்று நிமிடம் வரை நினைவுப் பயணம் செய்ய வேண்டும். இதுபோல் 7 முறை செய்ய வேண்டும்.

தலையணை இல்லாமல் படுத்துப் பழகவும். சிலருக்கு தூக்கம் வரலாம். அதனால் தவறில்லை. பலர் இந்நிலையில் ஆழ்மனது நிலை சென்று வருவர். தன்னை மறந்த நிலை, உயர்ந்த நிலைக்கு செல்லும் வல்லமை பெறுவர். இது பார்ப்பதற்கு எளிதான ஆசனம் எனினும் பொறுமையாக, இயல்பாக தனித்து செய்திட சிறிது சிரமம் இருக்கும்.

தியானத்தை செய்ய இவ்வாசன நிலைமிக நல்ல நிலை. கோபம் உடன் மட்டுப்படும். அதிக குருதி அழுத்தம் குளிர்ச்சி பெறும். தூங்கியும் தூங்காத நிலை கிட்டும். இவ்வாசனம் செய்யும் சமயம் ஒரு நிமிட நேரம் கூட ஒரு மணி நேரம் ஆனது போல் இருக்கும்.

முதுகுத்தண்டு தரையில் நன்றாகப் படிந்து ஓய்வு தர வேண்டும். அதிக குருதி அழுத்தம், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இதுவே மருந்து. இதைச் செய்ய செய்ய தூக்க மாத்திரைகளைக் குறைத்திடலாம்.

சாந்தி ஆசனம் முடியும் சமயம் ஓம் சாந்தி மூன்று முறை சொல்லி மறுபடி ஒருக்களித்துப் படுத்து பின் மெதுவாக அமர்ந்து எழ வேண்டும்.

பவன முக்தாசனம், கைவிரல்கள், கால் விரல்கள் மடக்கும் பயிற்சிகள், கழுத்துபயிற்சிகள், விருச்சிகாசனம், கபாலபதி, சீத்களி, பத்மாசனம், வஜ்ராசனம், எளிய நாடி சுத்திகள் அனைத்தும் மன அமைதி தரும் பயிற்சிகளாகும். இப்பயிற்சிகளை அறிய ஆசிரியரின் தினம் ஒரு யோகா நூலை நாடலாம்.

சாந்தி ஆசனம் செய்யும் முன் ஒரு டம்ளர் குடிநீர் அருந்தி செய்யவும். இத்துடன் நெற்றி, கண்ணிற்கு ஈரத்துணி பட்டியும் போடலாம்.சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பதமாம் அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூந்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யாரறி வரே.

சிரிப்பு-thamil.co.ukசிரிப்பு ஒரு மாமருந்து

பற்றற்றவர் பற்றி நின்ற பரம் பொருள்
கற்றற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
கற்றற்றவர் சுற்றி நின்ற என் சோதியைப்
பெற்றுற்றவர்கள் பிதற் றொழிந்தாரே.

உலகில் பிற உயிரினங்களுக்கும் பசி உணர்ச்சிகளும் உயிரை தக்க வைத்திடும், மற்றும் உயிரைக் காப்பாற்றும் உணர்ச்சிகளும் மிகுந்து இருந்தாலும் மனித இனம் அதையும் மீறி பேசும் வல்லமை பாடும் வல்லமை, சிரித்திடும் கலையை அறிந்திருக்கிறான்.

சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. மேலும் 14 தசைகள் மட்டும் அச்சமயம் இயங்குகின்றன. பாரா சிம்பதடிக் நரம்புகள் ஆட்சி புரிகின்றன. கோபம் உச்சநிலை அடையும் சமயம் 100க்கும் மேற்பட்ட தசைகள், நாடி நரம்புகள் வேகம் கொண்டு சிம்பதடிக் நரம்புகள் (தானியங்கி) முறுக்கேறி அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது உடலில் இரத்தத்தில் அமிலம் மிகுகிறது.
எனவே நாம் வாழ்வில் நமது உணவின் அங்கம் போல் சிரிப்புக்கு, சிரிப்புக் கலையைக் கற்பதற்கு, கடைப்பிடிக்க சில நிமிடங்களாவது ஒதுக்கிடலாம்.

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். துன்பம் வரும் சமயமும் துவளாமல் சிரிப்புடன் எதிர் கொள்வது ஓர் அரிய கலை. அற்புதக் கலை.சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும். கவலை அலைகள் பிறரை நம்மிடம் இருந்து விரட்டும்.சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி பாஸிடிவ் கரண்ட்டை பரப்பும்.

சோக அலைகள் நம்மைச்சுற்றி நெகடிவ் கரண்ட் தரும். எது தேவை முடிவு செய்யுங்கள். சிரிப்பதற்கு கூட பயிற்சிகள் தேவைப்படுகின்றன. ஐந்து நிமிடம் காலையில் சிரித்துப் பழகலாம்.

நீங்கள் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, சிரிக்கும் சமயம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்து வெளி வாருங்கள். மகிழ்சி அலைகளைப் பரப்புங்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர். சோக அலைகள், துக்க சுவடுகளை, கவலை எண்ணங்களை வீட்டில் புதையுங்கள். வெளி உலகில் வந்து பரப்பாதீர்கள் என அறிவுறுத்துகிறார். ஆனால் நாம் யாரைப் பார்த்தாலும் நமது சோகக் கதையை கவலை மூட்டையை துக்க வியாபாரத்தை ஆரம்பிக்கிறோம்.

இனி வாழ்வில் இன்று முதல் சிரிப்பு வியாபாரம் தொடங்கலாம். அதனால் ஒரு நஷ்டமும் இல்லை. இதில் லாபம் மட்டுமேகிட்டும். இது உறுதி. அதிலும் பிறர் மனம் புண்படாத நிலை சிரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். உயிர் எழுத்துக்களை அ முதல் ஓ வரை வரிசையாக தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகும்.
நம்மை சுற்றி நடக்கும் தவறான நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் நாம் சாட்சியாக நிற்கும் சமயம் பல உண்மைகள் புரியும். பல நேரம் நமது தேவையே பிறக்கு தேவையிருக்காது. மேலும் நம்மால் ஏற்பட்ட தொல்லையும் நம் உறவினர்கள், நண்பர்களுக்கு குறையலாம்.

நாம் பொருள் உதவிகளை கேட்காமல் கொடுக்க வேண்டும்.நமது ஆலோசனை உதவிகளை மூன்று முறை கேட்ட பிறகே கொடுக்க வேண்டும்.

இவ்விஷயத்தில் நாம் பல நேரம் மாறி தவறி விடுகிறோம்.சிரித்துப் பழக வேண்டும்.சிறுவர்களிடம் சிரித்துப் பழக வேண்டும்.சிறு குழந்தைகளைப் பார்த்து சிரித்துப் பழக வேண்டும்.சினம் அடையும் சமயம் சிரித்துப் பழக வேண்டும். செயல்படும் போது சிரித்த முகத்துடன் பழகவேண்டும்.சிரிப்பு நமது வாழ்வின் மூச்சாக வேண்டும்.சோகம் நமது ஆரோக்கியச் செல்வத்தைக் குறைக்கும். சிரிப்பு நமது ஆரோக்கியச் செல்வத்தை உயர்த்தும். ‘சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்ற சிந்தனையுடன் சிரிப்பு வியாபாரத்தை இன்று தொடங்குங்கள். முதலில் வீட்டு உறவினர்களிடம் சிரிப்பு வியாபாரத்தை தொடங்குகள். எளிய வியாபாரம், சிறப்பான உத்திகள். கோப அலைகள் அனைத்தையும் சிரிப்பு அலைகளாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அது ஒரு அற்புதக் கலை.

வாழ்க்கை வானம் உங்களுக்கு வசப்படும் தூரந்தான். துணிச்சலின் சொந்தக்காரராக மாறிடுவீர்கள்.மகிழ்சியின் பொக்கிஷதாரராக ஆகிவிடுவீர்கள். அதற்கான வழி தெரியவில்லையா?  இயற்கை உணவுகளும், கனி உணவுகளும் அப்பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டும். இயற்கை வாழ்வியல் வளமாக வழி நடத்திச் செல்லும். நாம் அதற்குத் தயாரா? சிரிக்கும்போது நைட்ரஜன் காற்று கூட நமக்கு சக்தி தரும். காற்றாக மாறும் வல்லமையைப் பெறுகிறோம். சிரித்துப் பழகுகிறவர்களுக்கு உணவின் தேவை குறைகிறது.

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்

மனமே பொக்கிஷம்
உங்களுக்குள் ஓர் தங்கச் சுரங்கம் , அற்புத பொக்கிஷம்
புத்தாகு மருந்து , பார்த்த
போதே பிணிகளைப் போக்கு மருந்து
புத்தரருந்துமருந்து , அனு
பான மும்தானம் பரம மருந்து.
– வள்ளலார்
ஒரு காந்தம் ஏற்றப்பட்ட இருமபுத்துண்டு அதன் எடையை விட 12 மடங்கு கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகிறது. ஆனால் காந்தசக்தி இழந்த இரும்பால் பறவையின் சிறகு எடையைக் கூட தூக்க இயலாது.

அது போல நம்மிடையே இருநிலை மனிதர்கள் , காந்த சக்தி பெற்ற மனிதர்கள் மன உறுதி, நம்பிக்கை, அன்பு இவற்றை வாழ்வின் மூலதனமாக்கி வெற்றிக்கனியை பறிப்பவர்கள் (Magnetized man). சந்தேகம், மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றினால் இழுத்துச் செல்லப்படும் மனிதர்கள் அநேகம். (Demagnetized man) இவர்கள் காந்த சக்தி அற்றவர்களுக்கு நிகரானவர்கள். சாதா இரும்புத்துண்டைப் போன்றவர்கள்.

அதிக சக்தி, அதிக ஆற்றல், ஆரோக்கியம், மகிழ்ச்சி, ஆனந்தக் கோட்டையின் இருப்பிட பொக்கிஷம் நமது ஆழ்மனது ,அடிமனது Super Conscioicus mind னீவீஸீபீ , அகமானது (subconscious mind) இங்கே நமது அற்புத சக்திஇடி, மின்னலுக்கு இணையான ஆற்றல்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது & மாயப்பெட்டியாக உள்ளது. மந்திர சக்திகளின் சங்கமாக உள்ளது. அதை திறக்கும் மந்திர சாவியே பயன்படுத்தும் கலையே அற்புத வாழக்கை கலை.

நீங்கள் உள்மனது. அகமானது, சூப்பர் மனதில் பயணம் செல்லும் சமயம் வாழ்வின் புதிய ஒளியை, மின்னல் கீற்றை புதிய சக்தியை அறிந்திடுகிறீர்கள். உணர்ந்து அனுபவம் செய்கிறீர்கள். அகமனது, ஆழ்மனது விழித்தெழந்து செயல்படும் சமயம் உங்களிடம் புதிய அற்புத சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், அறிவுமாற்றம், ஆரோக்கியம், புதிய உத்வேகம், உன்னத எழுச்சி. அன்பின் ஆளுமை உருவாகும்.

இச்சக்தியை அறியலாம். உணரலாம். பார்க்க இயலாது. அனுபவிக்கலாம். அற்புத குணப்படுத்தும் சக்தி உங்கள் மனது, உடல் திசுக்களைச் செம்மைப்படுத்துவதுடன் உடைந்த உள்ளத்திற்கு மருந்திட்டு எழுச்சியடையச் செய்திடுகிறது. பிறருக்கும் நன்மைகள் புரிகின்றன.

கணித விதி: 2+2= 4
இரசாயன விதி : பி2+ளி = பி2ளி
கணிதம், இரசாயனம், பௌதிகம் விதிகள் (Principles) கொள்கைகள் போல் அகமனதும் ஒருவித கோட்பாட்டில், கொள்கையில் மிக இயல்பாக தெளிவாக நேர்த்தியாக இனிமையாக வெளிப்பட்டு இயங்கும்.
தண்ணீர் உயரத்தில் இருந்து கீழே பாயும்.

வெப்பத்தால் கனிமப் பொருட்கள், திரவங்கள் விரிவடையும் இதுபொது விதி. எல்லா நாடுகளுக்கும், எல்லா இடத்திற்கும் ஏற்புடைய விதி அதைப்போல உங்கள் ஆழ்மனது அகமனது (Sub Conscious mind) பொக்கிஷத்தை திறக்க அற்புத மந்திர சாவி தியானம், ஜபம், பிரேயர் அல்லது நம்பிக்கை விதி ((Law of Nature) (Law of faith) (Law of Life) இயற்கை விதி, வாழ்க்கை விதி உள்ளன.

நமது ஆழ்மனதும் செயல்விதி, எதிர் செயல்விதி என்ற தத்துவத்தில் இயங்குகிறது. அதை இயக்கும் கலையை அடைய இயற்கை விதிகளை உணர்ந்து, கடைப்பிடித்திட வேண்டும்.

உயர்அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தத்தில் மின்சக்தி பாய்வது போல் நமது மனசக்தியும் ஆழ்மனதில் இருந்து நமது வாழ்வின் செயல்கள் வெளிப்பட வேண்டும். அச்சமயம் மேல் மனது, புறமனத தேவையற்ற சக்திகள் குறைந்து அற்புத ஆற்றல் கிட்டிடும்.

புறமனது என்பது கடல் மேல் அலை போல் அலைபாயும். ஆழ்மனது அமைதி கடலாக இருக்கும். கடலின் அடிவாரம் போல் அமைதியாக அலையற்று இருக்கும்.

மனம் இருநிலையில் உள்ளது இருகுணங்களில் உள்ளது.
Objective Conscious Waking Subjective Subconscious Sleeping Mind
மேல் மனது ஆழ்மனது
அலையும் மனது அமைதி மனது
காரண மனது இயல்பு மனது
இச்சை மனது அனிச்சை மனது
Voluntary involuntry
நமது மனதை ஒரு தோட்டத்திற்கு ஒப்பிடலாம். நாம் அதன் தோட்டக்காரர். நாம் எதை விதைக்கிறோமோ, எதைப் பற்றிய எண்ணங்களைச் சிந்திக்கிறோமோ அவைகள் விளையும், பெருகும். அமைதி, சந்தோஷம், மகிழ்ச்சி, கருணை, அன்பு விதைகளை விதைக்க ஆழ்மனது அருமையான அற்புத நிலைக்கு உயருகின்றது. மாயசக்தியாக நமக்கு பிறருக்கும் ஒளிபிரவாசகமாய் பிரகாசிக்க ஆரம்பிக்கிறது. நமது பிராண சக்தி, உள் ஒளி சக்தி, காந்த சக்தி அபரிதமாக ஜொலிக்க ஆரம்பிக்கிறது.

எனவே வாழ்க்கை சூத்திரம் நம்பிக்கையில் தொடங்குகிறது. ஆழ்மனது வழி நடத்தும் சமயம் நாட்ம இயல்பாக, இனிமையாக, சுகமாக வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அதற்கான எளிய வழி தியானம், இயற்கை உணவுகள், இயற்கை சூழல் வாழ்வு.

‘அன்னை இலாச் சேய் போல் அலக்கண் உற்றேன் கண் ஆரஎன் அகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே. – தாயுமானவர்

மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்

மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி, தியானம் மற்றும் சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் படிப்பின் மீது கவனத்தைத் திருப்பலாம். தேர்வு நேரத்தில் உண்டாகும் உடல் பிரச்னைகளுக்கு உடனடியாக சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

நேரம் கிடைக்கும் போது மனதுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடலாம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதற்கு பதிலாக இடையில் ரிலாக்ஸ் செய்யலாம்.

பாதுகாப்பு முறை:
கடினமான பாடங்களை முதலில் படித்தல், மனதில் பதியும்படி குறிப்பெடுத்தல், கேள்விகளை வரைபடம் வரைந்து நினைவில் வைத்துக் கொள்ளுதல் போன்ற யுக்திகள் உதவும். படித்தவற்றை நண்பர்களிடம் சொல்லிப் பார்த்து தவறைத் திருத்தலாம். நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தினால் டென்ஷனை பெரிதளவில் குறைக்க முடியும். முக்கிய கேள்விகளை முதலில் படித்து முடிக்கலாம்.

படம் மற்றும் பாடங்களை கற்பனை மூலம் மனதில் நிறுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த விஷயங்களை குழுவாக விவாதிக்கும் போது அந்த கருத்துகள் மறக்காத வண்ணம் மனதில் பதிந்து விடும்.

சோர்வை நீக்கி மனதை உற்சாகமாக வைத்திருக்க சிறிய உடற்பயிற்சிகள் செய்யலாம். படிக்க நேரம் ஒதுக்குதல், எளிய யுக்திகள் மூலம் படித்தவற்றை மனதில் வைத்துக் கொள்வது மற்றும் முழுமையாக வெளிப்படுத்துவது போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால் தேர்வை எந்த பயமும் இன்றி எதிர்கொள்ள முடியும். சத்தான உணவும், தன்னம்பிக்கையும் சாதனைக்கான சாவிகள்.

By Aatika Ashreen