ஆவணி ஞாயிறு விரதம்

ஆவணி ஞாயிறுஞாயிறு என்றால் சூரியன் அந்த சூரியன் ஆட்சி பெறும் மாதம் ஆவணி.இந்த மாதத்தில் சூரியனின் அருள் வேண்டி இருக்கும் நாளே ஆவணி ஞாயிறு விரதமாகும்.

ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.இந்த சூரிய ஓரையில் பொங்கலிட்டு சூரியனை வணங்கினால் கண் பிரச்சினைகள்,தோல் பிரச்சினைகள் தீரும். வீட்டில் கெட்ட சக்திகள் அகலும்,பீடைகள் அகலும்.செல்வம் சேரும்.

தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்று, சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெற்றால் எல்லா பிரச்சினைகளும் எதிர்கொண்டு வாழ்வில் சாதிக்கலாம் உங்களுக்கு சூரிய பகவான் துணை இருப்பார்.

சூரிய ஓரையில்தான் விரதமிருந்து வணங்கவேண்டும் என்ற அவசியமில்லை அந்த நாளில் சூரியன் மறைவதற்கு முன்னால் எந்த நேரத்திலும் சூரிய பகவானை வணங்கி விரதமிருக்கலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.