நிலவேம்பு

நிலவேம்பு-thamil.co.ukமூலிகையின் பெயர்  – நிலவேம்பு
தாவரவியல் பெயர் Andrographis Paniculata
குடும்பம் – Acanthaceae
வேறுபெயர்கள்– சிரட்குச்சி, கிராதம், கிரியாத்து, கிராகதி, நாட்டுநிலவேம்பு, காண்டம், கோகணம்
பயன்படும் பாகங்கள்  எல்லா பாகங்களும்.
பொதுவான குணங்கள் – பசியை தூண்டும், டானிக், உடலுக்கு உரமேற்றும். வெப்பம் உண்டாக்கும்.

வளரியல்பு – நிலவேம்பு வருடாந்திர செடி. கிளைகளுடன் 1/2-1 மீட்டர் உயரம் வரை வளரும். தண்டு உருண்டு, வழவழப்பாகவும் பழுப்பு நிறமாகவும் இருக்கும். இரு வகைகள் – சீமை (சூரத்) நிலவேம்பு மற்றும் நாட்டு நிலவேம்பு. நாட்டு நிலவேம்பு 1/2 மீட்டர் உயரமாக, நான்கு மூலைகள் உள்ளதாக சிறிது கறுப்பாக இருக்கும். (எனவே காலமேக் என்ற பெயர்). இரண்டு வகை வேம்புகளின் பயனும், குணமும் ஒன்றுதான்.

மே, ஜுன் மாதங்களில் விதைகள் நடப்படும். தண்டுகளை நட்டும் பயிரிடலாம். 10 – 30 நாட்களில் வளரும். எல்லாவித பூமியிலும் ஏற்றது என்றாலும் ஈரமான மண்களில் நன்கு வளரும். பூக்கள் வெண் நிறமானவை.

தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக பயிரிடப்படுகிறது இந்த பயன்தரும் மூலிகை. சீனாவிலும், தாய்லாந்திலும், மேற்கிந்திய தீவுகளிலும் அதிகமாக பயிரிடப்படுகிறது. நல்ல திடமான தாவரமானாதால், எல்லா வகை மண்களிலும் விளையும், வேறு தாவரங்கள் விளையாத பூமியிலும் நிலவேம்பு வளரும்.

கசப்பான Andrographolide எனும் மருந்துப் பொருள் உள்ளது நிலவேம்பு. இந்த கசப்பான மூலிகை பல பயன்களை உடையது. பல நூற்றாண்டுகளாக ஜீரண மண்டலம், சுவாச மண்டல கோளாறுகளுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது. சரியான அளவில் கொடுக்கப் பட்டால் நிலவேம்பு பல நோய்களுக்கு மருந்தாகும் என்கிறது ஆயுர்வேதம்.

நிலவேம்பு--thamil.co.ukநிலவேம்பு பயன்கள்
*ஜுரம், வீக்கம் (அழற்சி), ஜலதோஷம் இவற்றுக்கு ‘ஆஸ்பிரின்’ மருந்து போல நிலவேம்பு செயல்படுகிறது. 15 கிராம் நிலவேம்பு + கிச்சிலித்தோல் 195 மி.கி. + கொத்துமல்லி 195 மி.கி இவற்றை வெந்நீரில் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து, பிறகு வடிகட்டி, 15 – 30 மி.லி. வரை தினமும் 2 – 3 வேளை கொடுக்கலாம். நிலவேம்பின் ஜுரம் குறைக்கும் திறன், ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. ஒரு கிலோ உடல் எடைக்கு 300 மி.கி. நிலவேம்பில் உள்ள கசப்பு இரசாயனப் பொருள் கொடுத்து வந்ததில் அது அதே அளவு ‘ஆஸ்பிரின்’ மருந்து போல் செயல்படுகிறது.

முக்கியமாக ஜுரங்களுக்கு சிறந்த மருந்து. பன்றி காய்ச்சல், டெங்கு, சிக்கன்குனியா போன்ற தீவிரமான ஜுரங்களை கூட தணிக்கும். ஒரு ஆன்டி – பையாடிக் போல் செயல்படும். வைரஸ்களை எதிர்த்து அழற்சியை குறைக்கும். பூஞ்சனம் (Fungus) பாக்டீரியாக்களையும் அழிக்கும்.

நிலவேம்புடன் கடுகுரோகிணி மற்றும் ஆடாதோடை மூலிகைகளை சம அளவில் கலந்து தயாரித்த கஷாயத்தை 10 – 30 மி.லி. அளவில் அனைத்து ஜுரங்களுக்கும் கொடுக்கலாம்.

மலேரியாவிற்கு தொன்று தொட்டு குனைன் (quinine) தான் மருந்து. தற்போது அதற்கு பதில் நிலவேம்பு தரப்படுகிறது.

நிலவேம்பு பேக்டீரியா, வைரஸ் இவற்றுக்கு எதிரி. யானைக்கால் வியாதிகளை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும். உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஜலதோஷத்துக்கும் நிலவேம்புக்கும் மருந்து. தினமும் 1200 மி.கி. Andrographolide சாறை 5 நாட்கள் எடுத்துக் கொள்ள, சுவாச மண்டல கபம் நீங்கும். இது தென்அமெரிக்க தேசமான ‘சிலி’யில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

*  இருமல், தொண்டை கரகரப்பு, அலர்ஜிகள் இவற்றுக்கும் நல்ல மருந்து.

சுவாசக்குழாய் தொற்றுக்கும் நல்லது. தொற்று நோய்களான ஷயரோகம் (டி.பி.), குஷ்டரோகம், நிமோனியா, பாலியல் நோய்கள், காலரா, மலேரியா, எலிகளால் வரும் Leptospirosis, Aids இவற்றுக்கும் நிலவேம்பு உபயோகப்படுத்தப்படுகிறது.

மேலை நாடுகளில் சுவாசக்கோளாறுகள், நுரையீரல் அழற்சி, தொற்றுகளுக்கு நிலவேம்பு மருந்தாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

நிலவேம்பின் முக்கியமான ஆற்றல் அதன் நோய்தடுப்பு சக்தியை பெருக்கும் குணம். நிலவேம்பின் சிறந்த ஆற்றலுக்கு காரணம் அதில் உள்ள கசப்பான பொருளான Andrographolideதான்.

* மூக்கடைப்பு, தொண்டைப்புண், காதுவலி, தலைவலி, இவற்றுக்கும் நிலவேம்பிலிருந்து எடுக்கப்பட்ட கசப்புப் பொருள் மருந்தாகிறது. உடல் அழற்சி, இரணங்களையும் ஆற்றுகிறது.

* நிலவேம்பு சாறு அல்சருக்கும் நல்ல மருந்து. குடலில் அதிக அமிலச் சுரப்பை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். பேதியை நிறுத்தும் திறனுடையது. லோபர் மைட் (அ) லோபோமை (Loperamide) என்ற அலோபதி பேதி மருந்து அனைவருக்கும் தெரிந்த மருந்து. நிலவேம்பின் இராசாயனப் பொருட்கள் இந்த மருந்துக்கு இணையாக செயலாற்றி பேதியை நிறுத்துகிறது. நாள்பட்ட பெருங்குடல் அழற்சிக்கு நல்ல மருந்தாகும்.

* கல்லீரலை காக்கும் மருந்துகளில் ஒன்று நிலவேம்பு. கல்லீரல் கோளாறுகளுக்கு உள்ள ஆயுர்வேத மருந்துகளில், 26 மருந்துகளில் நிலவேம்பு சேர்க்கப்படுகிறது. மது அருந்துதல், நச்சுப் பொருட்கள் இவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுவது எதிர்க்கிறது. பித்தநீர் சுரப்பை அதிகப்படுத்தும்.

இதன் சாற்றை தேனில் கலந்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை நோய்களுக்கு பயனாகிறது.

* எல்லா வித புற்றுநோய்களுக்கும் மருந்தாகும். அபரிமித செல் உற்பத்தியை தடுக்க வல்லது. புராஸ்டேட் புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கும்.

நிலவேம்பில் உள்ள Andrographolide, புற்றுநோயில் ஏற்படும் அபரிமித கலங்கள் பெருகுவதை தடுப்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தப்பொருள் நேரடியாக செல்களை அடைந்து அளவுக்குமீறிய வளர்ச்சியை நிறுத்துவது.  Andrographolide நிலவேம்பின் இலைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.

இதன் நோய்தடுக்கும் திறனால் Lymphocytes (ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் ஒரு வகை) அதிகமாகின்றன. மேலும் ஆய்வுகள் தேவை. அதனால் நிலவேம்பு புற்றுநோய்க்கு நல்ல மருந்தாவது சாத்தியம்.

* இதய நோய்கள், நீரிழிவுக்கும் நிலவேம்பு மருந்தாக பயனாகிறது. Atherosclerosis எனும் இரத்தக்குழாய் கடினமாகி விடும் நோய்க்கும் மருந்தாகும். இரத்த குழாய்களில் இரத்தம் கட்டுவதை தடுக்கும். இரத்தத்தின் வெள்ளையணுக்களின் திறனை மேம்படுத்தும்

*மூட்டு வலி, ஆர்த்தரைடீஸ், ருமாடிஸம் வியாதிகளுக்கும் மருந்தாகும்.

* பசியின்மை, சிறுநீரக கோளாறுகள், இரத்தம் கசியும் மூலம், வயிற்றுப்பூச்சிகள் இவற்றுக்கெல்லாம் மருந்தாக கொடுக்கப்படுகிறது. வலிகளுக்கு நிவாரணமளிக்கிறது

* வயிற்று நோய்களுக்கும் மருந்தாகும் – பேதி, வாய்வுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் முதலியவற்றுக்கும் வைத்தியர்கள் நிலவேம்பை மருந்தாக பயன்படுத்துகின்றனர்.

* நச்சுக்களை முறிக்கும். பாம்பு விஷத்தையும் எதிர்க்கும்.

* கொசுக்களை அழிக்க வல்லது.

நிலவேம்பு இலை-thamil.co.ukநிலவேம்பு கஷாயம்

உலர்ந்த நிலவேம்பு இலைகளை பொடித்து 1 தேக்கரண்டி எடுத்து அதன் மேல் ஒரு கப் கொதிக்கும் நீரை விடவும். 5 – 10 நிமிடங்கள் விட்டு, உணவுக்கு முன் பருகவும். இந்த கஷாயத்தை போகப் போக நிலவேம்பு இலைகளின் அளவை அதிகரிக்கலாம்.

கசப்பான நிலவேம்பை இனிப்பான அதிமதுரத்துடன் சேர்த்து செய்யும் மருந்து நல்ல டானிக் ஆகும். ஒரு மூலிகை, பல பயன்கள்! இதுவே நிலவேம்பின் பெருமை!

-ஆயுர்வேதம்