பொதுஅறிவு

பொதுஅறிவு-thamil.co.uk* நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மை உடையது.

* பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

* மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது – மூளையில் உள்ள செல்கள்

* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

* நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

* பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

* உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

* ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

* கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான்.

* பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*விண்வெளியில் உணவாகப் பயன்படுவது – குளோரெல்லா

* பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

* நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

* நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

* ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

* தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.

* முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.

* தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது

* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது – நெருப்பு கோழி

* எறும்புகள் உள்ள வகைகள் – 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

* சுறா மீனின் வாழ் நாள் – 20 முதுல் 30 ஆண்டுகள்

* ஆண்சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண்சிங்கம் சாப்பிடும். * வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

* கொசுக்களில் 3500 வகை உள்ளது

* தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது – ஈஸ்ட்

* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் – குளோரோஃபார்ம்

* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது – இயற்கை வாயு

* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் – லூயிஸ் ஹெனபின்

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் – லில்லி

* மின் விளக்கை கண்டுபிடித்தவர் – ஹம்ப்ளி டேவி

* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு – இங்கிலாந்து

* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது – ஜப்பான்

*ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் – ராபட்கிளைவ்

* ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு – ரஷ்யா

* வளையாமல் நேராகச் செல்லும் நீளமாக ரெயில் பாதை உள்ள நாடு – ஆஸ்திரேலியா – 478 கி.மீ

* விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு – அயர்லாந்து

* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் – புதன்

* பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது – பொட்டாசியம் நட்ரேட்

*உலோகங்களை உருக்கி இணைக்க பயன்படுவது – ஆக்சி அசிட்டிலின்

* முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது – வெள்ளி நைட்ரேட்

* சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

* மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துபோனார்.

* முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல்கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

* இந்தியாவில் தமிழில்தான் “பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

* திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.

* ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

* பிரேசில்நாட்டு தேன் கசக்கும்.

* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

* அமெரிக்காவைவிட சகாரா பாலைவனம் பெரியது.

-FB Roshany Gobithas