உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்

உலர் பழங்கள்-thamil.co.uk• அத்திப்பழம் -fig பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

• உலர்ந்த ப்ளம்ஸை – plums, மல்டி-விட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் விட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

• உலர்ந்த ப்ளூபெர்ரியிலும் -blueberry, விட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.

• கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், விட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.

• ஆப்ரிக்காட்-apricot  இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதவும் இது உணவுக் கட்டுப்பாட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்தது.

• உலர்ந்த செர்ரி -cerry பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.

• கிரான்பெர்ரியில் -cranberry, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேபோன்று உலர்ந்த கிரான்பெர்ரியை அதிகம் சாப்பிட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

FB – Karthickeyan Mathan