தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகள்

தஞ்சை பெரிய கோயில்-thamil.co.uk*இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான மிகப்பெரிய கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார்.

*இந்தபிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

*கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் ஓரளவுக்கு இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும்.

*காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினார்.

*பெரியகோவிலின் அமைப்பு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்தியின் மாதிரியை கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு.

*தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

*உலகிலேயே மிகப்பெரிய கல்வெட்டு இந்த கோயிலில்தான் உள்ளது.

*தமிழ் நாட்டில் உள்ள சிவலாயங்களில்,நவக்கிரகங்கள் லிங்க வடிவில் இருப்பது இங்குதான்.இதேபோல் லிங்க வடிவில் இருக்கும் இன்னொரு கோயில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளகஸ்தி ஆலயம்.

# அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.