வேர்கடலை

நிலக்கடலை செடி-thamil.co.ukமூலிகையின் பெயர் – வேர்கடலை
தாவரவியல் பெயர் – ARACHIS HYPOGAEA
தாவரவியல் குடும்பம் – FABACEAE
உபயோகமுள்ள பாகங்கள் – சமூலம்
வேறு பெயர்கள் – மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை, நிலக்கடலை, கச்சான்.
ஆங்கிலப் பெயர்கள் – PEANUT, GROUNDNUT

வளரியல்பு – வேர்கடலை எண்ணெய் வித்தெடுக்க விவசாயமாகப் பயிர் செய்யப்படுகிறது. இதன் தாயகம்  தென் அமரிக்கா. பின் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் பரவிற்று. பல முறை நிலத்தை உழுது மண்ணை மிருதுவாக இருக்கும்படி செய்து உரமிடவேண்டியது  மிகநன்று.  இதில் பல இரகங்கள் உள்ளன. இந்தியாவில் சிகப்பு ரகம், பட்டாணி ரகம், கொடிக்காய் ரகம் என உள்ளன. இதை மானாவாரியாகவும் தண்ணீர் பாச்சியும் பயிர் செய்வார்கள். முன்புபோல் இதை விதைப்பதற்கு ஏர் மூலம் சால் விட்டு விதைப்பதில்லை. தற்போது விதைப்பதற்கு டிரக்டர் மூலம் கருவிகளின் கொள்ளளவில் விதை விதைக்கிறார்கள். களை எடுப்பதும் யந்திரங்கள் மூலம் செய்யப்படுகிறது.

வேர்கடலைச்செடி 30  – 50 சென்ரிமீட்டர் உயரம் வளரும். இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும் அது 1 – 7 சென்ரிமீட்டர் அகலம் கொண்டிருக்கும்  பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மகரந்தச் சேர்க்கையின் போது விழுதுகள் பூமிக்குள் சென்று பிஞ்சு விட்டு காயாக மாறும். காய்  3 – 7 செ.மீ. நீளமும் அதனுள் 3 -4 விதைகள் இருக்கும். மணற்பாங்கான இடங்களில் வளரும் நிலக்கடலை கொடிக் கடலை என்பர். அது நான்கு மாதத்தில் முற்றிவிடும். அதை வெட்டித்தான் பிரித்தெடுப்பார்கள். மற்ற குத்துச் செடிகள் நூறு நாட்களில் கூட முற்றிவிடும். அதைப் பறிப்பது எளிது. செடியைக் காய வைத்து மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவார்கள். இது விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. விதையிலிருந்து எண்ணெய் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். எண்ணெய் எடுத்தபின் கடலைப்பிண்ணாக்கு மீதமாகும். அது கால் நடைகளுக்கு உணவாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என்கிறார். சென்னை அரும்பாக்கம் ரத்னா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு .

வேர்கடலை தாவர புரதம் சிறந்த மூலங்கள் உள்ளன. பருப்பு குடும்பத்தின் உறுப்பினர்கள் நிலக்கடலை, வேர்கடலை, பீன்ஸ் சேர்த்து மற்றும் பட்டாணி போன்ற அறியப்பட்ட, வேர்கடலை பொருட்கள் பல்வேறு காணப்படுகின்றன. அவர்கள் உப்பு, உலர் வறுத்த, வேகவைத்த மற்றும் மூல சாப்பிடவில்லை. அவர்கள் உடையக்கூடிய வேர்க்கடலை வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் சாக்லேட் பார்கள் காணப்படும் மற்றும் கலப்பு கொட்டைகள் ஒரு முக்கிய பொருளாக உள்ளது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலைஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்து விட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே காலகட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

வேர்கடலை-thamil.co.ukவேர்கடலை உடல்நல நன்மைகள்

நீரழிவு நோயை தடுக்கும்
நிலக்கடலையில் மங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கல்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப்பை கல்லைக் கரைக்கும்
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. வேர்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணெய் ஒரு வாரம் 1 அவுன்ஸ் சாப்பிட்டு 25% பித்தக்கற்கள் உருவாகும் ஆபத்து குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதயம் காக்கும்
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

புற்றுநோய் பாதுகாப்பு
பீட்டா sitoserol (எஸ்ஐடி) என்று phytosterol ஒரு வடிவம் வேர்கடலை உள்ளிட்ட சில தாவர எண்ணெய்கள், விதைகள், மற்றும் பருப்பு வகைகள் அதிக அளவு காணப்படுகிறது. பைட்டோஸ்டீரால் கொழுப்பு உறிஞ்சுதல் தலையிடுவதன் மூலம் இதய நோய் எதிராக பாதுகாக்கிறது மட்டும், கட்டி வளர்ச்சியை தடுப்பதன் மூலம் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கிறது.

கொழுப்பை குறைக்கும்
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கல்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

– இயற்கை விவசாயம் குழுமம்

 

கடலை எண்ணெய்-thamil.co.ukகடலை எண்ணெய்

சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது. நிலக்கடலை என வழக்கு மொழியில் வழங்கப்படும் வேர்க்கடலை மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. தற்போது வெப்பமண்டல பகுதிகளான சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா பகுதிகளில் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக பயிரிடப்படுகிறது. இதன் பருப்புகளில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது. அதிக அளவில் லிப்பிடுகள் நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உடலில் சேராமல் காக்கவும் இவை உதவும்.

‘ஒமேகா 6’ எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்த சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், ‘பீட்டா சிட்டோஸ்டிரால்’ எனும் துணை இரசாயனபொருள் கடலை எண்ணெயில் உள்ளது. இதுகொலஸ்டிராலை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்டது. எனவே இதனை தினமும் 0.8 கிராம் உடலில் சேர்த்து வந்தால் இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

‘ரெசவராடால்’ எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. இது இதய வியாதிகள், புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது. நோய்த் தொற்றுகளை தடுப்பதிலும் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கு வகிக்கிறது.

கடலை எண்ணெயில் விட்டமின் E மிகுந்துள்ளது. 100 கிராம் எண்ணெயில் 15.69 மில்லிகிராம் ஆல்பா டோகோபெரல், 15.91 மில்லிகிராம் காமா டோகோபெரல் உள்ளது. விட்டமின் E, லிப்பிடுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும். கலங்களின் சவ்வுகள் வளர்ச்சி அடையவும், ஆக்சிஜன்பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பதிலும் இது பங்கெடுக்கிறது.

ஆசிய நாடுகளில் சமையல் எண்ணெயாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.450 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில்தான் கடலை எண்ணெய் கொதிக்கும் என்பதால் பண்டங்கள் சமைக்க ஏற்றது கடலை எண்ணெய். வறுத்தெடுக்கும் உணவுகள் செய்ய கடலை எண்ணெய் சிறந்தது.

நீண்டகாலம் கெட்டுப் போகாத தன்மை கொண்டது என்பதால் பல நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலருக்கு வாந்தி போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைக்குப்பின் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக நல்ல மஞ்சள் நிறம் கொண்ட இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டபின் இளமஞ்சள் நிறமாக காணப்படும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவதை தடுக்கும். மாசுப் பொருட்களும் நீக்கப்பட்டு இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை அனைவரும் பயன்படுத்தலாம்.

-மூலிகைவளம்