மாதுளை

மூலிகையின் பெயர் – மாதுளை
தாவரப்பெயர் – PUNICA GRANATUM
தாவரக்குடும்பம்  – PUNIACACEAE
வேறு பெயர் – மாதுளங்கம்
பயன்தரும் பாகங்கள் பழம், பூ, பிஞ்சு, பட்டை, வேர், விதை

மாதுளை-thamil.co.ukவளரியல்பு -மாதுளை வளமான மண்ணில் நன்கு வளரும். இந்தியாவிலும் பல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இதன் தாயகம் ஈரான் ஈராக் பின் இந்தியா,பாக்கிஸ்தான்  பங்களாதேஸ்,  சைனா, தெற்கு அரேபியா, ஆப்கானீஸ்தான், போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இது ஒரு குறுமரம். சுமார் 10 லிருந்து 25 அடி வரை வளரக்கூடியது.

இதன் பூ சிகப்பாக இருக்கும். மின்னும் சிவப்பாக மஞ்சள் கலந்த பச்சையாக பழங்கள் தோற்றம் தரும் பழத்தின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பு இருக்கும். பழத்துள் கெட்டியான விதைகள் சாறு நிறைந்திருக்கும். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மூன்று வகையாக சாறுகள் இருக்கும். இவற்றின் உலர்த்தப்பட்ட விகைகளிலிருந்து நறுமணப் பொருள்கள் செய்கின்றனர். விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் 

‘வெடித்து வீழ் படித்தைவாங்கி மெல்லிய சீலை கட்டிக்
கடுக்கெனப் பிழிந்துகொண்டு கண்டதற்கிணங்கக் கூட்டிக்
குடித்திட வெப்புமாறுங் குளிந்திடு மங்கமெல்லாம்
வடித்தநன் மொழியினாளே மாதுளம் பழத்தின் சாறே ’ என்னும் பழம் பாடல் மாதுளம் பழத்தின் சாற்றை அருந்தினால் சரீரம் முழுவதும் குளிர்ச்சி அடையும் என்கின்றது.

மாதுளம் பிஞ்சைக் கொண்டு வந்து புளித்த மோரில் அரைத்துக் கலக்கி செரியாகழிச்சல்,சீதக்கழ்ச்சல், நீர்நீராய் கழிதலுக்கும் தர கழிச்சல்கள் நிற்கும்.

மாதுளையின் பழம், பூ,பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு,  சர்க்கரை சுண்ணாம்பு, பொஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய்நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்திகிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.

புமாதுளம் பழம்-thamil.co.ukளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்தபேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. குடற்புண்களை (அல்சர்) குணமாக்குகிறது.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.

தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண்தன்மையில் பலவீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்தசக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்செரிச்சல், மந்தம், அடிக்கடி மயக்கம் போன்றவை நீங்கும்.

மாதுளம்பழச் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம்பழச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.

மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்து விடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதயவலி நீங்கிவிடும்.

பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரை மணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒருகிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்து க்கொண்டு மீண்டும் பாகு பதம்வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்த நோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப்பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்கும்.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேகநோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதயநோய்கள், இதய பலவீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

மாதுளம் பூ-thamil.co.uk

மாதுளம்பூவின் பயன்கள்

மாதுளம் பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது, இரத்தவாந்தி, இரத்தமூலம் வயிற்றுக்கடுப்பு, உடல்சூடுதணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்திஉண்டாகும்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மூக்கிலிருந்து குருதி வடிவதை நிறுத்த மாதுளம்பூச் சாற்றுடன் அறுகம்புல் சாற்றையும் சம அளவுகலந்து தரலாம்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசுவெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,  இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். அலர்ஜியை நிவர்த்திக்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் நீங்க,  மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து அதில்200 கிராம் பசுநெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப் பாதிப்பு, படிப்படியாகக் குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் நீங்கும்.

மாதுளம்பழத் தோலின் பயன்கள்

மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

மாதுளம் பழத்தோலுடன் வேலம்பட்டைத் தூளைக் கலந்து பல் துலக்கிவர பல்வலி, பல்லில் இரத்தம் கசிதல் நீங்கும்.

மாதுளம் பட்டைச்சாறு வயிற்றிலுள்ள புழுக்களை வெளிப்படுத்தும். மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும் போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சியதை, காலைநேரத்தில் 30மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப்பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.

மாதுளம் விதை துவையல்

தேவையானவை : மாதுளம் விதை – கால் கப், புளி – நெல்லிக்காய் அளவு, இஞ்சி விழுது – ஒரு  மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் – 2, வெல்லம் – அரை தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை : மாதுளம் விதை, புளி, இஞ்சி விழுது, பச்சை மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். புளிப்பும் இனிப்புமாக கலந்துகட்டி ருசிக்கும் இந்தத் துவையல். இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

மாதுளம் விதை துவையல் : வேர்க்கடலையை சிறிது வறுத்து அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

-மூலிகைவளம்

தொகுப்பு – thamil.co.uk