துளசி : மூலிகைகளின் அரசி

மூலிகைகளின் அரசி-thamil.co.ukமூலிகையின் பெயர்  – துளசி
வேறு பெயர்கள்
– 
 துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
இனங்கள்  –  நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
தாவரப்பெயர்கள்  –  Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)
வளரும் தன்மை  –  வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

பயன்தரும் பாகங்கள் – இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

பயன்கள்
* தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள்.
* துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது.
* துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
* வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு.
* குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும்.
* உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும்.
* சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
* இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும்.
* இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும்.
* இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்தசாறு காலை, மாலை 2 துளி வீதம் காதில் விட்டுவர 10 நாட்களில் காது மந்தம் தீரும்.
* விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும்.
* மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.
* தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
* துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.
* வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
* வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
* துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.
* துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.
* எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்

1.உண்ட விஷத்தை முறிக்க.
2.விஷஜுரம்குணமாக.
3.ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4.வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5.காது குத்துவலி குணமாக.
6.காதுவலி குணமாக.
7.தலைசுற்றுகுணமாக.
8.பிரசவ வலி குறைய.
9.அம்மை அதிகரிக்காதிருக்க.
10.மூத்திரத் துவாரவலி குணமாக.
11.வண்டுகடி குணமாக.
12.வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14.தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15.மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16.அஜீரணம் குணமாக.
17.கெட்டரத்தம் சுத்தமாக.
18.குஷ்ட நோய் குணமாக.
19.குளிர் காச்சல் குணமாக.
20.மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21.விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22.பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23.காக்காய்வலிப்புக் குணமாக.
24.ஜலதோசம் குணமாக.
25.ஜீரண சக்தி உண்டாக.
26.தாதுவைக் கட்ட.
27.சொப்பன ஸ்கலிதம் குண்மாக.
28.இடிதாங்கியாகப் பயன்பட
29.தேள் கொட்டு குணமாக.
30.சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.
31.கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.
32.வாதரோகம் குணமாக.
33.காச்சலின் போது தாகம் தணிய.
34.பித்தம் குணமாக.
35.குழந்தைகள் வாந்தியை நிறுத்த.
36.குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.
37.சகல விதமான வாய்வுகளும் குணமாக.
38.மாலைக்கண் குணமாக.
39.எலிக்கடி விஷம் நீங்க.
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.
41இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த.
42.வாந்தியை நிறுத்த.
43.தனுர்வாதம் கணமாக.
44.வாதவீக்கம் குணமாக.
45.மலேரியாக் காய்ச்சல் குணமாக.
46.வாய்வுப் பிடிப்பு குணமாக.
47.இருமல் குணமாக.
48.இன்புளூயன்சா காய்ச்சல் குணமாக.
49.காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த.
50.இளைப்பு குணமாக.
51.பற்று, படர்தாமரை குணமாக.
52.சிரங்கு குணமாக.
53.கோழை, கபக்கட்டு நீங்க.
54.சகல காய்ச்சல் மாத்திரை.
55.சகல வித காய்ச்சலுக்கும் துளசி மாத்திரை.

-(நெல்லை குமாரசாமி வைத்தியர்-1998)

சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 4 கோடி. மேலும் சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம்,சிறுநீரகம்,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம். பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் மூலம் ஒவ்வாமை (அலர்ஜி) மற்றும் மூச்சிரைப்பு (ஆஸ்த்மா) போன்றவைகள் குணமாவது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று.

துளசி இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் என ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர்.ஜி. முரளி கிர்ஷ்ணன் தலைமையிலான மாணவர்குழு மேற்கொண்ட ஆய்வில், துளசி இலையில் உள்ள ஆசிமம் சாங்க்டம் என்ற சத்து சர்க்கரை நோயை போக்கிவிடும் என கண்டுபித்து ஆய்வு பூர்வமாக நிருபித்துள்ளனர்.

இந்த குழு முதலில் எலிகளை கொண்டு அதற்கு ஸ்ரேப்டோசிசின் என்ற இரசாயனத்தை செலுத்தி அதனுடைய சர்க்கரை அளவை அதிகபடுத்தி பின்ன இந்ததுளசி இலைகளில் கண்டு பிடித்த மருந்தை ஒரு நாளுக்கு ஒருமுறை என 30 நாளும் செலுத்தி வந்தனர். முடிவில் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைவது மட்டுமின்றி உடல் உறுப்புகளான சிறுநீரகம் மற்றும் ஈரல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டதையும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்குழு ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்
நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது. சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.

கோடை காலத்தில் வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்.

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை சொறி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு.

கற்ப மூலிகை – துளசி

கற்பம் என்பது உடலை கல் போல ஆக்குவது. அப்படிப்பட்ட மூலிகைகள் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் துளசி பற்றி தெரிந்துகொள்வோம்.

துளசி மூலிகைகளின் அரசியாக போற்றப்படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.

துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.

துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள். கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க
துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.

பெண்களுக்கு
துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய
துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை – 9 எண்ணிக்கை, கடுக்காய் தோல் – 5 கிராம், கீழாநெல்லி – 10 கிராம், ஓமம் -5 கிராம், மிளகு – 3 எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க
தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

* சிறுநீரகக் கல் நீங்க
துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க
கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண், வாய் நாற்றம் நீங்க
வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க
மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர
துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

தலைவலி தீர
ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றுபோட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர
துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.

சரும நோய்கள் நீங்க

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.

nakkheeran.in

துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள்துளசி, கற்பூர துளசி உள்பட 300-க்கும் மேற்பட்ட துளசி வகைகள் உள்ளன.

துளசியின் முக்கிய குணம் குளிர்ச்சியால் ஏற்படும் கபத்தை நீக்குவதுதான். பெயரில் பலவாராக இருந்தாலும், குணத்தில் அனைத்து துளசிகளும் ஒரே செயலைத்தான் செய்கின்றன.

கோவில்களில் செம்பு பாத்திரத்தில் சுத்தமான நீரில் துளசியை போட்டு வைத்து, அந்த நீரை துளசியுடன் சேர்த்து பிரசாதமாக வழங்குவார்கள். துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமின்றி, மனதையும் தூய்மைப்படுத்தும். துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். ‘திருத்துழாய்’ என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கபம் சம்பந்தமான நோய்கள் மட்டுமின்றி, ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு போன்ற குளிர் சம்பந்தமான நோய்களும் இந்த துளசியால் விடைபெற்று செல்லும். முக்கியமாக இளம்பிள்ளை வாதம் நோய் எட்டிப்பார்க்காமல் இருக்க துளசியானது அருமருந்தாக உள்ளது. துளசியின் சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்துவருவதன் மூலமாக இதனை தடுக்க முடியும்.

குழந்தைகளின் வயிற்று வலி தீர, காது சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த, வெண்குஷ்ட நோய்க்கு, நீரிழிவு நோய், களைப்படைந்த மூளைக்கு சுறுசுறுப்பளிக்க, இருதய நோய்க்கு, ஆஸ்துமா மற்றும் மார்பு சம்பந்தமான நோய்க்கு, உடல் துர்நாற்றம் மறைய, நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக, தீராத தலைவலி தீர, வெயில் காலத்தில் வரும் கண் கட்டி குணமாக, உள்நாக்கு வளர்ச்சியை தடுக்க என அனைத்து நோய்களுக்கும் துளசியை பயன்படுத்தி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

துளசிமாடம்.thamil.co.ukதெய்வீகத் தாவரம் துளசி

‘துளசிச் செடி’ இல்லாத இந்திய வீடுகள் இல்லை எனலாம். புனிதமான செடி என்று அழைக்கப்படும் ‘துளசி’, சிறப்பான மருத்துவ குணங்களுக்கும் மற்றும் ‘புனிதத்தின் அடையாளமாகவும்’ பிரசித்த பெற்றுள்ளது. இந்த புனிதமான செடியானது தினந்தோறும் காலையும், மாலையும் வணங்கப்படுகிறது / பூஜிக்கப்படுகிறது.

அனைத்து இந்துக்களின் வீடுகளிலும் இந்தச் செடியினை சிறுதூணின் நடுவில் வைத்து, ஓர் ‘மாடம் அமைத்து அதில் ‘எண்ணெய் விளக்கு’ ஏற்றப்பட்டு வழிபடப்படும். இல்லத்தரசிகள் இந்தச் செடியினை வழிபட்ட பின்னரே, தம் நாளினை துவங்குவர். விஷ்ணுவின் அன்பிற்கு பாத்திரமானதாக துளசி கருதப்படுகிறது. துளசியானது செல்வத்தின் கடவுளும், விஷ்ணுவின் மனைவியான லஷ்மியின் உருவமாக வழிபடப்படுகிறது. இது கோவிலைச் சுற்றிலும் நடப்படுகின்றது. துளசி மாலைகள் விஷ்ணுவை அலங்கரிக்கவும், அதன் இலைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவில்களில் வழங்கப்படும் “தீர்த்தம்” (புனித நீர்) துளசி இலைகள் இன்றி இருப்பதில்லை. விஷ்ணுவின் அன்பிற்கு பாத்திரமானதால் இது சில சமயங்களில் “ஹரிப்பிரியா” என்றழைக்கப்படுகிறது.

மக்கள் இந்தச் செடியானது தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கிறது எனவும் நம்புகின்றனர். இதன் தெய்வீக குணம் ஓருபுறமிருக்க, துளசி அற்புதமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இது பல்வேறு வியாதிகளுக்கு தீர்வாக உள்ளது. துளசிச் செடியின் வேர் முதல் இலை வரை உள்ள அனைத்து பாகங்களும் ஆரோக்கியம் தரும் நற்குணங்களைப் பெற்றுள்ளது.

துளசியின் குணங்கள் துளசி கிளைகளுடைய, நிமிர்ந்து வளரக் கூடிய, வாசனைமிக்க மூலிகையாகும். இது பொதுவாக சுமார் 75 முதல் 90 செ.மீ. வரை வளரும். இதன் தாவரவியல் பெயர் “ஓசிமம் சேங்க்டம்” (Ocimum Sanctum) ஆகும். இதன் இலைகள் ஓரளவு வட்டமாகவும் மற்றும் 5 செ.மீ. நீளமுடையதாகவும் இருக்கும். இதன் இலைகள் மருத்துவ குணங்களுடைய மஞ்சள் நிற எண்ணெயைக் கொண்டுள்ளன. துளசி, சளியை வெளியேற்றவும், தாதுக்கள் அதிகமாக சேராமலும் செயல்படுகிறது.

துளசியின் வகைகள் இது வெள்ளை மற்றும் கருநீல நிறமாக வகைப்படுத்தப்படுகின்றன. வெண்மை நிற வகை துளசியை, வன்துளசி (O. americanam linn) என்கிறோம். இது பச்சை நிற இலைகளையும் வெள்ளை நிற பூக்களையும் உடையது. கருமை நிற வகையினை ‘கிருஷ்ண துளசி’ (O. Sanctum linn) என்கிறோம். இது கருநீல நிறத்தில் தண்டு, இலைகள் மற்றும் பூக்களையும் உடையது. இதில் மூன்றாவது வகையான சப்ஜா (அ) பார்பரி துளசி, (O. Bariteeum linn) இனிக்கும் சுவை உடையதும் உண்டு. இந்த வகையான துளசி மேற்கண்ட இரு வகைகளை விட சிறியதாகும். இது கருநீல நிற இலைகளையும் சிவந்த நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது. நான்காம் வகையான கற்பூர துளசி (O. Kilmand scharicum guerke) பச்சை நிற இலைகளையும் கற்பூரத்தின் வாசனை உடையதாக இருக்கும். இந்த அனைத்து வகைகளும் இந்தியாவிலேயே உள்ளன. இவையனைத்தும் ஒத்த மருத்துவ குணங்களை உடையதாய் உள்ளன.

மருத்துவ குணங்கள் சளியைக் குறைக்கவும், கிருமி நாசினியாகவும், இரத்த சுத்திகரிப்பானாகவும்,  பசித் தூண்டுதலுக்கும், காளான் கொல்லியாகவும் செயல்படுகிறது.

இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் துளசி எண்ணெயில் யூனொல், யூகெனால் மெதில் ஈதர் மற்றும் கார்வக்ரால் உள்ளது. இந்த எண்ணெயானது, கிருமிநாசினி மற்றும் பூச்சிக்கொல்லியாக பயன்படும் மருத்துவ குணமுடையது. தென்னாப்பிரிக்காவில் துளசிச் செடிகளை பயிரிட்ட போது, கொசுக்களால் பரவும் மலேரியாவின் அபாயம் வெகுவாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

துளசி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாறுடன் ஏலக்காய் கொதிக்க வைத்து, ஒரு நாளைக்கு 3 வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமாகும்.

துளசியின் வேர்களை (10 கிராம்), 250 மி.லி தண்ணீருடன் சமபங்கு ‘விஷ்ணு க்ராண்தி’ (Evolvulus sinoidesl) மற்றும் துளசி இலைகளை சேர்த்து காய்ச்சி 50 மி.லி. சாறாக்கி வடிகட்டிய பின்னர் ஒரு நாளுக்கு இரு வேளையென 2-3 நாட்கள் குடித்து வர கடுங்காய்ச்சலும் குணமாகும்.

ஆயுர்வேதத்தில் துளசி அனைத்து வகை காய்ச்சலைப் போக்கவும் பயன்படுகிறது.

துளசி இலைகளுடன் கிராம்பு, இஞ்சி மற்றும் சமையல் உப்பு, சிறிது தேன் கலந்து பருக சளி, மூக்கடைப்பு, ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

துளசி இலைகளை மென்று வந்தாலோ அல்லது சூடான சாறினை ஒரு நாளுக்கு 2-3 முறைகள் கொப்பளித்து வந்தாலோ வாய்ப்புண் எளிதாக குணமாகும்.

10 மி.லி. துளசிச்சாறுடன், இஞ்சிசாறு மற்றும் தேன் கலந்து பருகி வர வாந்தி நிற்கும்.

துளசி விதைகளை பொடி செய்து 10 துளிகள் இஞ்சி சாறுவிட்டு தினசரி இரு வேளை என 2 நாட்கள் குடித்து வந்தால் வயிற்று வலி (acidity) குணமாகும்.

துளசி இலைகள் ஊற வைத்த நீரினை குழந்தைகளுக்குக் கொடுத்து வர வாய்வுத் தொல்லை நீங்கும்.

துளசி இலை சாறு தொடர் இருமல், சளி, சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கினை குணப்படுத்த வீட்டிலே எளிதில் கிடைக்கப்பெறும் மருந்தாகும்.

குழந்தைகளுக்கு தோன்றுகின்ற கிருமித்தொற்று மற்றும் மூச்சிரைப்பிற்கு துளசி அருபெறும் மருந்தாகும்.

மோருடன் துளசி இலைகள் கலந்து குடித்து வந்தால் உடற்பருமனை குறைத்து கட்டுக்குள் வைக்கலாம்.

வெளிப்புற பயன்கள்

துளசி மற்றும் எலுமிச்சை சாறினை கலந்து படர்தாமரை மற்றும் பிற தோல் உபாதைகள் மேல் தடவி வர கட்டுப்பாட்டில் வரும்.

தோல் வியாதிகளுக்கு – துளசி இலைகள், கருமிளகு, வேம்பு இலைகள் மற்றும் பூண்டினை கலந்து தடவினால் குணம் பெறலாம்.

துளசி இலைகளை படையினால் பாதிக்கப்பட்ட இடத்தினில் பற்று போட பலன் தரும்.

படர்தாமரை, தோல் அரிப்பு குறைய உப்பு மற்றும் துளசி இலை கொண்டு தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற துளசி மற்றும் லவங்க இலைகளை அரைத்து தேய்க்கவும்.

துளசி இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.
இளந் துளசி இலைச்சாறினை தினசரி முகத்தில் பூசி வர பருக்கள், கறைகள் மறைந்து முகப் பொலிவு தரும்.

துளசி இலைகளை பசைபோல் அரைத்து, துணியில் பரப்பி தலைமுடியில் மசாஜ் செய்து வர பேன்கள் ஒழியும்.

துளசிச்சாறினை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதை கொப்பளம் மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் தடவ எரிச்சல் குறையும்.

துளசியானது பாரம்பரிய பயன்களைத் தவிர ‘வாசனை எண்ணெய்’ தயாரிக்கவும். மிக முக்கிய மூலப்பொருளாய் உள்ளது. இந்த எண்ணெய் மற்ற எண்ணெய்களுடன் மூலிகைக் குளியல் மற்றும் மசாஜ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

இது மந்தமான தோல் உடையவர்களின் இரத்த ஒட்டத்தை சீராக்க வல்லது.
ஆனால், ஒரே வார்த்தையில் எச்சரிக்க வேண்டுமென்றால், அதிகமாக உபயோகித்தால் அதிக சோர்வை ஏற்படுத்தும். கர்ப்ப காலங்களில் உபயோகிக்காமல் இருப்பது நன்று.

பல்வேறு எண்ணற்ற பயன்களை பார்க்கும் போது இந்தச் செடியானது நோய்கள் எதிர்ப்பானாகவும் மற்றும் இதயத்தை பலப்படுத்தவும் ஏற்றது எனலாம். இதில் அற்புதம் என்னவென்றால் இது புனிதமாகவும், வணங்கப்படுவது தான்.

“புராணங்களில்”, துளசி இருக்கும் வீடுகள் புனிதஸ்தலங்களுக்கு நிகரானது. அதனால் “எமதூதன்” (இறப்பின் கடவுள்) வாயிலாக வரும் மரணமும் அவ்வீட்டினை நெருங்காது என்று குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்ததாகும்.

மூலிகை மருத்துவம்-துளசி

கற்பூர மணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையுமுடைய சிறுசெடி துளசி. உடலிலிருந்து பாக்டீரியா, நச்சு கழிவுகளை நீக்குகிறது. நுரையீரல் தொடர்பான நோய்கள், சளி, இருமல், இரத்த அழுத்தம், கருப்பை கோளாறுகள், செரிமான சிக்கல் இவற்றை நீக்குகிறது. எல்லாவற்றுக்கம் மேலாக, இதிலுள்ள இயற்கை ‘‘மெர்குரி’’ உடலிலுள்ள ரசாயனங்களை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

துளசி அனல் தன்மை கொண்டது. மூளை நரம்புகளில் ஏற்படும் தடையை நீக்க வல்லது. இதன் இலை, பூ, விதை ஆகியவை மருத்துவப் பயன் உடையது.

மருத்துவக் குணங்கள்
* துளசியின் இலைகளை பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறை எடுத்து 5 மில்லி இருவேளை சாப்பிட்டு வர, பசியை அதிகரிக்கும். இருதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும் சளியை அகற்றும் தாய்ப்பாலை மிகுதியாக்கும்.
* வெண்துளசி இலை எடுத்து சாறு பிழிந்து 50 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் சம அளவு தேன்கலந்து உட்கொண்டால், கபத்தினால் தோன்றிய இருமல் குணமாகும்.
* துளசிஇலை 20, தோல் நீக்கிய இஞ்சி 2 கிராம் சிதைத்து 200 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மில்லி வீதம் குடித்து வர, பித்த சீதளகாய்ச்சல் 3 நாளில் நீங்கும்.
* வெண்துளசி இலைசாறு பிழிந்து கொதிக்க வைத்து, சம அளவு தேன் கலந்து கண்களில் மைபோல இட்டால், கண்பொங்குதல் தனியும்.
* ஒரு கைபிடி அளவு இதன் இலையை சிதைத்து, அரைலிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகும் வரை வற்ற வைத்து, வடிகட்டி 15 கிராம் கற்கண்டு, 2 தேக்கரண்டி தேனும் கலந்து தினம் 4 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர, மார்பு நோய், காசநோய், காய்ச்சல் குணமாகும்.
* இதன் இலைச்சாறு 2 சொட்டு, வெள்ளைபூண்டு அரைத்தசாறு 2 சொட்டு கலந்து காதில் விட்டால் சீழ் வடிதல் குணமாகும்.
* துளசி இலை 50 கிராம் மிளகு 50 கிராம் அரைத்து பயிர் அளவு மாத்திரை ஆக்கி, இரண்டு வேளை வெந்நீரில் இழைத்துக் கொடுக்க சகலவிதமான காய்ச்சல் குணமாகும்.
* துளசி வேர்-thamil.co.ukதுளசி வேர் சுக்கு வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்து, நாள்தோறும் காலையில் வெந்நீரில் சுண்டக்காய் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் குட்டம் குணமாகும்.
* துளசி விதை 10 கிராம், அரசவிதை 10 கிராம் சேர்த்து அரைத்து சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக்கி 2 வேளை 1 மாத்திரை வீதம் பாலில் கலந்து சாப்பிட கணச்சூடு நீங்கும்.
* துளசி இலையை கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் 1 பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.
* இதன் இலைச்சாறு 1 மில்லி, தேன் 5 மில்லி, வெந்நீர் 50 மில்லி கலந்து இரு வேளை நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இதயநோய் சாந்தமாகும்.
* இதன் இலைச்சாறு ஒரு பங்கு இஞ்சி இரண்டு பங்கு கலந்து கசாயம் செய்து நான்கு வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
* கருந்துளசி இலை 25, செம்பரத்தம் பூ2, அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிக்கட்டி 2 மணிக்கு ஒருமுறை 50 மில்லி வீதம் 10 நாட்கள்குடித்து வர இருதயத்தில் குத்து வலி, பிடிப்புவலி குணமாகும்.
* துளசி இலைச்சாறு 100 மில்லி எடுத்து கொதிக்க வைத்து சிறிது மிளகு தூள் சேர்த்து காலையில் குடித்தால் உடனே காய்ச்சல் குணமாகும்.
கருந்துளசி இலை-thamil.co.uk* கருந்துளசி ஒரு கைப்பிடி அளவு, மருதம்பட்டை 40 கிராம் சிதைத்துப் போட்டு 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 தேக்கரண்டி தேன்கலந்து 50 மில்லி வீதம் 1 நாளைக்கு 6 வேளை 20 நாட்கள் சாப்பிட்டு வர சீரற்ற இதயத்துடிப்பும், இதயத்தைக் கட்டிப்போட்டது போன்ற வலியும் குணமாகும்.
* இதன் இலை 10, மிளகு 10 இவ்விரண்டையும் நன்கு மென்று தின்றால் மலேரியாக்காய்ச்சல் குணமாகும்.
* இதன் இலை 1 கைபிடி, இஞ்சி 1 துண்டு, தாமரை வேர் 40 கிராம் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பற்றுப்போட்டு வர, விலாவலி குணமாகும்.
* துளசி இலை 10 கிராம் மிளகு தூள் 10 கிராம் பாகல் இலை 10 கிராம் கடுகு ரோகினி 40 கிராம் இவை அனைத்தையும் தேவையான அளவு நீர்விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரையாக உருட்டி சாப்பிட்டால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
* இதன் இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு 2 வேளை 2 துளி வீதம் காதில் விட்டு வர 15 நாளில் காது மந்தம் நீங்கும்.
* துளசி இலை பொடி, சுக்குத்தூள், ஓமப்பொடி, சம அளவாக எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், சிலேத்துமக் காய்ச்சல் (இன்பிளூயன்சா) குணமாகும்.
* துளசிச்சாறு, கரிசாலைச்சாறு இரண்டையும் கலந்து காதில் சில துளிகள் விட்டு வர காதுவலி, இரத்தம், சீழ்வடிதல் குணமாகும்.
* துளசி கசாயத்தில் ஜாதிக்காய் தூளைக் கலந்து குடித்தால் அதிசார பேதி தனியும்.
துளசிப்பூ-thamil.co.uk* துளசிப்பூங்கொத்து, திப்பிலி, வசம்பு சம அளவு சூரணமாகப் பொடி செய்து அத்துடன் 4 மடங்கு சர்க்கரை சேர்த்து 1 சிட்டிகைப் பொடியை தேனீல் கலந்து சாப்பிட்டு வர கக்குவான் குணமாகும்.
* துளசி விதையை நீரில் ஊரவைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அதிசாரம் தணியும்.
* துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தாம்பூலத்துடன் கலந்து சாப்பிட்டு வர தாது பலப்படும்.
* துளசி இலை 10 கிராம் சிறிதளவு கரி உப்பு கலந்து வெந்நீருடன் சாப்பிட அசீரணம் தணியும்.
* துளசி இலை மிளகு, ஓமம், பூண்டு, இந்து உப்பு, தூயகற்பூரம் இவற்றை சம அளவாக எடுத்து சிறிது நீர் விட்டு அரைத்து கடலை அளவு மாத்திரைகளாகச் சாப்பிட்டால் வாந்தி பேதி நிற்கும்.
* துளசி இலையை சாறு பிழிந்து 200 மில்லி கொதிக்க வைத்து சிறிது சர்க்கரை கலந்து உட்கொண்டால், இரத்த பித்த நோய் தணியும்.
* துளசி இலை சாறு 100 மில்லி, ஆடாதொடை இலைச்சாறு 100 மில்லி சேர்த்துக்கொதிக்க வைத்து குடித்தால் இருமல் நிற்கும்.
* துளசி இலை, சுக்கு, பிரம்ம தண்டு, கொள்ளு இவற்றை சம அளவாக எடுத்து கசாயம் செய்து 200 மில்லி அளவு குடித்தால் இழுப்பு நிற்கும்.
* துளசி இலை, துளசி மலர்க்கொத்து இவ்விரண்டையும் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயம் செய்து பழைய வெல்லம் சிறிது சேர்த்து குடித்தால் விக்கல், இழுப்பு நிற்கும்.
* இதன் இலைச்சாறு 200 மில்லி எடுத்து சிறிதளவு இந்து உப்பு கலந்து குடித்தால் கால், கை, வலி குணமாகும்.
* துளசி இலை, ஆமணக்கு வேர்சார் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயமாக்கி காய்ச்சி குளிர்ந்த பின்பு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் வாதநோய் குணமாகும்.
* துளசி இலைச்சாறு பிழிந்து 200 மில்லி எடுத்து காய்ச்சி சிறிது மிளகுத் தூள், பசுமை கலந்து சாப்பிட்டால் வாதத்தினால் தான்றும் வீக்கம் குணமாகும்.
* துளசி விதையை பொடியாக்கி 20 கிராம் இரண்டு வேளை சாப்பிட்டு வர நரம்புகளில் வலி, சிறுநீர் தடை குணமாகும்.
* துளசி இலை சாறு 200 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் இஞ்சி கசாயம் செய்து கலந்து சூடு உள்ளபோது குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
துளசி விதை-thamil.co.uk* இதன் விதையை பொடியாக்கி 10 கிராம் காலையில் தொடர்ந்து தின்று வர நீரிழிவு தணியும்.
* துளசி விதைப் பொடி 20 கிராம் பழைய வெல்லம் 10 கிராம் சேர்த்து சாப்பிட்டு உடனே பசுவின் பாலைக் கறந்த சூட்டில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் தணியும். விந்து வளர்ச்சியும் உண்டாகும். (2 வேளை 40 நாட்கள் குடிக்கவும்)
* துளசி வேரை பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை வெற்றிலையுடன் மென்று தின்றால், கனவில் விந்து வெளியேறுதல் நீங்கும்.
* துளசியிலையைச் சாறு பிழிந்து 200 மில்லியாக எடுத்து கொதிக்க வைத்து 25 மில்லி தேன் கலந்து காலையில் குடித்து வர உடல் பருமன் குறையும்.
* துளசி உலர்ந்து இலை 10 கிராம், சடாமாஞ்சில் 2 கிராம் அக்கராகாரம் 12 கிராம், உப்பு 8 கிராம் களிப்பாக்கு 5 கிராம், சீமை வாதுமைக் கொட்டையின் கரித்தூள் 10 கிராம், ஏல அரிசி 8 கிராம் சேர்த்து எடுத்து பொடியாக்கி 2 வேளை சாப்பிட்டு பிறகு பல் துலக்கி வர பல் நோய்கள் குணமாகும்.
* மாதவிலக்கு காலங்களில் பெண்கள் குளித்தப்பின் துளசி விதையை நீருடன் ஊற வைத்து நெல்லிக்காயளவு 3 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை தூய்மை பெற்று கரு தங்கும்.
* துளசி சுரசம் 20 கிராம், மணத்தக்காளி இலைச்சுரசம் 20 கிராம், அமுக்கிரா கிழங்கு சுரசம் 10 கிராம் சேர்த்து தேன் 10 கிராம் கலந்து 7 நாட்கள் குடித்தால் பிள்ளை பெற்றதும் தோன்றும் தாய்ப்பால் தூய்மை பெறும்.
* துளசி இலைச் சுரசம் 20 கிராம் அரிசிக் கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு பால் சோற்றை உணவாகக் கொண்டால் பெரும்பாடு நீங்கும். * துளசி இலைச் சுரசத்தில் கற்கண்டுத்தூள் செய்து கலந்து குடித்தால் இரத்தப் பெரும்பாடு நீங்கும்.
* காட்டுத் துளசி விதைகளை பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகை சாப்பிட்டு வர உள்மூலம் (பௌத்திரம்) குணமாகும்.
* துளசி வேர்த்தூள், காரும் கருணைத்தூள் சம அளவு எடுத்து ஒரு சிட்டிகை பொடியுடன் வெற்றிலையுடன் மென்று தின்றால் விந்து விரைவில் வெளியாகாமல் கட்டுப்படும்.
* இராமதுளசி மற்றும் துளசி விதையை பொடியாக்கி 5 கிராம் அளவு வெற்றிலையுடன் சாப்பிட்டால், விந்து கட்டுப்படும்.

-pettagum.blogspot.co.uk

சுவாச பிரச்சனைகளும் துளசியின் பங்கும்

மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.

வாத, பித்த, கபம் மாறுபாடே நோய் உண்டாக காரணம் என்று திருவள்ளுவர் நமக்கு விளக்கியுள்ளார். செயல்கள், உணவு இவற்றின் அடிப்படையில் (வாதம், பித்தம், கபம்) இவைமூன்றும் நிலை பிறழ்கின்றன. சோம்பலால் வாதமும், மிதமிஞ்சிய வேலையால் பித்தமும், ஓழுங்குமுறை நழுவிய செயல்களால் கபமும் கூடுகிறது.

இயற்கையில் விளையும் உணவுப்பொருட்களில் வாதபித்தகப தன்மைகள் இயல்பாகவே அமைந்துள்ளன. சில உணவுகளில் இவை அதிகளவில் இருப்பதால் அந்த வகை உணவுகளை உண்ணும்போது அன்றே அவற்றின் விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது. உதாரணமாக உருளை, வாழை, இறைச்சி இவற்றால் வாதம் அதிகமாகிறது. கத்திரி, பப்பாளி, கோழி இறைச்சி ஆகியவற்றால் பித்தம் அதிகமாகிறது. வெங்காயம், தக்காளி, முட்டை ஆகியவற்றால் கபம் மிகுதியாகுகிறது.

இந்த மூன்றும் தன்நிலையில் இருந்து பிறழ்வதால் நோய் உண்டாகிறது. இந்த மூன்றையும் சரியான அளவில் வைக்க சில மூலிகைகள் உதவுகின்றது. வாதத்தை சீர்செய்ய வில்வமும், பித்தத்தை சரிசெய்ய வேம்பும், கபத்தை சீராக்க துளசியும் பயன்படுகின்றன. இவற்றில் துளசி எவ்வாறு கப நோய்களுக்கு மருந்தாகிறது என்று பார்ப்போம்.

ஐயம் வயிறுளைச்சல் அத்திசுரம் தாகமும்போம்
பையசர மாந்தம் பறங்குங்கான் மெய்யாக
வாயின் அரோசகம்போம் வன்காரஞ்சூடுள்ள
தூயதுளசிதனைச் சொல்.

துளசி இலை-thamil.co.ukஐயம் என்றால் கபம் சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்று, உளைச்சல், சுரம், நீர் வேட்கை, மாந்தம், நாவின் சுவையின்மை இவை அனைத்தையும் துளசி போக்கிவிடும் என்று இப்பாடல் விளக்குகிறது.

துளகி குணமாக்கும் நோய்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். ஆனால் துளசி, கபம் சம்பந்தமான நோய்களை குணமாக்குவதில் பெரும்பங்கு துளசிக்கு உண்டு.

துளசியின் இத்தனை மருத்துவகுணங்களும் கபம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் என்று தற்போதைய ஆய்வாளர்கள் ஆய்வில் தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் இருமல், சளி, கோழைக்கட்டு, மூக்கில் நீர் வழிதல், தலைவலி, மூக்கடைப்பு, மூச்சுக்குழல் அழர்ஜி, நெஞ்சுச்சளி, மூச்சிவிட சிரமப்படுதல் போன்ற பல சுவாசம் சம்பந்தப்பட்ட கப நோய்களை துளசி குணமாக்கும் சக்தி கொண்டது.

பத்து கிராம் அளவு துளசி இலையை எடுத்து கசக்கி சாறு பிழிந்து காலை, மாலை இருவேளை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் சளி தொல்லை எளிதில் தீர்ந்துவிடும்.

ஐந்து கிராம் துளசி இலையை இரண்டு மிளகு சேர்த்து அரைத்து காலைமாலை வேளைகளில் வெந்நீரில் குடித்து வந்தால் காய்ச்சலுடன் கூறிய சளி குறையும்.

சிறிது துளசி இலைகளுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து அந்த சாறை சிறிது தேன் சேர்த்து உட்கொண்டால் ஆஸ்துமா, நெஞ்சுசளி, சளியுடன்கூடிய சுரம் குணமாகும்.

தொண்டை கரகரப்பு, அடைப்பு, போன்ற நேரங்களில் சிறிது துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த பின் அந்த நீரை தொண்டையில் படும்படி கொப்பளித்தால் உடனே குணமாகும்.

துளசி செடி-thamil.co.ukதுளசி செடியை செழிப்பாக வளர்க்க

* முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே துளசி செடி நன்கு செழிப்புடன் வளரும். துளசி செடிக்கு நேரடியான சூரிய வெளிச்சம் ஆகாது. எனவே துளசிச் செடியை சூரிய வெப்பம் நேரடியாக படும் இடத்தில் வைத்து வளர்க்காமல், அளவாக வெயில்படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

* துளசி செடிக்கு அதிகப்படியான ஈரப்பசையானது மிகவும் பிடிக்கும். எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருவேளை துளசிச் செடியானது சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால், அதற்கு இன்னும் அதிகப்படியான நீரானது தேவைப்படும்.

* துளசி செடிக்கு, ஈரப்பசையை தக்க வைக்கும் மண் மிகவும் அவசியம். எனவே தான் துளசி செடியானது பெரும்பாலும் களிமண்ணில் வளர்கிறது. ஏனெனில் மண்ணிலேயே களிமண் தான் அதிகப்படியான ஈரப்பசையை தக்கக் வைக்கக்கூடியது.

* துளசி செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு எந்த ஒரு இரசாயன உரமும் தேவையில்லை. ஆனால் செடியை வைப்பதற்கு முன், அதற்கு ஈரத்தை தக்கவைக்கும் ஈர வைக்கோலை வைத்து, பின் மண்ணை போட்டு, செடியை வைக்க வேண்டும். இதனால் செடியானது வறட்சியடையாமல் இருக்கும். சொல்லப்போனால், துளசி செடிக்கு, அந்த வைக்கோல் கூட தேவையில்லை. அது இல்லாமலேயே நன்றாக துளசிச் செடி வளரும்.

* துளசி செடியில் பூக்கள் வளர ஆரம்பித்துவிட்டால், துளசிச் செடியின் இலையிலிருந்து வரும் வாசனை மட்டும் போவதில்லை, அதன் வளர்ச்சியும் தான் தடைப்படும். எனவே செடியில் பூக்கள் வளரை ஆரம்பித்துவிட்டால், அந்த பூக்களை அகற்றிவிட வேண்டும். பூக்கள் மலரும் வரை காத்திருக்காமல், அது மொட்டாக இருக்கும் போதே அகற்றிவிட வேண்டும்.

* துளசி செடிக்கு எந்தவொரு பூச்சிக்கொல்லி மருந்தும் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, செடியை பூச்சிகள் தாக்காமல் தடுக்கும்.

-tamilkathir.com
-viyapu.com
-ஆயுர்வேதம்.com
-dinakaran.com
-tamil.boldsky.com

தொகுப்பு – thamil.co.uk