பளிச்சென்ற பார்வைக்கு பாலக்கீரை

பாலக் கீரை-thamil.co.ukமூலிகையின் பெயர்  – பாலக். (PALAK.)
தாவரப்பெயர்  – BETA VULGARIS.L.
தாவரக்குடும்பம்  – CHENOPODIACEAE.
வளரியல்பு – பாலக் ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச் செடி. இதன் தாயகம் ஐரோப்பா. இங்கு கடற்கரையோரம் Sea Beet லிருந்து உருவானது. பின் வட ஆபிரிக்கா, ஆசியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்கரை எடுக்கிறார்கள். இதில் பல வகைகள் உண்டு. ஸ்பெயின் நாட்டில் பாலக் அதிகம் சாகுபடி செய்கிறார்கள் இதை ஆங்கிலத்தில் “MINES OF MINARALS” என்று சொல்வார்கள். அங்கு இதன் குடும்பம் AMARANTHACEAE என்கின்றனர். பாலக் வளர வளமான மண் தேவை. மணலிலும் வண்டல் மண்ணிலும் நன்கு வளரும். இதன் மண் அளவு 7 PH. எப்போதும் இதற்கு ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்கு மித சீதோஸ்ண காலநிலை தேவை. பாலக் ஒரு அடி முதல் 2 அடி உயரம் வரை வளரக் கூடியது. இது 0.75 அடி முதல் 1.5 அடிவரை பக்க வாட்டில் வளரும். இதற்கு நைதரஜன் உரம் அதிகம் தேவைப்படும்.

இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. வடிகால் வசதி அவசியம். இதைப் பயிரிட முதலில் மண்ணை நன்கு உழுது உரம் இட்டு மிருதுவாக்க வேண்டும். பின்18 அங்குல இடைவெளி இருக்குமாறு பார்கள் அமைத்து அதன் பக்கவாட்டில் 1.5 அங்குல ஆழத்தில் விதைகளை 8 அங்குல முதல் 12 அங்குல இடைவெளியில் ஊன்ற வேண்டும். இதற்கு 3 நாட்களுக்கொருமுறை நீர் பாச்ச வேண்டும்.

பத்து நாட்களுக்குள் நாற்றுக்கள் முளைத்து வளர ஆரம்பிக்கும். ஈரப்பதம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்த 30 வது நாளிலிருந்து பாலக் இலைகளை வெளிப்பக்கத்திலிருந்து வெட்டி உபயோகப்படுத்தலாம். அறுவடை சுமார் 6-8 முறைசெய்யலாம். இலைகளை பூ விடும் முன்பு பறித்து விட வேண்டும். இது ஒரு ஆண்டுப் பயிர். இதில் விட்டமின் A’ மற்றும் C உள்ளது. பாலக் விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்
பாலக் தலைவலியைக் குணப்படுத்தும். மூளைவளர்ச்சிக்கு உதவும். இதன் இலையைச் சாப்பிடுவதால் குடற்புண்ணைக் குணப்படுத்தும். தலைமுடி உதிர்வதையும், மொட்டையாவதையும் தடுக்கும்.

பாலக் இலைச் சாற்றைக் கொப்பளித்தால் பல்வலி குணமாகும். மஞ்சக் காமாலை சரியாகும்.

இதன் இலைச் சாற்றை வடிகட்டி 3 சொட்டுக் காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.

பாலக் வேரிலிருந்து வெளிநாட்டில் ‘வொயின்’ தயார் செய்கிறார்கள். பிரிட்டனில் 20 சதம் சர்க்கரை இருப்பதால் அதை எடுக்கிறார்கள்.

பாலக் சமூலத்தில் சாறு எடுத்து புற்றுநோயைக் குணப்படுத்துகிறார்கள். அவை Leukemia, Breast, Esophagus, Glands, Intestines, Leg, Lip, Lung, Prostate, Rectum, Spleen, Stomach and Uterus. போன்றவை.

பாலக் விதையைக் கொதிக்க வைத்து வடிகட்டி அதன் நீரை மிதமான சூட்டில் இரண்டு டம்ளர் வீதம் மூன்று வேளை குடிக்க ‘GENITAL TUMORS’ ஐ குணப்படுத்தும்.

பாலக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும்.

குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது. இருதயத்திற்கு நல்லது.

பத்து கிராம் பாலக் இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம், பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். பாலக் சமையலில் பல விதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

பளிச்சென்ற பார்வைக்கு பாலக்கீரை

பாலக்கீரை--thamil.co.uk
பாலக்கீரையில் Vitamin – A அதிக அளவில் உள்ளதால் இது கண்பார்வைக்கு மிகவும் சிறந்தது. கண் நோய்களான மாலைகண் நோய் மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்பு போன்றவை வராமல் கட்டுபடுத்த வல்லது. கண் பார்வை நல்ல தெளிவாக தெரிய இந்த கீரை உதவு செய்கின்றது.

இது இரத்ததை இதயத்திற்கு சீராக எடுத்து செல்ல உதவுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. கொழுப்புசத்து உடலில் சேராமலும் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பையும் அகற்றுகிறது.

புரத சத்து நிறைந்தது எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் Heart attack, Strock போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பாலக்கீரை.thamil.co.ukசிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதால் இது அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது.  இரும்புச்சத்து நிறைந்தது, உடல் எடையை குறைக்கிறது.

மக்னீசியம், சிங், காப்பர் மற்றும் விட்டமின் – கே இதில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருக்க செய்கின்றன.

போலிக் ஆஸிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும்.

இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைக்க கூடியது. எனவே Diabetes உள்ளவர்களுக்கும் சிறந்தது. புற்றுநோய் நோய் கலங்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது.

உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது.

கல்சியம் பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து குறைந்த அளவே இருந்தாலும் ஃபோலிக் ஆசிட் மற்றும் விட்டமின் C  மிக அதிகம். மேலும் இதில் ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். தைமின், ரிபோஃப்ளோமின் மற்றும் நார்ச்சத்து ஓரளவுக்கு இருக்கிறது. பீட்டா கரோட்டின் நிறைந்து இருக்கிறது. வேகவைத்து அரைத்த பாலக் கீரையை சப்பாத்தியுடன் வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்ளலாம்.

எனவே இவ்வளவு சத்துள்ள இந்த கீரையை வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களாவது எடுத்து கொள்ளுங்கள்! நோயின்றி வாழுங்கள் !

-இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்
-samayalulagam.blogspot.co.uk

தொகுப்பு – thamil.co.uk