பலா – முதுமையைத் தடுக்கும்

மூலிகையின் பெயர் – பலா
தாவரவியல் பெயர் – ARTOCARPUS HETEROPHYLLUS
தாவரவியல் குடும்பம் – MORACEAE
பயன்படும் பாகங்கள் – மரம், பழம், காய், பிஞ்சு, இலை, பிசின், கொட்டை தோல், வேர்.
வேறு பெயர்கள் – சக்கை, பலவு, பலாசம், வருக்கை, ஏகாரவல்லி.
வகைகள் – கறிப்பலா, ஆசினிப்பலா, கூழைப்பலா, வருக்கைப்பலா.

Jackfruitவளரியல்பு – பலா ஒரு மரவகையைச் சார்ந்தது. இதன் பிறப்பிடம் தென் கிழக்கு ஆசியா. வெப்ப நாடுகளில் நன்கு வளரும். இதன் அடிபாகம் 30 – 40 செண்டி மீட்டர் விட்டத்தில் இருக்கும். இது 8 மீட்டர் முதல் 25 மீட்டர் வரை வளரும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும், அகலமாக இருக்கும். ஒடித்தால் பால் வரும்.

இதன் அடிமரத்தில் சிறுகிளை உற்பத்தியாக அதில் பச்சை நிறத்தில் பூக்கள் வரும். பின் மஞ்சளாக மாரும். பூக்கள் தன் மகரந்தச்சேர்க்கையால் பிஞ்சுகள் விட்டுக் காயாக வளரும். வெளித்தோற்றத்தில் முள்போன்ற முனைகள் இருக்கும். உள்ளே நாரும் பலாசுழைகளும் இருக்கும். பலாச்சுழை மஞ்சள் நிறத்தில் இருக்கம். சுவையாக இருக்கும். அதனால் முக்கனிகளில் ஒன்றாகும். நடுவில் தண்டுகள் இருக்கும். சுழைக்குள் கொட்டைகள் இருக்கும். கறிப்பலா பொரியல் செய்யப் பயன்படுத்துவார்கள். மேல் கிளைகளிலும் காய்கள் விடும்.

பலாமரத்திலிருந்து பலவிதமான மரச்சாமான்கள், பொம்மைகள் செய்வார்கள். பலகைகள் சட்டங்கள் அருத்துப் பயன்படுத்துவார்கள். பலாவை வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பார்கள். இந்தியா, பிலிப்பன்ஸ், தாய்லந்து மற்றும் இலஙைகை ஆகிய நாடுகளில் காணலாம். பலா மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதங்களில் காய் விடும். ஒரு பலாப்பழத்தின் எடை சுமார் 9 முதல் 18 கிலோ எடை இருக்கும். இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவ பயன்கள் நிறைந்த பலா மரம்

பலா.பலா இலை
பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும். வாயுத் தொல்லைகள் நீங்கும். பலா இலைகளை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் ஆறும். பல்வலி நீங்கும்.

பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.

தழை கால்நடைகளுக்குத் தீவனமாகும்.

பலா பிஞ்சுபலா பிஞ்சு
பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும், நீர்ச்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும். உடலுக்கு வலு கொடுக்கும்.

வாத, பித்த, கபத்தை சீராக வைத்திருக்கும். நரம்புத் தளர்வைப் போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.

அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

பலாப்பழம்
முக்கனிகளில் இரண்டாவது கனியாக பலாப்பழம் உள்ளது. மிகுந்த இனிப்புச் சுவையுடையது. பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான்.

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும். பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும். சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும், சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும். மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும். பழுத்த, நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது, மருத்துவ குணம் கொண்டது. நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. விட்டமின் A, B, C, கல்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது.

கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கல்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.

விட்டமின் தவிர கல்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன. விட்டமின் A உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும்.

பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் உள்ள விட்டமின் பி6, இரத்தத்தில் ஹோமோசிஸ்டின் அளவை குறைத்து, இதயத்தை சீராகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவும். இரத்தத்தை விருத்தி செய்யும். உடலுக்கு ஊக்கமளிக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வூட்டும்.


பலாப்பழம் தினமும் சப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பலாப்பழம்புரதச்சத்து நிறைந்தது
பலாப்பழத்தில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

புற்றுநோயைத் தடுக்கும்
பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டு ஆகிய அமில சத்துக்கள் உள்ளன. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்
பலாப்பழத்தில் பொட்டாசிய சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

கண் பார்வையை மேம்படுத்தும்
பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் A சத்து அதிகம் உள்ளது.

ஸ்துமாவை குணமாக்கும்
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். மேலும், இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மலச்சிக்கல்
பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

புரதம்
பலாப்பழத்தில் புரதம் அதிகம் இருப்பதால், பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி
பலாப்பழத்தில் விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.

ஆற்றல்
பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சிம்பிள் சர்க்கரையான ஃப்ருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் அதிகம் உள்ளது.

செரிமானம்
பலாச்சுளைகளை தேனில் நனைத்து சாப்பிட்டால் நன்கு சீரணமாகும். பலாப்பழத்தில் நார்ச்சத்து வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

சரும ஆரோக்கியம்
தற்போது விரைவிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து, சருமத்தை இளமையோடு பாதுகாக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்
பலாப்பழத்தில் உள்ள கல்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, எலும்புகளை வலிமையோடும் வைத்துக் கொள்ளும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நாள்பட்ட மூட்டுவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த சோகை
பலாப்பழத்தில் விட்டமின் A, C, E, K, நியாசின், விட்டமின் B6, ஃபோலேட், பேன்டோதெனிக் ஆசிட், காப்பர், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால், அவை இரத்தம் உருவாக உதவும். மேலும் இப்பழம் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சி, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

சளி மற்றும் நோய்த்தொற்றுகள்
பலாப்பழத்தில் விட்டமின் C அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது, சளி மற்றும் நோய்த்தொற்றுகள் தாக்குவது தடுக்கப்படும். மேலும் ஒரு கப் பலாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். காய்ச்சலை குணமாக்கும்.

இரத்த சர்க்கரை அளவு
உடலில் மாங்கனீசு குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவது. ஆனால் இந்த சத்து பலாப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம்.

தைராய்டு
தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு காப்பர் மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் காப்பர் குறைபாடு ஏற்பட்டால், அது தைராய்டு சுரப்பியில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இத்தகைய காப்பர் பலாப்பழத்தில் இருப்பதால், தைராய்டு இருப்பவர்கள், இதனை உட்கொள்வது நல்லது.

மாலைக்கண் நோய்
பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் A உள்ளது. ஆகவே இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இதய நோய்
பலாப்பழத்தில் உள்ள விட்டமின் B 6, இரத்தத்தில் ஹோமோசிஸ்டின் அளவை குறைத்து, இதயத்தை சீராகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட உதவும்.

அல்சர்
அல்சர் இருப்பவர்கள், பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குணமாவதுடன், வயிற்றுப் பிரச்சனைகளும் நீங்கும்.

குறிப்பு – பெண்கள் மாதவிடாய் காலங்களில் பலாபழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளுக்கு மந்தநோய் ஏற்படும்.

மூலநோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும் ஆகாது.  இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.

பலா விதைகள்-thamil.co.ukபலாக் கொட்டை
பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக்கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும். பலாக் கொட்டைகளை சுட்டும், அவித்தும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். வாயுத் தொல்லைகளை நீக்கும்.

100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் A, B, C போன்ற விட்டமின்கள், கல்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், கலங்களின் முதிர்ச்சி, கலங்களின் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டவை.

இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மையாக அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20, உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து,  தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மையாக அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும்.

பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.

சரும சுருக்கம்
பலாப்பழத்தின் விதையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், ஆறே வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

கூந்தல் வளர்ச்சி
பலாப்பழத்தின் விதைக்கு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆகவே இதன் விதையை சமைத்து சாப்பிட்டு வந்தால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருந்து, இதனால் தலையில் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பட்டுப்போன்ற சருமம்
நல்ல பட்டுப் போன்ற சருமத்தைப் பெற, பலாப்பழத்தின் விதையை உலர வைத்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, உலர வைத்து கழுவி வேண்டும். இப்படி செய்து வந்தால் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.

விட்டமின் A
பலாப்பழத்தின விதையில் உள்ள விட்டமின் A, முடிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முக்கியமாக முடியின் ஆரோக்கியத்தையும், முடியில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கும்.

பலாத் தோல்ச் சக்கையும் பயனுடையதே. இதிலிருந்து 0.03% நறுமணமுடைய உலர்தைலம் தயாரிக்கலாம்.

வயதான மரங்களின் வேர்களைக் கொண்டு படச் சட்டங்கள் தயாரிக்கின்றனர்.

மரம் வீணை, தம்புரா முதலிய இசைக் கருவிகள் செய்ய மிகவும் ஏற்றது. மேஜை, நாற்காலிகள் செய்ய மஹோ கனியைப் போன்று சிறந்ததாகும். கட்டிடச் சாமான்கள் செய்யலாம்.

 

பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.”  – கணக்கதிகாரம்

விளக்கம்
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்!

-மூலிகைவளம்
-உணவே மருந்து

தொகுப்பு – thamil.co.uk