HIV எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள்

எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள்

எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் ஆகும். அது பரவுவதால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இந்நோயின் பொதுவான அறிகுறிகளை ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் அதன் பாதிப்புகளை ஓரளவு தவிர்த்திட முடியும். இந்நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை உணர்ந்து கொண்டால், சிகிச்சை செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். எச்.ஐ.வி நோய் உள்ளதா என்று சோதனை செய்யச் செல்வதே சற்றே சங்கோஜத்தை உண்டு பண்ணுவதாக இருந்தாலும், வேறு பல வழிமுறைகளிலும் இந்நோய் பரவியுள்ளதை உறுதிப்படுத்த முடியும்.

இன்றைய அரசு மருத்துவ மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிக்கவும் வசதிகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் பதிவேடுகளை இரகசியமாக பராமரிக்கவும் செய்யும் வசதிகள் உள்ளன. எச்.ஐ.வி-ஐ ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், அது எய்ட்ஸ் என்ற முழு வல்லமை வாய்ந்த உயிர்க்கொல்லி நோயாக வளர்வதை தவிர்த்திட முடியும். எச்.ஐ.வி-யின் அறிகுறிகள் அதன் நிலை மற்றும் தீவிரத்தைப் பொறுத்தே அமைகின்றன. இந்த கிருமியால் பாதிக்கப்பட்டவர் தன்னிடமிருந்து, மற்றவர்களுக்கு தன்னுடைய உடலின் நீர்மங்களை கொடுப்பதன் மூலம் இந்நோய் பல்கிப் பெருகவும் காரணமாக இருப்பதால், உடனடியாக எச்.ஐ.வி-க்கு முறையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் பல வருடங்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து, பின்னர் வெளிவரும். நீங்கள் எச்.ஐ.வி தொற்று உள்ளதாக சந்தேகப்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது உத்தமம். எச்.ஐ.வி, அதன் சிகிச்சை முறை மற்றும் காரணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக எய்ட்ஸ் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கே எச்.ஐ.வி-யின் சில ஆரம்ப கால அறிகுறிகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

1. எடை குறைதல்

உங்கள் உடல் எடையில் வேகமான மாற்றங்கள் – அதாவது வழக்கத்தை விடவும் வேகமாக உடல் எடை குறைந்து வந்தால், நீங்கள் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு எடை குறைவது எச்.ஐ.வி-யின் அறிகுறிகளில் ஒன்றாகும். எடை குறைவது இந்நோயின் முன்னேற்றத்தை குறிப்பதாக இருக்கும். இதன் அர்த்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

2. தொடர்ந்த இருமல்

தொடர்ச்சியான இருமல் எச்.ஐ.வி நோயின் அறிகுறியே. ஆனால், குப்பைகளை சுவாசிப்பதால் ஏற்படும் அலர்ஜியாகவும் கூட இது இருக்கலாம். எனினும், தொடர்ந்து வரும் காலங்களில் எச்.ஐ.வி வளர்ந்து வந்தால், இருமலும் அதிகரிக்கும்.

3. நகம் சொல்லும் கதை

எச்.ஐ.வி கிருமியின் பாதிப்பை உங்கள் நகங்களில் கண்டறிய முடியும். எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் விசித்திரமாக இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நகம் பிரிவதும், அவற்றின் வண்ணங்கள் குறைவதும் இதன் ஒரு பகுதியாகும். எனவே, இந்த அறிகுறியை கண்டால் பரிசோதனை செய்து கொள்ளவும்.

4. களைப்பு

நாட்களின் பெரும்பாலான நேரங்கள் நீங்கள் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்பதாக உணர்ந்தால், அதனை எச்.ஐ.வி பாதிப்பாக கருத முடியும். எச்.ஐ.வி-வின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றாகவே இந்த களைப்பு நிலை உள்ளது.

5. தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

உங்களுடைய தசைகள் மற்றும் மூட்டுகளில் தாங்கவொண்ணாத வலிகள் இருந்தால், எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதுவும் எச்.ஐ.வி-ன் அறிகுறிதான். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் உலக எய்ட்ஸ் தினங்களில் எய்ட்ஸ் தொடர்பான உண்மைகளும், விளக்கங்களும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன.

6. தலைவலி

தலைவலி உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டால், அதனையும் எச்.ஐ.வி பாதிப்பின் அறிகுறியாக கருதலாம். அது எச்.ஐ.வி-க்கான ஆரம்ப அறிகுறியாக இருப்பதால், ARS பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

7. தோலை கவனியுங்கள்

எச்.ஐ.வி நோயின் ஆரம்ப மற்றும் முற்றிய நிலைகளில் தோல் சொரசொரப்பாக மாறிவிடும். இதனால் உங்கள் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு மிக்க பகுதிகள் உருவாகின்றன. எனவே, உங்கள் தோலை சற்றே நெருக்கமாக கவனிக்கவும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ம் நாள் உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தின கருப்பொருளாக இருப்பது ‘பூஜ்யத்தை அடைவோம் : எச்.ஐ.வி பாதிப்பு பூஜ்யமாக இருக்கட்டும்’ என்பதே. ஒவ்வொரு ஆண்டும் இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி பாதிப்பு குறித்த தகவல்களும், நுட்ப கணக்கீடுகளும் திறனுடன் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே எச்.ஐ.வி பாதிப்புகளை சிகிச்சை செய்வதை விட, வராமல் தவிர்ப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவோம். அறிவோம், வளர்வோம்!

எய்ட்ஸ் பற்றிய பொதுவான கட்டுக்கதைகள்!!!

நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் நாம் ஊட்டச்சத்து நிறைந்த உணவையே உட்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் நம்மை பாதிக்கும் நோய்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். எனினும், சில நோய்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றது. இவை சாதாரண காய்ச்சல், ஜலதோஷம், போன்றவைகளாக இருந்தால் ஆபத்து எதுவும் இல்லை. ஆனால், சில வகை நோய்கள் நமது உயிரை பறிக்கும் நோய்களாக இருக்கின்றது. இவற்றை கண்டறிந்து சரியான முறையில் சிகிச்சை அளித்து நோயில் இருந்து விடுபடலாம்.

இவ்வுலகம் முழுவதிலும் 70 மில்லியனுக்கும் மேலான மக்கள் அக்குவயர்ட் இம்மியுனோ டெபிஷியென்சி சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 34 மில்லியனுக்கும் மேலான மக்கள் எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்துவருகின்றனர். இந்த கொடிய நோயை குணப்படுத்த வழி இல்லாததால், உயிருடன் வாழுவதற்கு இந்நோயோடு போராடவேண்டும். மக்களிடையே நிலவிவரும் எய்ட்ஸ் நோயின் தவறான கருத்துகளாலும் புனைக்கதைகளாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளியாகவே பார்க்கச் செய்கின்றது. பெரும்பாலானோர் பிறப்பின் காரணமாகவோ தற்செயலான வழியாகவோ அல்லது எதிர்பாராத வழியாகவோ இந்த ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் இந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டால் பயம் கொள்ளுகின்றனர். எய்ட்ஸ் நோயை பற்றிய அடிப்படை அறிவு இல்லாத பெரும்பாலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகத் தெரியாததால் அவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். எய்ட்ஸ் நோயைப் பற்றி பரவி வரும் தவறான கருத்துக்களால், மக்கள் அவர்களுடன் பழக பயந்து அவர்களை விலக்கி வைப்பதால் அவர்களின் உணர்ச்சிகள் பாதிக்கப்படுகின்றது. எய்ட்ஸ் பற்றிய பொதுவான அறிவு இல்லாததாலும் அதனை பற்றிய கட்டுக்கதைகளாலும் பெரும்பாலான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தவறான களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்றைய தகவல் உலகத்தில், நாம் அனைவரும் எய்ட்ஸ் நோய் பற்றிய புனைக்கதைகளை அழித்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இருக்கும் தவறான கருத்துக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களின் ஆதரவு, அன்பு, அக்கறை போன்றவை தேவைப்படும். இந்த நோயை பற்றி பரவிவரும் புனைகதைகளில் இருந்து மீண்டு வருவதற்கு தோள் கொடுக்க வேண்டும். மேலும், இந்த புனைக்கதைகளால் சாதாரண மக்கள் பாதிப்படைந்து எய்ட்ஸ் பற்றிய தவறான எண்ணத்தை கொண்டுள்ளனர்.

எய்ட்ஸ் நோயை பற்றிய சில தவறான கருத்துக்கள்…

உடலுறவினால் மட்டுமே வரும்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்துக்கொண்டால் எய்ட்ஸ் நோய் வந்துவிடும் என்பது இந்நோயைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளில் ஒன்றாகும். ஏன்னெனில், எச்.ஐ.வி யானது இரத்தத்தின் மூலமாகவே பரவும் அல்லது பாதிக்கப்பட்ட இரத்தத்தை இன்னொருவருக்கு செலுத்துவதன் மூலமாகத் தான் பரவும்.

அவர்களுடன் சேர்ந்து வாழ்வது

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் நம்முடன் இருந்தால் அதன் மூலமாக நமக்கும் பரவும் என்பது இந்நோய் பற்றிய கட்டுக்கதைகளில் முற்றிலும் தவறான ஒன்றாகும். தொடுதல், கண்ணீர்,வியர்வை, எச்சில் போன்றவற்றின் மூலமாக எச்.ஐ.வி நோய் பரவாது. அதனால், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரத் தழுவிக் கொள்ளலாம்.

கொசுக்கள்

கொசுக்கள் மூலமாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய் பரவாது. இந்த வைரஸ் கொசுக்கள் மூலமாக பரவாது என பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கொசுக்களின் உடலில் இந்த வைரசின் ஆயுள் காலம் சிறிது நேரம் மட்டும்தான்.

எய்ட்ஸ் தான் வாழ்வின் முடிவு

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பின்பும் ஒருவர்க்கு வாழ்வு இருக்கின்றது. இன்றைய மேம்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பான ஆண்டிரெட்ரோவைரல் மருந்தின் மூலமாக எச்.ஐ.வி பாசிடிவ் உள்ள மக்கள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரின் ஆயுள் காலத்தை நீட்டிக்கலாம்.

வாய்வழி உடலுறவினால் பாதிக்கும்

வாய்வழி உடலுறவின்போது எச்.ஐ.வி நோய் நமது உடல் அமிலங்கள் மூலமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இவை நமது வாயில் உள்ள வெடிப்புகள், புண்கள், சிராய்ப்புகள் மற்றும் வாய் தொண்டை போன்றவற்றில் ஏற்படும் தொற்று நோய்களாலும் பரவும்.

டாட்டூஸ் அல்லது உடலை துளைக்கும் பொருட்கள்

டாட்டூஸ் அல்லது உடலை துளைக்க பயன்படுத்தப் படும் சுத்தீகரிக்கப்படாத பொருட்கள் மூலமாக எச்.ஐ.வி நோய் பரவும். நமது உடலையோ அல்லது சருமத்தையோ துளைக்கும் எந்த பொருளையும் ஒரு முறைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. அப்படி உபயோகித்தால் முறையான வழியில் அவற்றை சுத்தீகரித்து பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பிறப்பு

ஒரு எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோயுள்ள பெண் தனது கருவுற்றிருக்கும் காலத்தில் முறையான சிகிச்சைகளையும் மேற்கொண்டால் எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோயில்லாத குழந்தையை பெற்றெடுக்க முடியும். அந்தத் தாய் தன் குழந்தைக்கு பால் புகட்ட கூடாது.

எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட இருவர் பாதுகாப்பின்றி உடலுறவு வைத்துக் கொள்ளுதல்

எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோயில் பல வகை உள்ளது. உங்களுக்கு எய்ட்ஸ்/எச்.ஐ.வி நோய் இருந்தாலும், வேறு வகையான எச்.ஐ.வி-யால் பாதிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மருந்து எதிர்ப்பு விகாரங்கள் மூலமாக பாதிக்கப்படலாம்.

எச்.ஐ.வி எய்ட்ஸ் இரண்டுமே ஒன்றுதான்

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு CD4 அளவு 200 குறைவாக இருக்கும் அல்லது அவர்கள் புற்றுநோய் அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு மனிதர் எய்ட்ஸ் இல்லாமல் எச்.ஐ.வி-யுடன் பல வருடங்கள் வாழலாம். உங்களுக்கு எச்.ஐ.வி உள்ளது என்றால் எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது.

– Ps Aravindan