அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி -thamil.co.ukஅம்மான் பச்சரிசி--Thamil.co.ukஅம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும். இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Botanical name : Euphorbia hirta
common name : Snake weed

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் – பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு – அகத்தியர் குணபாடம்

இத்தாவரத்தின் முழுப்பகுதியும் மருத்துவத்தில் பயன்படுகிறது. துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மையுடையது. குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும்,மலமிளக்கும், சுவாசத்தைச் சீராக்கும், இருமலைத் தணிக்கும், பெண்களுக்கு பால் சுரப்பைத் தூண்டும், விந்து ஒழுக்கை குணமாக்கும்.

அம்மான் பச்சரிசிப் பால் ஒரு அரிய மருந்தாகும். முகத்தில் தடவ முகப்பரு, எண்ணெய் பசை ஆகியவை மாறும். காலில் பூசிவர கால் ஆணி,பாதத்தில் ஏற்படும் பித்தவெடிப்பு ஆகியவை மறையும். பால் பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள்மருந்தாகக் கொடுக்க இரைப்பு குறையும். ஆஸ்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணைமருந்தாக பயன்படுகிறது.

The plant flowers and fruits all year long. There are the following phytochemicals in asthma weed: sterols, alkaloids, tannins, glycosides, triterpenoids, alkenes, phenolic acids, choline, shikimic acid. Asthma weed has antiviral and – bacterial properties. It is used against asthma, bronchitis, worm infestation, conjunctivitis and dysentery. The latex of the plant is used for warts and cuts. It also has lactogenic properties.

தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள், ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் சாதாரணமாகக் காணப்படும் களைச்செடி. ஆண்டு முழுவதும் பரவலாகக் காணப்படுபவை. அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும் மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். 50 செ.மீ. வரை உயரமாக வளரும். இலைகள் எதிரெதிராக அமைந்தவை, சொரசொரப்பானவை. பச்சை, சிவப்பு நிறங்களில் இலைகள் காணப்படும். சிறுபூக்கள் தொகுப்பாக அணுக்களில் அமைந்திருக்கும். பூக்கள் வெண்மையாகவும், காம்புகளுடனும் காணப்படும்.

இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால் வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு சுரக்காமல் இருக்கும். போதுமான அளவு சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும். அது நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நின்றுபோகும்.

இதன் இலை 15 எடுத்து அரைத்து, 1 டம்ளர் பசும் மோரில் கலந்து காலை, மாலை குடித்து வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு, வெள்ளைச் சொட்டு குணமாகும். (உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும். சாதத்தில் பசும்பால் சேர்க்கலாம். கோப்பி, தேனீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்).

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.  இதன் இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

இதன் இலையுடன் கீழாநெல்லியிலையையும் சம அளவாகச் சேர்த்து எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு 1 டம்ளர் எருமைத் தயிரில் சாப்பிட்டு வர, உடல் எரிச்சல், நமைச்சல், மேக இரணம், தாது இழப்பு நீங்கும்.

இதன் இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.

மரு-skin tag-thamil.co.ukஅம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது “மரு” [Skin Tag] ஆகும். இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும்.

ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இலை, தண்டு, பால், பூ ஆகியவை பயன்தரும். இதன் பாலை நக சுற்றிக்கு தடவ குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையை அரைத்து தினமும் எலுமிச்சை அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையுடன் கடுக்காய் கொடி கலந்து சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.

அம்மான் பச்சரிசிக் கீரையுடன் 3  மிளகு, 3  வேப்பிலை சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரை, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.

இதன் இலையுடன் அதேயளவு தூதுவளை இலையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, உடல் பலப்படும்.

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம் ஆகியவை போகும். சுக்கில தாது விருத்தியாகும். இதை வெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர். இதன் பாலை வைத்துக்கொண்டு ஒரு வித்தைகூட காட்டலாம் ஒரு காகித துண்டில் அம்மான் பச்சரிசி பாலால் ஏதாவது ஓர் உருவம் வரைந்து உலர்த்தி பின் நண்பர்களிடம் காட்டவும் பின் அனைவரும் அது வெறும் காகிதம் தான் எனக் கூறியதும் அதைத் தீயில் கொளுத்திக் காட்ட வரைந்த உருவம் தோன்றும். இவ்வாறு வித்தை காட்ட இன்னும் பல மூலிகைகள் இருக்கிறது.

-siddha.com
-grannytherapy.com

தொகுப்பு -thamil.co.uk