மாரடைப்பை தடுக்க சில எளிய வழிகள்

மாரடைப்பு-thamil.co.ukவேகமான இந்த உலகத்தில் ஜனனம் போல், மரணமும் வேகமாக பல்வேறு உருவங்களில் வந்து கொண்டிருக்கிறது. நமது மூதாதையர்கள் கடைபிடித்த உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நெறிகளிலிருந்து படுவேகமாக விலகி, அதைவிட அதிக வேகத்தில் நாம் சென்று கொண்டிருக்கிறோம் எங்கே? எவருக்கும் பதில் தெரியாத கேள்வி இது?

அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள் ஒரு புறம், இன்று 30 மற்றும் 40-களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்! அந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் மோசமான நோயாக மாரடைப்பு இருக்கிறது. 30 வயதான ஆணும், 40 வயதான பெண்ணும் மிகச் சாதாரணமாக எதிர் கொள்ளும் நோயாக மாரடைப்பு விளங்குகிறது. இதிலிருந்து சுலபமாக தப்பிச் செல்வது எப்படி என்று பார்ப்போமா.

உடற்பயிற்சி

நல்ல உடற்பயிற்சியானது ஆரோக்கியத்தின் நண்பன் என்றும், தொடர்ச்சியான உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதையோ மறுக்க முடியாது. தொடர்ச்சியான உடற்பயிற்சியானது மாரடைப்பு மற்றும் பிற இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விலகியிருக்கச் செய்கிறது என ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பீர் beer

பீரில் இதயத்திற்கு மிகவும் ஏற்ற எதிர் வேதிப்பொருட்கள், ரத்தத்திலுள்ள மோசமான கொழுப்புகளின் அளவை குறைக்கின்றன. தினமும் சிறிதளவு பீர் சாப்பிடுவது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனினும், பீர் சாப்பிடுவதில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. அதிகமாக பீர் சாப்பிட்டால், பின் அது உயிருக்கு ஆபத்தையே விளைவிக்கும்.

மீன்

ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்களை அதிகமாக சேமித்து வைத்திருக்கும் மீன்கள் ரத்தக்குழாய் செல்களின் வளர்ச்சியிலும் மற்றும் ரத்தத்தில் முறையான கொழுப்பின் அளவை பராமரிக்கவும் உதவுகின்றன. மேலும், மீன்கள் இரத்தக்குழாய் சவ்வுகளை குறைக்கவும் உதவுகின்றன. உப்பு நீர் மீன் வகைகளான ஹாலிபுட், காட் மற்றும் சால்மன் வகை மீன்களை வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது இதயப் பராமரிப்பிற்கு மிகவும் ஏற்ற உணவுகளாகும்.

பூண்டு

நல்ல காரமான வெள்ளைப் பூண்டு கொழுப்பினைக் குறைக்கும் அற்புத கருவியாகும். இது ஹார்மோன்களின் வேகத்தை அதிகரிப்பதுடன், அழுக்கான ரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது. அதேபோல, தினமும் ஒன்று அல்லது இரண்டு இலவங்கங்களை சேர்த்துக் கொள்வது இதயத்தை பலப்படுத்தும் வேலையை எளிதாக்கி விடும்.

டீ tea

கருப்பு அல்லது பச்சை என்று எந்த நிறத்திலிருந்தாலும் இதயத்தை காப்பதில் டீ சிறந்த சேவையைச் செய்து வருகிறது. டீயிலுள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் திரவ கட்டுப்பாடுகள் மற்றும் ரத்தக்குழாயை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், கொழுப்பின் அளவை குறைக்கவும் பயன்படுகின்றன. இதன் விளைவாக டீ அருந்துபவர்களை மாரடைப்பு தொடுவது 11% தவிர்க்கப்படுகிறது.

பருப்பு வகைகள்

சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வது, இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து வெகுவாக காப்பாற்றும். அதிலுள்ள அதிக நார்ச்சத்து மற்றும் பிற தாதுக்கள் இதயம் சிறப்பாக செயல்படத் தேவையான சத்துகளை உடனுக்குடன் தருகின்றன.

பீன்ஸ் beans

அதிக அளவில் ஃபோலிக் அமிலத்தைப் பெற்றுள்ள பீன்ஸ், ரத்தத்தின் திரவத் தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய தாவர உணவாகும். இதன் மூலம் இதய சவ்வுகளின் நலனை பாதுகாத்திட முடியும். தினமும் ஒரு கப் பீன்ஸ் சாப்பிடுவது, இதயத்தை பாதுகாப்பாக வைத்திடும்.

தண்ணீர்

உடலுக்கு முறையான நீர் பராமரிப்பினை செய்து வந்தால், ரத்தத்தின் நீர்மத்தன்மையும், உள்ளடைப்புகளும் அவ்வப்போது சரி செய்யப்பட்டுவிடும். எனவே நாளொன்றுக்கு குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரை குடித்து வருவது ரத்தத்தின் அமிலங்களை தள்ளும் சக்தியையும் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவி செய்யும்.