வெண்டைக்காயின் உடல்நல நன்மைகள்

வெண்டைமூலிகையின் பெயர் – வெண்டை
தாவரவியல் பெயர் – ABELMOSCHUS ESCULENTUS
தாவரவியல் குடும்பம் – MALUACEAE
வேறுபெயர்கள்– BINDI, GOMBO, OKRA, LADAY’S FINGER
மருந்தாகும் பாகங்கள் – இலை, காய், விதை மற்றும் வேர்.

வளரியல்பு – வெண்டை உலகில் வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் வளரக்கூடிய ஒரு செடி. இது களிமண்ணில் நன்கு வளரக்கூடியது. ஈரப்பதம் வேண்டும். வெண்டை சுமார் 6அடி உயரம் வளரக் கூடியது. இலைகள் சுமார் 10 – 20 செண்டி மீட்டர் நீளம் இருக்கும்.இலைகள் அகலமாக இருக்கும். கிளைகள் 5 – 7 இருக்கும் மஞ்சள் நிறமான பூக்கள் விடும், அவை 4 – 8 செ.மீ. விட்டம் கொண்டதாக இருக்கும். பூ 5 இதழ்களைக் கொண்டிருக்கும். அடிப்பாகத்தில் ஊதா நிறம் மற்றும் சிகப்பு நிறமாக இருக்கும். மகரந்த சேர்க்கையில் காய்கள் விடும். அதன் நீளம் சுமார் 18 செ.மீ. ஆக இருக்கும். காயினுள் அடுக்கான அதிகமான விதைகளைக் கொண்டிருக்கும். விதைகள் முற்றினால் வெண்மையாக இருக்கும். இதன் தாயகம் மேற்கு ஆப்பிரிக்கா, எத்தோப்பியன் மற்றும் தென் ஆசியா என்று சொல்வார்கள்.

மேலை நாடுகளில் இதன் விதையிலிருந்து எண்ணெய் தயாரிப்பார்கள். தண்டு வேரிலிருந்து கடதாசி செய்வார்கள். இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. வெண்டைவிதையை ஒரு இரவு ஊறவைத்து உரம்இட்ட பாரில் 1 மற்றும் 2 செ.மீ. ஆழத்தில் நட்டு தண்ணீர் விட வேண்டும். அது ஆறு நாட்களில் முளைக்கும். மூன்று வாரங்கள் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்க வேண்டும். பின் ஒரு வாரத்தில் பூக்கள் விட்டு மகரந்த சேர்க்கையில் பிஞ்சு விடும். இதை பிஞ்சாக சமையலுக்குப் பயன்படுத்துவர். இதை வியாபார நோக்கில் பயிர்செய்து பயனடைவர்.

வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது. எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப் பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்கள்.

வெண்டைக்காயின் உடல்நல நன்மைகள்

கொழுப்பை கரைக்கும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

ஆண்மையை அதிகரிக்கும்
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா
இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.

ஞாபக சக்தி
மனிதனுக்கு நினைவாற்றல் அவசியத் தேவையாகும். ஞாபக சக்தியை இழப்பது மனிதனுக்கு நோய் போன்றது. ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும். இது மூளை நரம்புகளைக் தூண்டி அங்கு சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியை நன்கு சுரக்கச் செய்யும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெண்டைக் காயை எண்ணெயில் வதக்கி கொடுப்பது நல்லது. அவர்களின் வளர்ச்சியில் வெண்டைக் காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்தம் சுத்தமடைய
இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக செயல்படச் செய்கிறது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களைக் கரைக்கிறது. இரத்த அழுத்தத்தைப் போக்கி இதய அடைப்புகளைத் தடுக்கிறது. சிறுநீரக கோளாறுகளைப் போக்குகிறது. வயிற்றுக் கடுப்புடன் இரத்தம் வெளியேறுவதை தடுக்குகிறது.

மலச்சிக்கலைப் போக்கும்
மலச்சிக்கல் தான் நோய்க்கு மூலகாரணம். மலச்சிக்கலைப் போக்க வெண்டைக்காய் சிறந்த மருந்தாகும். இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவை உடலின் செரிமான சக்தியைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்கும்.

வயிற்றுப்புண் ஆற
வயிற்றில் உண்டான புண்கள் ஆற வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வயிற்றுப் புண் எளிதில் குணமாகும். அசீரணக் கோளாறு நீங்கி நன்கு பசியைத் தூண்டும்.

சரும பாதிப்பு நீங்க
புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படும் சருமத்திற்கு வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதால் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுத்து பாதிப்புகளை நீக்குகிறது.

குழந்தை நன்கு வளர
தினமும் பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது குழந்தைகளை அறிவு ஜீவியாக எதிர்காலத்தில் மாற்றும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அதிக சர்க்கரை உடம்பில் கூடிவிட்டால் வெண்டைக் காயை மூன்று துண்டாக நறுக்கி அதை குறுக்காக நறுக்கி இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் நன்கு கலக்கி காயை எடுத்துவிட்டு, வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் அப்படியே குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். தேவைப்படும்போது இதை பயன்படுத்தலாம்.

உடல் வலுப்பெற
உடல் சோர்வு, மனச்சோர்வு இருந்தால் மனிதன் நிரந்தர நோயாளிதான். இதைப் போக்க வெண்டைக்காயை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நன்கு முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து அருந்தி வந்தால் உடல் வலு கிடைக்கும். மயக்கம் தலைசுற்றல் நீங்கும். சமைத்து உண்பதற்கு பிஞ்சு வெண்டைக்காய் சிறந்தது.

100 கிராம் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்

சக்தி – 31 கலோரி
கார்போஹைட்ரேட் – 7.03 கிராம்
சர்க்கரை – 1.20 கிராம்
– 3.2 கிராம்
கொழுப்பு – 0.10 கிராம்
புரதம் – 2.00 கிராம்
நீர்ச்சத்து – 90.17 கிராம்

வெண்டை-thamil.co.ukவெண்டைக்காய் மருத்துவ பயன்கள்

கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே பயன்ண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது.

உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.

அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது. வெண்டைக்காயில் அடங்கியுள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன செல்களின் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, குடல் மற்றும் சதைப்பகுதிகளில் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன.

முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டு என நிரூபிக்கப்பட்டுள்ளது.

முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட்கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும்.

பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும். சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் நீங்கும்.

கோடைக்காலத்தில் அக்குள், மலவாய்பகுதி, முதுகு, தொடை போன்றவற்றில் ஏற்படும் கட்டிகளை கரைக்க பிஞ்சு வெண்டைக்காயை நன்கு அரைத்து, லேசாக வதக்கி, கட்டி உள்ள இடங்களில் தடவிவர கட்டிகள் உடையும்.

பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.

இந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்

வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு. ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன் சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.

வெண்டைக்காயை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த மோர் சாப்பிடுவதே ஆகும்.

-உணவே மருந்து