கிவி பழம்: சத்துப்பட்டியல்

கிவி-thamil.co.uk

கிவி KIWI
இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (கீவி) என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகில் நியூசிலாந்து நாட்டு மக்களை ‘க்விஸ்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதன் காரணமாகத்தான் இந்தக் கனிக்கு உலகில் ‘கிவி’ என்ற பெயர் ஏற்பட்டது.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக ‘சீனத்து நெல்லிக்கனி’ (சைநீஸ் கூஸ்பெரீ) என்றும் அழைக்கிறார்கள். இதன் அறிவியல் பெயர் அக்டினிடியா சைனிசிஸ். வெப்ப மண்டல கனி வகைகளில் இதுவும் ஒன்று. கிவி கனியில் மூன்று வகைகள் உள்ளன. 1. பச்சை நிற கிவி பழங்கள். 2. தங்க நிற கிவி பழங்கள். 3. சிவப்பு நிற கிவி பழங்கள்

உலகெங்கும் பல்வகையான நாடுகளில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த ‘மருத்துவப் பெட்டகம்’ என போற்றுகின்றன. கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது.  உடலுக்கு அத்தியாவசியமான விட்டமின்கள், தாதுக்கள், இரசாயன மூலக்கூறுகள் நிறைந்தது கிவி.  

மருத்துவப் பண்புகள்
* உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு கிவி கனியானது மிகவும் சிறந்த கனியாக கருதப்படுகின்றது. ஏனென்றால், மற்ற கனிகளுடன் ஒப்பிடும் பொழுது கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு சாதாரண கனியில் சுமார் 3.8 கலோரிகள் மட்டும்தான் உள்ளன. ஆனால், ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், வாழைப்பழத்தில் சுமார் 22.4 கலோரிகளும் மற்றும் ஆப்பிளிலும், பேரிக்காயிலும் சுமார் 32.8 கலோரிகளும் உள்ளன. உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் கனியை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.

* கிவிப் பழத்தின் சிறப்பம்சமே அதன் நார்ச்சத்துதான். எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள் இதில் ஏராளம் உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.8 கிராம் நார்ச்சத்து அடங்கி உள்ளது. பழத்திலுள்ள நார்ப்பொருட்கள் மலச்சிக்கலை உடனே போக்கக் கூடியது.

* நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது. முதுமைக் கால கண் நோய்களைத் தடுக்கும்.  விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

* மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (ஹார்ட் அட்யாக்) வழிவகுக்கின்றது. இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ கனிக்கு இயற்கையாக உள்ளது.

* குடற்பகுதியில் புற்றுநோயை விளைவிக்கும் தீய இரசாயனங்களை அகற்றும் திறனும், குடற் புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மையும் வழங்கக்கூடியது கிவிப் பழத்திலுள்ள நார்ப் பொருட்கள்.

* விட்டமின் C கிவிப் பழத்தில் நிறைந்துள்ளது. தினசரி உடலில் சேர்க்கப்பட வேண்டிய டி.ஆர்.ஐ. அளவில் இது 154 சதவீதம் விட்டமின் C யைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் காப்பதில் விட்டமின் C க்கு குறிப்பிட்ட பங்கு உண்டு. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களையும் விரட்டியடிக்கும்.

* விட்டமின் A, விட்டமின் E, விட்டமின் K ஆகியன சிறந்த அளவில் உள்ளன. இவை சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களாக செயலாற்றும். விட்டமின் K, எலும்புகளின் வலுவிற்கும், அவற்றின் உறுதியான செயல்பாட்டிற்கும் ஏற்றது. அல்சீமர் போன்ற உளநல பாதிப்பு சிகிச்சையிலும் வைட்டமின் K உதவுகிறது.

* விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது.

* கிவி பழம் ரத்தத்தில் கட்டி ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

* மேலும் மீன்களில் மட்டுமே காணப்படும் சிறப்பு பொருளான ஒமேகா-3 கொழுப்பு அமிலம், மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் கிவிப் பழத்திலுள்ளது. இது கரோனரி இதய பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

* பக்கவாதம், ஆட்டிசம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சில மனநல பாதிப்புகளில் இருந்து காக்க வல்லது கிவிப்பழம்.

* இதய இயக்கத்திற்கு வலுசேர்க்கும் பொட்டாசியம் தாது, கிவிப் பழத்தில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பழத்தில் 312 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. உடற்செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத் துடிப்பை கட்டுக்குள் வைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பொட்டாசியம் உதவுகிறது.

* கிவிப் பழத்தில் மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுக்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு நொதிகள் சிறப்பாக செயல்பட துணைக் காரணியாக செயல்படும். மக்னீசியம் கல்சியம்போல எலும்புகளுக்கு உறுதி தரும்.

* கிவி கனியின் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவான அளவாக இருப்பதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரழிவு நோயாளிகள் உண்பதற்கு சிறந்த கனியாகக் கருதப்படுகிறது.

*  மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது.

பல்வகையான சத்துக்கள் மிகுந்த கனி
சில ஆண்டுகளுக்கு முன்னர் ரட்ஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளிடம், கிவியின் ‘சத்து அடர்வு நிலை’ பற்றி விரிவான ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டபொழுது, இவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். இத்தகைய ஆய்வு முடிவை இவர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் தே ஜர்நல் ஆஃப் அமெரிகந் காலேஜ் ஆஃப் ந்யூட்ரீந் என்ற உணவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய தகவல்கள்:

உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள். உணவியல் குறியீட்டில் கனிவகைகளில் அதிக எண்ணை உடைய கனியாக கிவி கருதப்படுகின்றது.

உணவியல் வல்லுநர்கள் கனிகள் வகைகளில் கிவி கனிக்கு உணவியல் குறியீடு எண்ணாக அதிக அளவு சத்துக்கள் நிறைந்த கனி என்பதால், இதற்கு 16 என்ற எண்ணை வழங்கியுள்ளார்கள். இது முதல் இடமாகும். இதற்கு அடுத்தபடியாக உணவுக் குறியீடு உள்ள கனியான பப்பாளிக்கு 14 அளித்துள்ளார்கள். மெலன் என்ற தர்பூசணிக்கு 13 என்ற குறியீடு எண்ணும், ஸ்ட்ராபெர்ரிக்கு உணவுக் குறியீடு எண் 12-ம், மாங்கனிக்கு 12-ம், ஆரஞ்சு வகைகளுக்கு குறியீடு எண் 11-ம் வழங்கியுள்ளனர்.

சாப்பிடும் முறை
* கிவிப் பழத்தை வேறு எதனுடனும் சேர்க்காமல் அப்படியே சாப்பிடலாம்.

* கிவிப்பழத் துண்டுகளை ஸ்டிராபெர்ரி மற்றும் தயிருடன் சேர்த்து வித்தியாசமான உணவுப்பிரியர்களுக்கு வழங்கலாம்.

* அன்னாசிப் பழத்துடன் கிவிப் பழம் சேர்த்து செய்யப்படும் சாஸ்-sauce- தனி சுவை கொண்டது. கடல் உணவுகளுடன் இது தொட்டுக் கொள்ள வழங்கப்படுகிறது.

* நியூசிலாந்து நாட்டில் கிவிப் பழம் சேர்த்து செய்யப்படும் பாவ்லோஆ எனப்படும் உணவு வகை பிரபலம்.

* கேக், யூஸ், ஜெலி தயாரிப்பில் கிவிப்பழம் பயன்படுகிறது.

-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்