Green Tea பச்சை தேநீரின் உடல்நல நன்மைகள்

Green Tea -thamil.co.ukகிரீன் டீ ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது. முக்கியமாக புற்றுநோய், கொலஸ்டரால் இருதய நோய் , நீரிழிவு அல்லது சர்க்கரை நோய். கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ்  ஆன்டிஆக்ஸிடன்ட்  உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது. கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜப்பாநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது.

முக்கால்வாசி போலியானவைகளே. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும். வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ வாங்குங்கள். டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகிக் கொள்ளுகள். முன்பெல்லாம், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள்தான் கிரீன் டீயை உற்பத்தி செய்தார்கள். தற்போது ஐரோப்பிய நாடுகளும் கிரீன் டீ உற்பத்தி செய்து வருகிறது.

Camellia sinensisகேமெலியா சினென்சிஸ் Camellia sinensis என்ற செடிகளில் இருந்துதான் கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீ மிதமான சூட்டில் மாத்திரமே தயார் செய்ய வேண்டும். அதிக சூட்டில் கிரீன் டீ தயாரித்தால் அதன் அசல் சுவை மாறிவிடும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. பொதுவாக கிரீன் டீ பருகுவதற்கு சுவையாக இருக்காதென ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான் ஆனால் சில நாட்கள் பழகிவிட்டால் அந்தச் சுவைகூடப் பிடித்துவிடும். பியர், விஸ்கி மற்றும் பிராந்தி  போன்ற மதுபானங்கள் கூட குடிப்பதற்கு சுவையாகவா இருக்கிறது. ஆனால் அதை விரும்பி, நாம் நாளைடைவில் குடிப்பதில்லையா? (உடனே நான் குடிப்பேனா? எனக் கேட்காதீர்கள்! நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்!) ஆனால் அவை உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை. அவை மாத்திரமல்ல குளிர்பானங்கள் போர்வையில் வெளிவரும் கோக், பெப்ஸி போன்றவைகளும் உடலுக்குக் கேடு விளைவிப்பவைகள்தான்.

இந்த கிரீன் டீயில் வேண்டுமானால் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்தோ அல்லது சிறிது சர்க்கரை கலந்தோ ஆரம்பத்தில் பருகலாம். பிறகு முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகுவதே நல்லது. இன்றைய எந்திர யுகத்தில் நமது முகம், தோல் போன்றவை விரைவில் சுருக்கம் விழுந்து 5-6 ஆறு வயது அதிகமாகத் தெரிகிறதல்லவா? அவற்றைப் போக்கி, அதாவது முன்கூட்டிய முதிர்ச்சியைப் போக்கி இளமையாக இருப்பதற்கு இன்றைய வியாபார உலகத்தில் வந்திருக்கும் அழகு சாதனப்பொருட்களில் 90 சதம் கிரீன் டீ சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் தோல் சுருக்கத்தைப் போக்குகிறது. வயிற்றுப் புண்  மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் இருப்பவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.

மற்றபடி இந்த கிரீன் டீயில் கஃபைன் என்ற கெட்ட தாதுப்பொருள் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் சாதாரணமாக நாம் அருந்தும் கோப்பியில் இருக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. எனவே இந்த கிரீன் டீயை தைரியமாக நாம் அருந்தலாம்.

Camellia sinensis.கிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்!

ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் நம் உடலில் உள்ள இழையங்களில் நடக்கும் இரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதன் மூலம், வயதாகும் செயல்பாட்டைத் தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்கிறது.

புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும்
விட்டமின் C-யைக் காட்டிலும், இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் 100 மடங்கு புற்றுநோய் கலங்களை எதிர்த்துப் போராடக்கூடியது. இதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

உடல் எடை குறையும்
உடலில் உள்ள கொழுப்பு கலங்களை எரித்து, உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளை இயற்கையான முறையில் விரைவுபடுத்துகிறது. தோராயமாக நாள் ஒன்றுக்கு 70 கலோரி வரை இதன் மூலம் எரிக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் குறையும்
கிரீன் டீ-யில் உள்ள இரசாயனங்கள் உயர் இரத்த அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தையும், இரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இதயநோய் வரும் வாய்ப்பு குறையும்
கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, உடலில் கொழுப்புக் குறைந்து, இதய நோய்க்கான வாய்ப்பு 31 சதவிகிதமாகக் குறைகிறது. மாரடைப்புக்குப் பிறகு கலங்கள் இறப்பதைத் தவிர்த்து, இதய கலங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது. இரத்தம் உறைவதைத் தடுக்கிறது.

உணவு நஞ்சாவதைத் தடுக்கும்
பக்டீரியா கிருமிக்கு எதிராகச் செயல்படும். பக்டீரியா கிருமியால், உணவு நஞ்சாவது தடுக்கப்படுகிறது. வயிற்றில் கெடுதலை ஏற்படுத்தும் பக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, நன்மை செய்யும் பக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதேபோல் வைரஸ் கிருமித் தொற்றையும் தடுக்கிறது.

எலும்புகளுக்கு வலு சேர்க்கும்
கிரீன் டீ-யில் அதிக அளவு ஃப்ளோரைட் உள்ளதால், எலும்புகள் உறுதிப்படும். தினமும் கிரீன் டீ பருகுவதன் மூலம், எலும்பின் அடர்த்தி பாதுகாப்பாக இருக்கிறது.

-உணவே மருந்து
-இயற்கை வைத்தியம்

http://thamil.co.uk/?p=6409  – தேநீர் – ஒரு சுவையான பானம்

தொகுப்பு – thamil.co.uk