பற்கள் பராமரிப்பு

குழந்தைகளின் பற்கள் பராமரிப்பு

பற்கள் பராமரிப்பு-thamil.co.ukகுழந்தைகள் பிறந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் பால் பற்கள் வளருவதால், அவர்களுக்கு ஈறு பகுதியில் எரிச்சலாக இருக்கும். அந்த நேரத்தில், பெரும்பாலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்தப் பால் பற்களின் வளர்ச்சி ஏழாம் வயதில்தான் முடிவடையும். அந்த நேரத்தில் குறைந்தது 20 பற்களாவது குழந்தைகளுக்கு முளைத்திருக்க வேண்டும். ஏழாம் வயதின் முடிவில்தான் பால் பற்கள் விழ ஆரம்பித்து நிரந்தரமான பற்களின் வருகை ஆரம்பிக்கும்.

இந்த நேரத்தில் குழந்தைகளின் தாடை மற்றும் பற்களின் வேர் நன்றாகக் கடினமாக ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததும், அலட்சியமாக இருக்காமல், பெற்றோர்கள் குழந்தையின் பற்களை தங்கள் விரலால் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

அத்தோடு, குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக விற்கப்படும் பற்பசையையும், பிரஷையும் வாங்கித் தந்து, அதைப் பயன்படுத்தச் சொல்லி பழக்கவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் பற்பசையில் கல்சியம் மற்றும் ஃப்ளூரைடின் அளவும் அதிகமாக இருக்க வேண்டும்.

பல் துலக்கும்போது 20 ஸ்ட்ரோக்கை மீறாமலும், இரண்டு நிமிடங்களுக்கு மேல் மிகாமலும், பல் துலக்கும் பழக்கத்தைச் சொல்லித்தர வேண்டும். குறைந்த நேரத்தில் பல் துலக்கி, அதிக நேரம் வாய் கொப்பளிக்க வேண்டும்.

கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளை, ஒரு வயதிற்குள் அந்தப் பழக்கத்தை மறக்கச் செய்யவேண்டும்.

குழந்தைகளை சாக்லேட் சாப்பிட அதிரடியாகத் தடை போடாமல், சாப்பிடுகிற எண்ணிக்கையை மெதுவாகக் குறைக்க வேண்டும்.

அதிகப்படியான இனிப்பு உண்பதால் சொத்தைப் பல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதுபோன்ற கிருமிகளுக்குப் பல்லை இரையாக்காமல் இருக்க, சாப்பிட்டவுடன் நிறையத் தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில் நிறையத் தண்ணீரும் அருந்த வேண்டும்.

இரவு படுக்கும் முன் பாலில் சர்க்கரைச் சேர்க்காமல் கொடுங்கள். காரணம், சர்க்கரையில் உள்ள இனிப்பு பற்களில் தங்கி, சொத்தைப் பற்களை உருவாக்கிவிடும்.

படுக்கும் முன்பு பல் துலக்குவது அவசியம்.

உணவுகளை மென்று அசைபோட்டுச் சாப்பிடும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுங்கள். இதனால், கன்னப் பகுதியும் ஒட்டிப் போகாமல் அழகாக இருக்கும்.

பற்களின் வளர்ச்சிக்கு கல்சியம் நிறைந்த உணவு முக்கியம். தினமும் உணவில் கீரை வகைகள், பட்டாணி, சுண்டல், ப்பிள், பச்சைக்காய்கறிகள், தினைவகைகள் போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

Source Vikatan

 

தரமான பற்பொடி

பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்.

கடுக்காய் பொடி 100 கிராம் – நாட்டு மருந்து கடைகளில் பவுடராக வாங்கி கொள்ளவும்
கிராம்பு 50 கிராம்
கல் உப்பு 25 கிராம்

இந்த கலைவையை அளவில் கூறவேண்டுமானால் ஒரு பங்கு கடுக்காய் அரை பங்கு கிராம்பு மற்றும் கால் பங்கு கல் உப்பு. மேற்சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும்.

இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகி விட்டது. பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்து விடுவார்கள்.

 

பற்களை பாதுகாக்க பாட்டி வைத்தியம்

* பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும்.
* ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
* நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித்தொற்று குணமாகும்.
* கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடிசெய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.
* கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.
* கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல்
வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.

– Ganesh Ganesh

பற்களில் கறை படிந்துள்ளதா? இலகுவாக நீக்கலாம்!!!

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.