இரும்புச்சத்து இல்லாமல் போனால்…

இரும்புச்சத்துள்ள உணவு-thamil.co.ukஇரும்புச்சத்து இல்லாமல் போனால்…

கவனச்சிதறல்

இரும்புச்சத்துக் குறைபாட்டினால் வரும் முக்கியப் பிரச்னை இது. பொதுவாகக் குழந்தைகளுக்கு இத்தகைய கவனச் சிதறல் ஏற்படும்போது உடனடியாக பெற்றோர்கள், பரிசோதனையை மேற்கொண்டு அது இரும்புச் சத்தின் குறைபாட்டினால் வந்ததா அல்லது வேறு ஏதும் பிரச்னையா என்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

தடுக்கும் முறைகள்

இரும்புச்சத்துக் குறைபாட்டை ரத்தம், மலம் பரிசோதனை மூலம் கண்டறியலாம். குறைபாட்டைக் கண்டறிந்தால் இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுத்தும், மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தும் சரி செய்யலாம்.

அச்சுவெல்லம், முருங்கைக்கீரை, கடலைமிட்டாய், பேரிச்சம்பழம், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

இதில் எந்த ஓர் அறிகுறியையும் அலட்சியப்படுத்தாமல், பரிசோதித்து அறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இரும்பு சக்தியின்மை நம்மை பெருமளவு பாதிக்கும் அளவுக்கு வீரியமானது