தமிழனின் ஒரு கற்கோடாரி.

kal kodari

தமிழனின் முக்கியமான கண்டுபிடிப்பு

இது ஒரு கற்கோடாரி. இது பயன்பட்டு வந்த காலம் சிந்துவெளி நாகரீகக் காலம். இந்தக் கற்கோடாரி நாகபட்டினம் அருகில் உள்ள கணியன் கண்டியூர் என்ற ஊரில் ஒரு பள்ளி ஆசிரியர் தன் வீட்டின் பின்னால் ஒரு கட்டுமானத்துக்காகக் குழி தோண்டும் போது கிடைத்தது. ஆசிரியர் தொல்பொருள் ஆய்வில் சிறிது ஆர்வம் உள்ளவர் ஆகையால் இதனை ஆய்வாளர்களிடம் தந்தார். இந்தக் கற்கோடாரியில் முரு–அன் என இரண்டு சிந்துவெளி நாகரீக எழுத்து எழுதப்பட்டுள்ளது என ஐயா ஐராவதம் மகாதேவன் முடிவு சொன்னார். முரு–அன்—முருகன். சிந்துவெளியில் பேசிய எழுதிய மொழி தமிழ்தான் என்பதற்கான முதல் மற்றும் வலுவான ஆதாரம் இதுதான். இது 2005 ஆம் ஆண்டு கிடைத்தது.