அசோகு

மூலிகையின் பெயர்  – அசோகு
தாவரவியல் பெயர் – Saraca indica
பயன்தரும் பாகங்கள் – பட்டை, பூ

அசோகு மரம்-thamil.co.ukநீண்ட கூட்டிளைகளையும் செந்நிற மலர்களையும் உடைய செங்குத்தாக வளரும் மரம். அழகு தரும் மரமாக வீட்டின் முன்புறங்களில் வளர்க்கப்படுவதுண்டு.

பட்டை, பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சதை, நரம்பு ஆகியவற்றின் வீக்கம் அகற்றியாகவும், கருப்பைக் குற்றங்ககளை நீக்கும் மருந்தாகவும் பயன்படும்.

100 கிராம் மரப்பட்டையை இடித்து 400 மி.லி நீரிலிட்டு 100 மி.லி ஆகும்வரைக் காய்ச்சி வடிகட்டி 100 மி.லி பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருகிவர பெரும்பாடு, வெட்டை, மூலம், கட்டிகள், வயிற்றுக்கடுப்பு நோய்கள் தீரும்.

மரப்பட்டை 40 கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாக இடித்து ஒருநாள் ஊறவைத்து வடிகட்டி 30 மி.லி அளவாக 3, 4 வேளை தினமும் சாப்பிட்டுவர 1 வாரத்தில் எவ்வளவு நாளான பெரும்பாடும் தீரும். காரம், புளி சேர்க்கக் கூடாது.

அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை பாலில் சாப்பிட வயிற்றுப்போக்கு, இரத்தபேதி தீரும்.

அசோகு பூக் கொத்து-thamil.co.ukஅசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம்பழ ஓடு(தோல்) சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை காலை, மாலையாக வெந்நீரில் சாப்பிடக் கருச்சிதைவு, வயிற்றுவலி, கர்ப்பச் சூலை, வாயுத்தொல்லை நீங்கும். 100, 120 நாட்கள் சாப்பிட பெண் மலடு தீரும்.

கால் கிலோ அசோகப் பட்டை, மாவிலங்கப் பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை- மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

100 கிராம் அசோகப் பட்டைத் தூளுடன் 25 கிராம் பெருங்காயத்தூளைக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும்.

கருப்பை புண்ணாகிப்போன நிலை, கருப்பையில் உண்டாகும் சில தொற்றுகள், கருப்பை சற்று கீழே இறங்கிவிடுதல், உடம்பில் இயல்பான அளவில் இருக்க வேண்டிய சத்துகள் குறைந்துவிடுதல், இரத்தப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாத விலக்கில் அதிக இரத்தப்போக்கு உண்டாகலாம். ஐந்து கிராம் அசோகப் பட்டைப் பொடியை கட்டித் தயிரில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர, இரத்தப்போக்கு உடனே நிற்கும்.

Saraca indica-thamil.co.ukநீங்கள் ஒன்றை மட்டும் கவனியுங்கள். மாதவிலக்கை முறைப்படுத்துவதற்கும், மாதவிலக்கில் உண்டாகும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கும் ஒரே மருந்து அசோகப் பட்டைதான். இதேபோல் முரண்பட்ட இரு பிரச்சினைகளுக்கு ஒரே மருந்தை எந்த மருத்துவ முறையாலும் தர இயலாது. இது தவிர, பல்வேறு நோய்களைக் குணமாக்கும் தன்மை அசோக மரத்திற்கு உண்டு.

இரத்தபேதி, சீதபேதி, வெள்ளைப்படுதல், சர்க்கரை நோய், பித்த நோய்கள், இரத்த அழுத்தம், அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் அதிசயமாய் குணமாக்கும்.

அசோகப் பட்டையைத் தனியாகச் சாப்பிடும்பொழுது, மலச்சிக்கல் உண்டாவதாய் நீங்கள் உணர்ந்தால், அத்துடன் சம அளவு கடுக்காய் கலந்து சாப்பிட்டு வரவும்.

-மூலிகைமுற்றம்