உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை

தண்ணீர் சிகிச்சை-thamil.co.ukதண்ணீர் சிகிச்சை-Water Therapy
உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரிசெ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.

ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது. மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை! தினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றேகால் லிட்டர் (சுமார் ஆறு டம்ளர்கள்) அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது.

தலைவலி, இரத்தஅழுத்தம், இரத்தசோகை, கீல்வாதம், மூட்டுவலி, சாதாரண பக்கவாதம், ஊளைச்சதை, காதில் இரைச்சல், இருதய வேகமான துடிப்பு, மயக்கம், இருமல், ஆஸ்துமா, சளிதொல்லை, மூளைக்காய்ச்சல், கல்லீரல்சார்ந்த நோய்கள், சிறுநீரகக்குழாய் நோய்கள், பித்தக் கோளாறுகள், வாயுக்கோளாறுகள், வயிற்றுப்பொருமல், இரத்தக்கடுப்பு, மூலம், மலச்சிக்கல், பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், ஒழுங்கற்ற மாதவிடாய்(இன்றைய மென்பானங்களை அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படுவது), அளவற்ற வெள்ளைப்படுதல், கருப்பை புற்றுநோய், மார்புப் புற்றுநோய், தொண்டை சார்ந்த நோய்கள் இவை தீரும்.


தண்ணீர்-சிகிச்சைஎப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக்கொள்வது?

காலையில் எழுந்தவுடன் (பல் துலக்கும் முன்பாகவே) 1250 CC தண்ணீரை ஒரே தடவையில் குடித்துவிட வேண்டும். இது சுமார் 6 தம்ளர் அளவாக இருக்கும். 1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக்கொள்வது நன்று. இதை நமது முன்னோர்கள் உஷார் பானம் என்று பெயரிட்டுள்ளனர். குடித்தபின்னர் முகம் கழுவிக்கொள்ளலாம்.

காலையில் இப்படி தண்ணீர் குடித்தப்பின்னர், ஒரு மணிநேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ, பிஸ்கட், பழங்கள், தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது. இது மிக முக்கியமான நடைமுறையாகும்.

காலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப்பின்னர், படுக்கைக்குச் செல்லும் முன்பாக, நரம்புமண்டலத்தைத் தூண்டிவிடக்கூடிய பானங்கள் (மது மற்றும் போதை வஸ்துக்கள்) உணவுகளையோ எதையும் சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். எனவே, இரவே பல்துலக்கிக் கொள்வது நன்று. தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கலாம் என சந்தேகப்பட்டால், இரவே நீங்கள் காலையில் குடிக்க இருக்கும் 1.25 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்வது நல்லது.

ஒரே மூச்சாக 1.25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா?

சில நாட்கள் சிரமம் தான். இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டுவிட்டும் குடிக்கலாம். ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும். அதுவும் நன்மைக்கே!

எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்?

சரியான முறையில் (மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது. தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூய நீரைக் குடிப்பதால், குடலை வலுவாக்குகிறது. மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புது இரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச் செய்கிறது. இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள இழையமடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டுவிட்டன. குடல் பகுதியில் இருக்கும் இழையமடிப்புகள் சாப்பிட்ட உணவுப்பொருட்களை ரசமாக்கி உறிஞ்சப்படும்போது இபுது ரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால், தினமும் புது இரத்தம் உற்பத்தியாகிறது. இப்படி தினமும் புது ரத்தம் உற்பத்தியாவதால், உடலில் அதுவரை இருந்துவந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன. இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும்வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும். நீண்ட ஆய்வுக்குப் பிறகு, பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

மலச்சிக்கல் ஒரே நாளில் குணமடைகிறது.
வயிற்றுப்பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது.
சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது.
இரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும், புற்று நோய் நான்கு மாதங்களிலும், க்ஷய ரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது.

இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்
மூட்டுவாதம், வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை, மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும், இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர்சிகிச்சையை செய்து வர வேண்டும். ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்துவந்தால் போதுமானது.
மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழிந்தபின்பே தண்ணீர் அருந்த வேண்டும்.
படுக்கைக்குச் செல்லும் முன்பாக தேனீர், கோப்பி, நொறுக்குத் தீனிகள் சாப்பிடக்கூடாது.
இதுவரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.

 

உடலை சுத்தப்படுத்தும் தண்ணீர்

தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும். அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது.

இன்று நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு இலகுவான மருத்துவ செலவில்லாமல் சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு டம்ளர் சுடு தண்ணீரை குடித்தால், பிரச்சனை நீங்கிவிடும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நிறைய கழிவுப் பொருட்கள் குடலில் தங்குவதால் தான் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம் என்றெல்லாம் ஏற்படுகிறது.

ஆகவே அந்நேரத்தில் சுடுநீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் சுடுநீர் உணவுப் பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மையுடையது. ஆகவே அது குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலைசெய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் நீங்கும். நிறைய உணவு நிபுணர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்றால், ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஏனெனில் அவை உணவுப்பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும். அதிலும் இந்த சுடு தண்ணீரை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும். எதற்கு எலுமிச்சையை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் என்னும் நார்ச்சத்து, அடிக்கடி ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்தும். இருமல் மற்றும் அதிக சளியின் காரணமாக டான்சில் மிகவும் வலியோடு இருக்கும். அவ்வாறு வலி ஏற்படும் போது சுடு நீரை குடித்தால், தொண்டை வலி குறைந்து, நீர்மமாக இருக்கும் சளி சற்று கெட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.

சுடு தண்ணீரையோ அல்லது ஏதேனும் சூடான உணவுகளையோ சாப்பிடும் போது, அதிகமாக வியர்க்கும். ஏனெனில் சூடான பொருள் உடலில் செல்லும்போது, உடல் வெப்பநிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக்க வியர்க்கிறது. வியர்ப்பதால் சருமத்தில் இருக்கும் கலங்களில் உள்ள அதிகமான தண்ணீர் மற்றும உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. எப்போது சுடு தண்ணீரை குடிக்கின்றோமோ, அப்போது உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புக்கள் கரைந்து, இரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.

-Arivulagam
-Nancy Kumari