கொத்தமல்லி ஒரு வரம்

மூலிகையின் பெயர் – கொத்துமல்லி
தாவரப்பெயர் – CORIANDRUM SATIVUM
தாவரக்குடும்பம் – UMBELLIFERAE (Apiaceae)
பயன்தரும் பாகங்கள் – முழு தாவரம்.

கொத்தமல்லிஅன்றாடம் நாம் உண்ணும் உணவில் தவிர்க்கமுடியாதது. இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்து நீண்ட முப்பிறிவாக பசுமையாக நறுமணத்துடன் இருக்கும். இந்த இலையில் B, B12 & C விட்டமின்கள் உள்ளது. இதன் தண்டுகள் மென்மையாக இருக்கும். சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை மல்லிவிதை (தனியா) என்று சொல்வார்கள். இதன் விட்டம் 3 – 5 மில்லி இந்த விதையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள் ஆனால் குறைந்த சதவிகிதம் தான் கிடைக்கும். இந்த எண்ணெய் மருத்துவ குணம் உடையது. இதில் வையிட்டமின் A,C & k உள்ளது. இதில் கல்சியம், இரும்பு, மங்னீசியம், பொட்டாசியம், ஜிங் உள்ளது. தோல் வியாதிய்யைக் குணப்படுத்தும். இது கார்ப்பு சுவையுடையது..

சிறுநீர் பெருக்கி, அகட்டு வாய்வகற்றி, ஊக்கமூட்டி, உரமாக்கு, நறுமணமூட்டி. தீர்க்கும் நோய்கள்- காச்சல், மூன்று தோசங்கள், நாவரட்சி, எரிச்சல், வாந்தி, இழுப்பு, மூலநோய், இதயபலவீனம், மயக்கம், இரத்தக்கழிசல், செரியாமை, வயிற்றுப் போக்கு, நெச்செரிச்சல், வாய்க்குளரல், சுவையின்மை, தலைநோய், உட்சூடு, குளிர்காச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தொண்டைக்கட்டு, வரட்டு இருமல், கல்லீரல் பலப்படுத்த, இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், பயித்தியம், வாந்தி, விக்கல், தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்சுவலி, கட்டி வீக்கம், கண்ணில் நீர் வடிதல், கண் சூடு, பார்வை மந்தம், இடுப்பு வலி, சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய் கோணல், ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.

கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்ச்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி பூகொத்துமல்லியைச் சிறிது காடியில் அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும். புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்துமல்லி விதை 100 கிராம், நெல்லி வற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம் சர்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரத் தலைச் சுற்றல், நெஞ்செரிவு, வாய்நீரூரல், சுவையின்மை ஆகியவை தீரும்.

கொத்துமல்லி 300 கிராம் சீரகம், அதமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இளவறுப்பாய் வறுத்துப் பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடி கலந்து (கொத்துமல்லி சூரணம்) காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உட்சூடு, குளிர்காச்சல், பயித்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி ஆகியவை தீரும். நீடித்துக் கொடுத்துவரப் பலவாறான தலை நோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்க்குளரல் ஆகியவை தீரும். மனவலிமை மிகும்.

கொத்துமல்லி இலை, சிரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் பித்த கிறுகிறுப்பு நீங்கும்.

-ஈரோடு விழுதுகள்

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி நம் ஆரோக்கியத்திற்கு பெருமளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது நம்மில் பலருக்கும் இன்றுவரை தெரிவதில்லை. ஏதோ சமையலில் பயன்படுத்துகிறோம் என்று பயன்படுத்தி வருகிறார்கள். அதன் பயன்கள் பற்றி நமது மதுரை தோழி ரோகிணி விளக்கமாக கூறியுள்ளார்.

கொத்தமல்லி.கொத்தமல்லியின் பயன்கள்

வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும்.

இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற கசடுகளை வெளியேற்றும். மூல நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு ஜீரணிக்கச் செய்யும். புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும். கண் சூடு குறையும்.

உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

நல்ல தூக்கம், மன அமைதி, உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாய் நாற்றத்தைப் போக்கி, பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.

5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.

கொத்தமல்லி சூப்

கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி,
சின்ன வெங்காயம் – 5,
மிளகு – 10,
சீரகம் – 2தேக்கரண்டி,
பூண்டு – 5 பல்,
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
1 கொத்து கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு

ஆகியவைகளை எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, தேனீர் கோப்பியிற்குப் பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.

கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா(mint), சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

கொத்தமல்லி சூரணம்

கொத்தமல்லி – 300 கிராம்,
சீரகம் – 50 கிராம்,
அதிமதுரம் – 50 கிராம்,
கிராம்பு – 50 கிராம்,
கருஞ்சீரகம் – 50 கிராம்,
இலவங்கப்பட்டை – 50 கிராம்
சதகுப்பை anethumsowa – 50 கிராம்

ஆகியவைகளை இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும். இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது. இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்! இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!

கடலூர் அரங்கநாதன்

கொத்தமல்லி சாதம்

கொத்தமல்லி சாதம்- thamil.co.uk

Coriander Rice

தேவையான பொருட்கள்
வடித்த சாதம் – 1 கப்,
கொத்தமல்லி – 2 கப்,
புளி – எலுமிச்சை அளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – சிறிது,
நெய் – சிறிது.

வறுத்தரைக்க
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3,
பெருங்காயம் – சிறிது.

தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா அரை தேக்கரண்டி.

கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும். ஆறியதும், அதில் புளி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும். சூடான சாதத்தில் அரைத்த விழுதுடன், சிறிது நெய் சேர்த்துக் கலந்து பரிமாறவும். விரும்பின் முந்திரி தாளித்து சாதத்துடன் சேர்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு கொத்தமல்லி சாதம் சாப்பிடலாம்.

-தினம் ஒரு தகவல்