சர்க்கரை நோய்க்கு….

கொத்தமல்லி-thamil.co.ukவெந்தயம்..thamil.co.uk

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்!

கொத்தமல்லி/ தனியா –அரை கிலோ வெந்தயம் —கால் கிலோ

இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். கலந்த பொடியில் இரண்டு தேக்கரண்டி பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். உங்கள் ரத்தத்தில் உள்ள  சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

Posted by Dhinakar

பேரீச்சை-thamil.co.ukசர்க்கரை நோயாளிக்கும் சக்தி தரும் பேரீச்சை,கறிவேப்பிலை!  

ரத்த விருத்திக்கான ‘இயற்கை மருந்து’ என்கிற அளவில் தானே பேரீச்சை பற்றி உங்களுக்கு தெரியும்! பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமில்லை.. வைட்டமின் ஏ, சுண்ணாம் புச்சத்தும் நிறைந்துள்ளது.

தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

* தினமும் ஒரு பேரீச்சைம்பழம் சாப்பிட்டு வந்தால், இதயம் வலுப்பெறும்.

* தினமும் இரண்டு பேரீச்சைபழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியடையும்.

* இனிப்பு உணவுகளை தவிர்க்கும் சர்க்கரை நோயாளிக்கூட தாராளமாக பேரீச்சம்பழம் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு டம்ளர் பாலுடன்  2 பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர, உடல் வலிமை பெறும்

* காச நோயாளிகள் தினமும் 4 பேரீச்சம் பழம் சாப்பிட்டுவர, எலும்புகள் பலன் பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

* எதிர்பாராத சில சம்பவங்களால் அதிகமான ரத்தத்தை இழந்தவர்கள், தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த இழப்பை விரைவில் ஈடு செய்யலாம்.

* வெண் குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சிரப் குடிக்கலாம். இது ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

* பேரீச்சம்பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட, வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

ராஜம் முரளி
மூலிகை அழகு கலை நிபுணர்.

 

கறிவேப்பிலை-thamil.co.ukசர்க்கரை நோய்க்கு கறிவேப்பிலை!

ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு அருமருந்து. கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள்ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி உடலுக்குத் தரும். சுண்ணாம்புச்சத்து இதில் அதிகம் இருக்கிறது

கறிவேப்பிலை துவையல் செய்முறை

ஆய்ந்த கறிவேப்பிலை 2 கப் எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும். பிறகு, 4 காய்ந்த மிளகாய், 2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு (விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி) சேர்த்து நன்றாக வறுக்கவும். சில நிமிடங்கள் ஆற வைத்து, இதில் உப்பு, நெல்லிக்காய் அளவு புளி, பெருங்காயத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

சூடான சாதத்தில் பிசைந்தும், தோசை, இட்லிக்கு தொட்டும் சாப்பிடலாம்