வெள்ளரி CUCUMBER

வெள்ளரிமூலிகையின் பெயர் – வெள்ளரி
தாவரப்பெயர் – CUCUMIS SATIVS
தாவரக் குடும்பம் –CUCURBITACEAE
வெள்ளரி வகைகள் – CITRULLUS LANATUSVAR LANATUS, CUCMIS MELO, CUCURBITA MAZIMA, CUCURBITA MOSCHATA, LAGENARIA SPP, SICYOS ANGULATUS ஆகியவை.
பயன்தரும் பாகங்கள் – கொழுந்து, பிஞ்சு, காய், பழம்  மற்றும் வேர்.

வளரியல்பு – வெள்ளரி படரும் கொடி வகையைச் செர்ந்த ஒரு காய்கறி வகை நல்ல மூலிகையும் கூட. இதன் முக்கிய மூன்று வகைகள் SLICING, PICKLING, BURPLESS ஆகும். இதன் வேர் பூமிக்கடியில் இருக்கும். இலைகள் அகலமாக இருக்கும் இலையின் அடி பாகத்தில் பூ விட்டு பிஞ்சுகள் உற்பத்தியாகும்.கொடிகள் படர்வதற்கு பக்க வாட்டில் சுருள் கம்பி போன்ற வேர்கள் இருக்கும். அதன் உதவியால் நிலத்திலோ மேல் நோக்கியோ பிடித்துப் படரும்.

வெள்ளரியை சம வெளியிலும் குளங்களிலும், பசமை கூடாரங்களிலும் வளர்க்கலாம். இது வளர்வதற்கு நல்ல வளமான மண் வேண்டும். வடிகால் வசதி இருக்க வேண்டும். விதைகளை மண்ணில் ஒரு அங்குலத்திற்குக் கீழ் நடவேண்டும். இடைவெளி இரண்டடி இருக்க வேண்டும். ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். காயின் நீளம் 60 செ.மீ.வரையும் அகலம் 10 செ.மீ. விட்டமும் இருக்கும். இது வகைக்கு வகை வேறுபடும். காயினுள் இரு அடுக்காக விதைகள் இருக்கும்.

CUCUMIS SATIVUSவெள்ளரியில் 90 சதம் தண்ணீர் இருக்கும்.காய்கறி போல் சாப்பிடப் பயன்படுத்துவார்கள். பிஞ்சாக இருக்கும் போது அப்படியே யாவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். நட்ட 30 வது நாளில் பூக்க ஆரம்பிக்கும்.50 நாளிலிருந்து பறிக்க ஆரம்பிக்கலாம். பிஞ்சை 3 ரகமாகப் பிரிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 600 குழிகள் தோண்ட வேண்டும்.2 அடி இடைவெளி விட வேண்டும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் போடவேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாச்சினால் போதும்.ஒரு ஏக்கருக்கு 150 கிராம் விதை தேவைப்படும். பூக்கள் ஆண், பெண் இரு சமமாகப் பூக்கும். மஞ்சள் நிறத்தில் இருக்கும்.தேனீக்கள் அதிகம் வருவதால் மகரந்தச் சேர்க்கை அதிகமாக ஏற்படும்.

வெள்ளரியின் தாயகம் இந்தியா தான்.3000 வருடங்களுக்கு முற்பட்டது .பின் உலக நாடான ஐரோப்பா, கிரேக்கர்கள், ரோமானியர்கள், பயிரிட்டனர். 9 ம் நூற்றாண்டில் பிரான்சுக்குப் பரவிற்று. 14 ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும்,  வட அமரிக்கா 16 ம் நூற்றாண்டிலும் பரவிற்று. பின் ஆப்பிரிக்காவிலும் தற்போது செர்பியாவிற்கும் பரவிற்று. வெள்ளரி பயிரிடுவதில் உலக அளவில் சைனா 60 சதமும், அடுத்து துருக்கி, இரான், ரஸ்யா, அமரிக்கா, உக்ரைன், ஸ்பெயின், எகிப்து, ஜப்பான், இந்தோநேசியா என அமரிக்க ஆய்வு கூறுகிறது. இந்த மாதத்தில் வெள்ளரி அதிகம் விளைவிக்கப் படுகிறது. மார்க்கட்டில் எல்லா இடங்களிலும் பழமுதிர் நிலையங்களிலும் கிடைக்கின்றது. கோவையில் பசுமை கூடாரத்தில் உற்பத்தி செய்த வெள்ளரி கிடைக்கின்றது. வெள்ளரி விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்
வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கல்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .

இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும்.

வெள்ளிரியை உண்பதால் ‘பசிரசம்’ எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு.

வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன.

புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது, அதையும் போக்க வல்லது.

மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும்.

கபம், இருமல் நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல.

100 கிராம் வெள்ளரியில் 18 கிராம் கலோரிதான் இருக்கிறது. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். இது சிறுநீர் பிரிவைத் தூண்டக் கூடியது. இரைப்பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தும்.

அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை,வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன. ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திரசமையலில் காரம் அதிகம்.

வெள்ளரிக்காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. எனவே,வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும்.

காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.

வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக் காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி,முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டுவைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.

இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

முகத்தில் உள்ள கரும் புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில்பூசவேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும்.வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி கரட் சாறு,  இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு,பச்சடிக் கீரைச் சாறு போன் வற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

கரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக்காயில் தோல்பகுதி அருகில் தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ்ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமயமலைப் பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

ஜமைகாநாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம்பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக்காய்களை பயன்படுத்தலாம்.

-mooligaivazam

19 Super Refreshing Health Benefits Of Cool Cucumber.

19 Super Refreshing Health Benefits Of Cool Cucumber.

Scientifically known as Cucumis sativus, cucumbers share the same botanical family, Curcubitaceae, asmelons and squashes.  In a technical sense, cucumbers are actually fruits, and not vegetables and are found in a large number of varieties, shapes and sizes. They are broadly divided into three basic types: slicing, pickling and burpless.

 • Slicing cucumbers include all varieties that are cultivated for consumption in fresh form, are larger in size and have thicker skin.
 • Pickling cucumbers include all varieties that are cultivated not for consumption in fresh form, but for processing into pickles. While pickling cucumbers can always be eaten fresh, their smaller size and generally thinner skins make them easier to ferment and preserve/jar.
 • Burpless cucumbers are sweeter and have a thinner skin than other varieties of cucumber, and are reputed to be easy to digest and to have a pleasant taste. They are sometimes marketed as seedless or burpless, because the seeds and skin of other varieties of cucumbers are said to give some people gas.

In evolutionary terms, the first cucumbers were likely to have originated in India and cultivated in some parts of the Middle East. Cucumbers are mentioned in the legend of Gilgamesh—a Uruk king who lived around 2500 BC in what is now Iraq and Kuwait. It was approximately 3,300 years later when cucumber cultivation spread to parts of Europe, including France. And it was not until the time of the European colonists that cucumbers finally appeared in North America in the 1500′s.

 

TOP 19 REFRESHING HEALTH BENEFITS OF COOL CUCUMBER:

 1. Renal Care: High water content and potassium in cucumber provide diuretic properties, removing toxins and metabolic wastes from the body through urine and also helps dissolve gallstones and kidney stones.
 2. Insulin Promoter: Cucumber’s mineral content and manganese are very useful in the synthesis of natural insulin and contains hormones that stimulate insulin production in the pancreas.
 3. Dental Care: Consuming raw cucumber increase production of saliva, neutralizes the acids and alkali in the oral cavity, fights bad breath and gum diseases like pyorrhoea and weak gums.
 4. Stabilizes blood pressure: Cucumbers contain potassium, a heart friendly electrolyte that reducesblood pressure levels in the body and reduces heart rate by minimizing the effects of sodium. Fiber andmagnesium also help in blood pressure regulation.
 5. Treats Puffy Eyes: Caffeic and ascorbic acid in cucumber can reduce water retention to reduce puffiness, eye redness, and dark circles under the eyes. Place chilled slices of cucumber on the eyes to greatly reduce under-eye bags and revive vision capabilities.
 6. Hydrates:  Cucumbers contain almost 95% water and most of the vitamins needed for hydration,detoxification and other body functions.
 7. Digestive Function: Cucumbers have therapeutic properties to relieve gastrointestinal problems such as chronic constipation, ulcers, gastritis, acidity, and even ulcers. Cucumber peel is also a very good source of dietary fiber that helps to reduce indigestion and prevents stomach related diseases by eliminating toxic compounds from the gut.
 8. Anti Cancer: Cucumber contains potent lignans- lariciresinol, secoisolariciresinol and pinoresinol that reduce the risk of brain, breast, ovarian, colon, uterine, prostate and others. When we consume these lignans, bacteria in our digestive tract latch to these lignans and convert them into enterolignans, which in turn bind on to the estrogens receptors, reducing estrogens induced diseases like cancer.
 9. Prevents Gout: Cucumber juice is rich in vitamin A, B1, B6, C, D, folate, magnesium, and calcium, lowering uric acid levels, making it a potential solution for those with Gout.
 10. Stimulates Weight Loss: Cucumber boasts of 95% water, very low calories, rich fiber, no saturated fats or cholesterol helping you lose weight by offering great nutrition, detoxification and hydration.
 11. Lowers Blood Cholesterol: Studies have shown the effectiveness of compounds called sterols in cucumber that help lower “bad” blood cholesterol levels.
 12. Strengthens Joints and Muscles: Cucumbers is abundant in silica which strengthens the connective ligaments networks in the joints.  Also Vitamin K helps improve bone density by promoting orthotropic activity.  Calcium not only assists healthy bone structure but also maintains the body’s hormone balance.
 13. Skin Care: Cucumber skin has diuretic, cooling, and cleansing properties and helps heal sunburned skin, freckles, wrinkles and spots, tightens skin, banishes cellulite of thighs and gets rid of acne orpimples.
 14. Digestive Aid: Cucumber juicecontains an enzyme called Erepsin which aids in the digestion of protein and helps cures heartburn, acidity, gastritis, constipation, and even ulcers. Cucumber seeds are considered as a natural remedy to eliminate tape worm from intestinal tracts.
 15. Helps Overcome Hangovers: Sugar, Vitamin B and electrolytes in Cucumbers assist in curing hangover and headache associated with it, by replenishing the body’s nutrients, rehydrating the water balance and elimination alcohol induced toxins.
 16. Anti Inflammatory: Fresh cucumber extracts inhibit the activity of pro-inflammatory enzymes like cyclo-oxyenase and prevent over production of nitric oxides, two of the primary factors leading to excessive inflammation. The seeds also have anti inflammatory properties which are effective in the treatment of swellings of mucous membranes of the nose and throat.
 17. Brain Tonic: Copper in cucumber stimulates the production of neurotransmitters, chemicals vital for neural communication and cognitive ability. It also helps in the treatment of Alzheimer’s disease by limiting neutral damage in the brain.
 18. Hair Care: Cucumbers contain silica, an integral compound in connective tissues of our body that helps hair growth and makes your hair stronger and shinier.
 19. Anti-Oxidant:  Choc-a-block with host of anti oxidants like Vitamin A, C, B carotene, a carotene, zea-xanthin and lutein that boost immunity and give you more energy when you are feeling lethargic. These compounds act as scavengers against free radicals that lead to ageing and other age related diseases.

Side Effects and Precautions:

 • Pesticide Residues: According to the Environmental Working Group’s 2014 report “Shopper’s Guide to Pesticides,” conventionally grown cucumbers are among the top 12 fruits and vegetables on which pesticide residues have been most frequently found. Therefore, individuals wanting to avoid pesticide-associated health risks may want to avoid consumption of cucumbers unless they are grown organically.
 • Wax Coating: Cucumbers may be waxed to retain moisture and resist mold growth, bacterial disease and bruising in the shipping process. In addition, other compounds, including ethyl alcohol, milk casein, and soaps may be added to synthetic waxes for consistency, “film” formation, and improved flow of wax onto the cucumber. Individuals concerned about any of these factors would do best to purchase organically grown cucumbers.
 • Gassiness: Cucumbers contain a compound called cucurbitacin, which provokes indigestion in some people, so look for the “burpless” variety if you wish to avoid these issues.
 • Allergies: If you have an allergy to ragweed, cucumbers may also cause allergic reactions, like swelling or hives around your mouth, throat and tongue.

-curejoy.com