செவ்வரத்தை/ செம்பருத்தி

செம்பருத்தி பூ- உடல்நல நன்மைகள்செவ்வரத்தை-thamil.co.uk

செம்பருத்தி பூ மிகவும் அழகானது. வீடுகளில் பூஜைக்கு பெருவாரியாக பயன்படுகிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்கபுஷ்பம் என்று அழைக்கின்றனர்.  வைத்தியத்துக்கும் மிகச் சிறப்பானது.

இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி, எட்டடி உயரம் வரைக்கும் நன்றாக செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும். இதன் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவகுணம் நிறைந்தது.

செம்பருத்தி பூக்கள் இரண்டு வகையாக இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்காக காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமாக காட்சியளிக்கும். இதுதான் மருத்துவரீதியில் சிறந்தது.

செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என உரிமை கூறுகிறது. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். மலேசியாவில் அவ்வளவு மதிப்பு செம்பருத்திக்கு.

இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை. மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி. முடிக்கு நல்லது.

இதழ்களின் வடிசாறு சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.

கூந்தல் வளர்ச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும்பங்கு வகிக்கிறது. காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைபடுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.

400 மில்லி நல்லெண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை – மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திரப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.

இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கி உண்ண குணப்படுத்தும்.

காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

செம்பருத்தி இலை-thamil.co.uk

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு போத்தலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு கரண்டி எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று, நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து கோப்பி, தேனீர் போல காலை மாலை அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. தங்கச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்.

செம்பருத்திஇலை-thamil.co.uk

செம்பருத்தி இலை- உடல்நல நன்மைகள்

செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை “மார்ஷ் மாலோ” என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது.

செம்பருத்தி இலைகளில் இன்னும் பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது. செம்பருத்தி இலைகளால் செய்யப்படும் தேநீர் நம் உடலுக்கு மிகவும் நல்லது. உலகத்தில் உள்ள பல நாடுகள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்து வருகிறது.

புற்றுநோயை எதிர்த்து போராடுவதால், முக்கியமான உடல்நல பயனாக இது பார்க்கப்படுகிறது. அதற்கு இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம்.

செம்பருத்தி இலையில் விட்டமின் C வளமையாக உள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுதால், இதுவும் அதன் முக்கிய உடல்நல பயனாக உள்ளது.

செம்பருத்தி இலை உங்கள் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

மெட்டபாலிச வீதத்தை அதிகரித்து உடலில் உள்ள நீர்ம சமநிலையை மேம்படுத்த செம்பருத்தி இலைகள் பெரிதும் உதவுவதால், இதுவும் ஒரு முக்கிய உடலநல பயனாக கருதப்படுகிறது.

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுவது செம்பருத்தி இலையின் மற்றொரு உடல்நல பயனாகும்.

செம்பருத்தி இலை கலந்த தேநீர் நம் உடலுக்கு மிகவும் நன்மையானது. செம்பருத்தி இலையால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேநீரை பருகுவதற்கு முன்பாக, அது இரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா, பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நல்ல தரத்துடன் பதப்படுத்தப்பட்டதா போன்றவைகளை கவனிக்கவும். சிறுநீரக பிரச்சனை மற்றும் சமிபாட்டு பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகலாம். சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் இது உதவும்.

செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், முக்கியமாக மாதவிடாய் காலத்தில் பெண்கள், அந்நேரத்தில் ஏற்படும் வலியை போக்கும். மேலும் சமிபாட்டுக்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.

இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை.

இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது.

– இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

– இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்