திராட்சையால் மிளிரும் சருமம்

திராட்சைப்பழம்-thamil.co.ukதிராட்சையால் மிளிரும் சருமம்

திராட்சை பழச்சாற்றில் பொட்டாசியம், கல்சியம், இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ளது. இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. இது நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மேலும் திராட்சை பழத்தை பயன்படுத்தி சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

• வெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை முகத்தில் ஒரு படையாக பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.

• இப்பழச் சாற்றில் சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் சூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் கதிர்களிடமிருந்தும் வெப்பத்தினால் வரும் கட்டியிலிருந்து பாதுகாப்பு தன்மை உள்ளது. திராட்சை சாறு இயற்கையாவே சருமப் பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. பொதுவாக வெயில் காலத்தில் தினமும் ஒரு டம்ளர் திராட்சை சாறு அருந்துவது சிறந்தது.

• திராட்சை பழச்சாறு இறந்த தோற்கலங்களை நீக்குவதில் உதவக் கூடியதாகும். இதை நீங்கள் சருமத்தில் போட்டால் போதும். உடனடியாக இவை இறந்த தோற்கலங்களை நீக்கி சுருக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல இரத்த ஓட்டத்தின் காரணமாக சருமத்தின் நீட்சித்தன்மையையும் திராட்சை அதிகரிக்கின்றது. நீர் பதத்தை சருமத்திற்கு கொடுக்கும் போது திராட்சை சாறு ஈரப்பதத்தை சருமத்திற்கு இயற்கையாக அளிக்கின்றது.

• ஒரு கரண்டி திராட்சை சாற்றை எடுத்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவிவிட வேண்டும். இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

• கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.

• திராட்சை பழச்சாறு 2 கரண்டி, பாசிபயிறு மாவு 1 கரண்டி சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதம் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைவதை காணலாம்.

மாரடைப்பிலிருந்து பாதுக்காக்கும் திராட்சை
இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் திராட்சைப் பழம் சேர்ந்திருக்கிறது. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கும் இதயக் குழாய்களில் இரத்தம் உறைதலே காரணம். இரத்தம் உறையாமல் இருப்பதற்க்கு பிளாவனாய்டு என்ற வேதிப்பொருள் உதவுகிறது. இரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு தடுப்பதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் தான் பிளாவனாய்டு கலந்த ஆஸ்பிரின் மாத்திரைகள் இதய நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இத்தகைய உயிர்காக்கும் பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான்ஃபோல்ட்ஸ் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வயிற்றுப்புண் -அல்சர், மலச்சிக்கல் போக்கும் திராட்சை
அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில் எழுந்ததும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க… அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை – கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.

மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும்.

எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விஷேசமானது.

# பி-தமிழ்
#-Tamil Udhayam