புற்றுநோயைத் தடுக்கும் தக்காளி

புற்றுநோயைத் தடுக்கும் தக்காளி

‘புராஸ்டேட் கேன்சர்’ என்பது ஆண்களை ஆதிகளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புராஸ்டேட் புற்றுநோய், ஆண் உறுப்புக்கு இணையான் சுரப்பித்திரளால் ஆன பெருஞ்சுரப்பியைத் தாக்ககுகிறது. இதனால் சிறுநீரக மண் ப‌டலம் பதிக்கிறது. விளைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். சிறுநீருடன் ரத்தம் கலந்து போகும் அறிகுறியும் ஏற்படலாம்.

தக்காளி-thamil.co.ukஇந்த நிலையில், புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக டாக்டர் மைக்கேல் W.ஸ்மித் கூறுகின்றார்.

தக்காளிக்கு, அதுவும் சமைத்த தக்காளிக்கு புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறுகின்றார். தக்காளியில் காணப்படும் ’லைக்கோபீன்’ என்ற பொருள்தான்  புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிறது. தர்ப்பூசணிபழ‌ம், இளஞ்சிவப்பு திராட்சைப் பழ‌ங்களிலும் லைக்கோபீன் இருப்பது குறிப்பிடத்தக்கது