சீமை அகத்தி

மூலிகையின் பெயர் – சீமைஅகத்தி
தாவரப்பெயர் – CASSIA ALATA
தாவரக்குடும்பம் – FABACEAE,(CAESALPINACEAE)
வேறு பெயர்கள் – மெழுகவத்திப்புதர், மெழுகுவத்திப் பூ, காட்டுச் சென்னா, கிருஸ்மஸ் மெழுகுவர்த்தி, ஏழு தங்க மெழுகுவர்த்தி.
பயன்தரும் பாகங்கள் -இலை, பட்டை, பூக்கள் மற்றும் விதை.

Senna alataவளரியல்பு – இந்த சீமை அகத்தி தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. மண்வளமும் ஈரப்பதமும் உள்ள இடத்தில் நன்கு வளரும். இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும். இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக் கூடியது. இது ஒரு புதர் போன்ற சிறு மரம். வெட்ட வெட்ட தழைத்து வளரும்.

இந்தத்தாவரம் பூர்வீகம் மெக்சிகோ நாடு. இது அமேசன் மழைக்காடுகளில் அதிகமாகக் காணப்படும். மேலும் பெரு, பிரேசில், பிரன்சுகயானா, கயானா, வெனிசுலா, கொலம்பியா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, அமரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும்.

இது அழகுச் செடியாகவும் வளக்கப்படுகிறது. இதன் பூக்கள் மெழுகுவர்த்தி வைத்தால் போன்று மஞ்சள் நிறமாக கொத்தாக அழகாக வளர்ந்திருக்கும். இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது.

இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் வாகை இலைபோன்று. பூக்கள் உதிர்ந்து நீண்ட காய்கள் இரு பக்கத்திலும் அடுக்காகக் காய்க்கும். இதன் விதைகள் நீள்சதுர வடிவில் அமைந்திருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

சீமைஅகத்தி-மருத்துவப்பயன்கள்

சீமைஅகத்தி செடியின் இலைகள் அதிகமாக மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. தோல் வியாதிகளை குணப்படுத்துகின்றது. வண்டுகடி, படர்தாமரை, சொறிசிரங்கு, கர்ப்பப்பை கோளாறுகள் பக்டீரிய பூஞ்சல்களைக் கொல்லவும், இரத்த அழுத்தம் குறைவதைக் குணப்படுத்தவும், வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்மா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் எளிதாகக்கழிய, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள், மேலும் மேக நோயான சிபிலிஸ் போன்றவைகளையும் குணப்படுத்தும்.

இதன் இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு, ஷம்பு, முகப்பூச்சாகவும் பிலிப்பெயின்சில் பயன்படுத்துகிறார்கள்.

வண்டுக் கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையை பறித்து எலுமிச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலை தடவினால் விரைவில் குணமடையும்.

cassia alataஇதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படி கசாயம் வைத்துக் கொடுக்க சிறுநீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.

சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊறவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டுவேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக்கழிவு இலகுவாக வெளியேறும்.

படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அரைத்து அதற்கு சமனெடை தேங்காய் எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும் இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்.

 

Cassia alata medicinal herb has the ability to cure whitlow 

Cassia alata, also called King of the forest, is not referring to an animal of the jungle but it is an ornamental plant which blooms lovely yellow flowers.  The name alone rings royalty and prominence in the plant world.  It is of the Caesalpiniaceae family and it is native to the Americas in the tropical areas.  It can be found all over the world and it is commonly found in Jamaica as well.  The main parts used as herbal medicine are the leaves, barks, and the roots. The Latin names are Cinnamomum and aromaticum.

The common names are Cassia, Cassia alata, Desay, Fleur, Impetigo bush, Candle bush, Ringworm tree, Ringworm bush, Candletree, Candelabra bush, Guajava Empress candle plant, Seven Golden Candlestick, and Christmas candle.

The constituents are saponins, narengenin, flavonoids, anthraquinones, and yellow chyrsopanic acid.  The medicinal properties are anti-inflammatory, antibacterial, analgesic, anti-fungal, and antimicrobial.

Health benefits of cassia alata

It is very popular as a remedy to get rid of liver spots, ring worm and other skin disorders.  One of the reasons it is referred to as the ring worm bush is because it is an excellent choice for most fungal infection of the skin, especially ring worm.

It is also used to treat burns.  To treat liver spots, ring worm and other fungal of the skin, crush the leaves so that the juice is extracted and rub it on the skin.  To treat burns put a crushed leaf of the area that is affected.

King of the forest medicinal herb can also be used to remedy colds, coughs, hypertension or high blood pressure, acne, impetigo and bites that are venomous.

It is a very versatile medicinal plant with its many uses and that is the reason I think elderly folks adore it so much.  It can also be used to treat inflammation, bronchitis, herpes, gonorrhea, stomach ache, scabies, syphilis, fever, liver conditions and constipation.

In some countries the leaves are used as laxative.  King of the forest plant can also be used to treat asthma, syphilis, fever and stomach ailments.

Extracts from the leaves of King of the forest can be found in shampoos, soaps as well as skin creams.

You can purchase the tea which can be found by one of its common names, Candelabra bush tea or you can make your own tea if you are in possession of the cassia alata medicinal herb.

-மூலிகைவளம்
-medicinalherbs-4u.com

தொகுப்பு – thamil.co.uk