நறுவல்லி

மூலிகையின் பெயர் – நறுவல்லி
தாவரப்பெயர் – CORDIA DICHOTOMA
தாவரக்குடும்பம் – BORAGINACEAE
பயன்தரும் பாகங்கள் – பழம், பட்டை, பிஞ்சு, இலை, பருப்பு (விதை).
வேறுபெயர்கள்  – நறுவிலி, நரிவிழி
ஆங்கிலபெயர்கள் Glue berry, Pink pearl, Bird lime tree, Indian cherry.

%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-1வளரியல்பு நறுவல்லி ஒரு பூ பூக்கும் ஒரு நடுத்தர மர வகையைச் சேர்ந்தது. அடிமரம் உயரம் அற்றதாக வளைந்து திருகுடையதாக கரணைகள் கொண்டிருக்கும்.

இது இந்தியா, இண்டோமலாயா,  மேற்கு மலேசியா, சைனா, ஜப்பான், தாய்வான், பாக்கீஸ்தான், இலங்கை, கம்போடியா, லாஸ், பர்மா, தாய்லேண்ட், வியட்னாம், இந்தோனேசியா, மலேயா, நியுஜினியா, வடஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு தொடர்ச்சி மலை, மாய்மர் காடுகள் ஆகிய இடங்களில் காணப்படும்.

இது மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். சரள் மண்ணில் வளராது.  இது சுமார் 40 அடி முதல் 90 அடி உயரம் வரை வளரும். இந்த மரம் மென்மையாக இருக்கும். பட்டையை நீக்கி விட்டு இதில் ஈர்கோலி மற்றும் பேன் சீப்புச் செய்வார்கள். மரத்தின் விட்டம்  25-50 செ.மீ. இருக்கும். மரம் சிறிது திருகிச் செல்லும்.

%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-2எப்பொழுதும் பசுமையாக இருக்கும் மரம். 1500 அடி கடல் மட்டத்திற்கு மேல் வளராது. மழையளவு 250-300 மி.மீ வரை தேவைப்படும். ஓடை ஓரங்களில் நன்கு வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இதன் அகலம் 2-3 செ.மீ. – 10 செ.மீ. வரை இருக்கும்.

முக்கோண வடிவிலான தனித்த மாற்றடுக்கில் அமைந்த இலைகள். காம்படி அகன்றும் முனை சிறுத்தும் காணப்படும். இலைகளை லார்வா சாப்பிடும். மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவர். பர்மாவில் இலைக்காக வளர்ப்பார்கள்.

%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-5கரணைகளின் இறுதியில் வெள்ளை நிறமுடைய சிறிய மலர்கள் கொத்தாகப் பூத்திருக்கும். 2 செ.மீ. குறுக்களவுள்ள முட்டை வடிவிலான சதைப்பற்றுள்ள காய்கள் கொத்தாக காய்த்துப் பழமாகும் போது கருப்பு நிறமுடையனவாக மாறும்.

பூக்கள் சிறிதாகவும், வெண்மை நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். பூ 8 மி.மீ நீளத்தில் இருக்கும். பூக்கள் தன் மகரந்தச் சேர்க்கையால் காய் உண்டாகும்.

%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-3இதன் பிஞ்சை ஊறுகாய் போடப் பயன்படுத்துவார்கள். இதன் பழங்கள் 10-13 மி.மீ நீளம் இருக்கும். பழங்கள் கத்தரிப்பூ, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாக இருக்கும்.

இதன் பழம் சாப்பிட வழுவழுப்பாக இருப்பதால் இதை பாமரமக்கள் மூக்குசளி பழம் என்று அழைப்பார்கள். விதை 6 மி.மீ நீளம் கொண்டவை. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பறவைகளால் விதைகள் பரவும்.

மருத்துவப்பயன்கள் 
%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-4நறுவல்லியின் தன்மை சூடும், குளிர்மையும் ஆகும். இதன் முக்கியபயன் சுத்த இரத்தம் உண்டாக்கும். வண்டல் சம்பந்தமான நோய்களை கண்டிக்கும். கபத்தை அறுக்கும். தாகம், பித்தம் நீர்சுருக்கு, சூடு சம்பந்தமான இருமல் இவைகளை நீக்கும். குடலுக்குப் பலம் கொடுக்கும். குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு இவைகளை நீக்கும். மருந்துகளினால் உணைடாகும் வேகத்தைத் தணிக்கும். பேரீச்சம் பழத்துடன் அரைத்துப் பூச பருக்களை உடைக்கும்.

நறுவல்லியின் செய்கைகள் யாதெனில், கார்ப்பு, துவர்ப்பு, இனிப்புச்சுவைகள், குழுமை, செரிமானத்தை வளர்த்தல் போன்றவை ஆகும்.

நறுவல்லியின் பட்டையின் பொடியும், கொட்டையின் பொடியும் கிருமி நோய், கொப்பளம், பித்தம், அக்கி, நஞ்சு, குடல் புண்கள், மார்பக மற்றும் நிறுநீர் குழாய் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

இதன் பட்டை குடற்புழுக்களைக் கொன்று வெளியேற்றுவதோடு மலத்தைக் கட்டவும் செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது இரத்திலுள்ள அசுத்தத்தை நீக்குகின்றது. அஜீரணத்தைப் போக்குவதோடு காய்ச்சலையும் தணிக்கின்றது.

நறுவல்லி thamil.co.ukசீதபேதி, உடல் எரிச்சல், தொழுநோய், சொறிசிரங்கு ஆகியவற்றையும் குணமாக்கும்.

நறுவல்லி பட்டை சாற்றில் 50 மிலி அளவு எடுத்து அதே அளவு தேங்காய்பால் கலந்து காலை மாலை குடித்து வந்தால் கடும் வயிற்று வலி தீரும்.

இதன் இலை காம உணர்வை மேலோங்கச் செய்யும் இயல்புடையது. வெட்டை நோய், கண்ணிலான வலி ஆகியவற்றைக் குணமாக்கும்.

இதன் பழம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு பேதி மருந்தாகப் பயன்பட்டுக் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறவும் உதவுகின்றது.
காம உணர்வைத் தூண்டுவதோடு, சிறுநீர் எளிதில் பிரியவும் உதவும்.

சில ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் தளர்வு ஏற்படும். மேலும் அதிகப்படியான சூட்டினால் கோழை உருவாகி மூச்சிரைப்பு உண்டாகும். இவர்கள் பழத்தை ஊறுகாய் செய்து சாப்பிட இருமல் தீரும். கோழையை அகற்றி ஆண்மையை பெருக்கும்.

நறுவல்லிதொழுநோய், தோல்வியாதிகள், உடல் எரிச்சல், மூச்சிறைப்பு, மூட்டுவலி, வறட்டு இருமல்,  சிறுநீரகக் கோளாறுகள், தொண்டை வறட்சி, மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இப்பழம் பயன்படுகிறது.

நெஞ்சில் ஏற்படும் சளி, நீர்சுருக்கு எனப்படும் சிறுநீர் பிரச்சினை, குடல் சார்ந்த நோய்கள், நீண்ட நாட்களாக உள்ள மலச்சிக்கல் ஆகியவை இந்த பழம் சாப்பிடுவதால் தீரும்.

இலைகளை நீரிலிட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை 100 மிலியாக காலை மாலை இரண்டு வேளை குடித்து வர மூச்சிரைப்பு தீரும்.

இதன் விதையை பொடி செய்து அதனுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தோல் நோய்களுக்கு தடவி வர பலன் கிடைக்கும்.

%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-8இலைசாற்றை முகப்பருவின் மேல் பூசினால் பருக்கட்டிகள் உடைந்து வடுக்கள் இல்லாமல் ஆறும்.

நறுவல்லி வேர்பட்டையை சிதைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், தொழுநோய், தோல்வியாதிகள், உடல்எரிச்சல், மூச்சிரைப்பு, மூட்டுவலி, மண்ணீரல் வீக்கம், வாய்ப்புண், பல்லாட்டம் நீங்கும்.

10 கிராம் கொழுந்து இலைகளை மென்மையாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, இரவு உணவுக்கு பின் சாப்பிட்டுவர எந்த வகை மூலமானாலும் தீரும்.

பழத்தை அளவோடு யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதைத்தான்
“நறுவிலி யிலைக்கிரைப்பு நாசமவ் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும் – நறுவலியின்
தன்பழமி ரத்தபித்தஞ் சார்மேக முந்தீர்க்கும்
இன்புறயா வர்க்குமிசை” என்கின்றது அகத்தியர் குணவாகடம்.

இப்பழம் குளிர்மை குணம் கொண்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதை மருந்தாக எடுத்து கொள்ளலாம்.

நீண்டகால நோய்களுக்கு ஆங்கில மருந்தை பயன்படுத்தினால் தீரும் என்று அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் அதுவே பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நோயை உண்டாக்கும். முக்கியமாக உடலில் தேவையற்ற வெப்பத்தை அதிகரித்து நோயை உண்டாக்கும் இதற்கு நறுவல்லி பழத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட வேகத்தை தணிக்கும்.

இனி நரிவல்லி பழத்தை பார்த்தால் மூக்குசளி பழம் என முகத்தை சுளிக்காமல், முன்னோர்கள் வழங்கிய அமுத பழம் என்பதை உணர்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி உடல் நலத்தை காப்போம்.

-மூலிகைவளம்