வெந்தயம் fenugreek seeds

மூலிகையின் பெயர் – வெந்தயம்
தாவரப்பெயர் – TRIGONELLA FOENUM GTAECUM
தாவரக்குடும்பம் – FABACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை தண்டு, விதை

fenugreek seedsவளரியல்பு – வெந்தயம் எந்த ஆண்டில் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. இதன் தாயகம் கிழக்கு ஐரோப்பா மற்றும் எத்தியோப்பியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெந்தயம் அதிகமாகப் பயிரிடும் நாடுகள் இந்தியா, பாக்கிஸ்தான், நேபால், பங்களாதேஸ், அர்ஜென்டெய்னா, எகிப்து, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி, மொராக்கோ மற்றும் சைனா. உலகத்திலேயே இந்தியாவில்தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஸ்ட்ரா, ஹரியானா, மற்றும் பஞ்சாப்.

வளமான மண்ணில் வெந்தய விதையை விதைத்தால், ஈரப்பதம் கிடைத்தவுடன் செடி முளைக்க ஆரம்பிக்கும். இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. கடற்கரை சார்ந்த மணற்பாங்கான இடங்களில் நன்கு வளர்கிறது. நன்சை நிலத்திலும் புன்சை நிலத்திலும் வளரும். இதற்கு வெய்யிலும் தேவை. இது ஒரு சிறுசெடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும். இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது. இது செடியாக இருக்கும்பொழுது பூ பூக்கும். பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும்.

fenugreek flowerசெடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன்படுத்துவார்கள். இதை கடைகளில் கிடைக்கும். பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்க வேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள். விதை இரு பிளவு போன்றிருக்கும்.50 -110 மில்லி நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும். ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும். இது மூன்று மாதத்தில் வளரக்கூடியது.இந்தச் செடியை ஆதிகாலத்தில் மாட்டுத் தீவனமாகவும் பயன்படுத்தினார்கள். இதை சமயலிலும் மற்றும், மருந்தாகவும் பயன்படுத்துவார்கள்.

methiமருத்துவப்பயன்கள்
வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும், தாய்பால் பெருகும், தீப்புண்ணை ஆற்றும், மதுமேகம் குணமாகும், உடல் கட்டிகள் பழுத்து உடையச் செய்யும், வலி போக்கும். சர்கரை வியாதியைக் குறைக்கும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு பெருஞ்சீரகம் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன்கலந்து கொடுத்துவரத் தாய்ப்பால் பெருகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும்.

வெந்தயப்பொடியை ஒரு தேக்கரண்டி காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குளைத்துத் தணலில் களிபோல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.

தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருத்தரிக்காது.

முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊறவைத்துத் தலை முழுகினால் பலன்கிட்டும்.

முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் பூசினால் எரிச்சல் குறையும், பருவும் குணமடையும்.

methi leavesவெந்தயக்கீரை Methi

வெந்தயக் கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக் கீரையுடன் பாசிப்பயறு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது. வாய்ங்குவேக்காடு வராது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.

வெந்தயக்கீரையில் விட்டமின் A சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும்போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப் போக்கவும் பயன்படுகிறது.

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவ குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

வெந்தயம்-thamil.co.ukவெந்தயத்தின் சிறப்பும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களும்

இரவில் தூங்குவதற்குமுன் ஒரு தேக்கரண்டியளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, ஒரு பேணி (200 மிலி) தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்தபின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது. தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம்.

வெந்தயத்தை இளஞ்சூட்டில் வறுத்து, ஆற வைத்தபின் அரைத்து அதனை காற்றுப்புகாது போத்தலில் இட்டு, தேவைப்படும்போது ஒரு தேக்கரண்டியளவு எடுத்து தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் சேர்த்து வறுத்து அரைத்து ஒரு தேக்கரண்டியளவு எடுத்து தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பருகிவர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இதனை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தூளை கோப்பியுடன் கலந்து குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காய தூளை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயதூளை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்தவகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயதூளையும், பெருங்காய தூளையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

சர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு மருந்தாகும் வெந்தயம்

ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, ஒரு வேளைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்து கொள்ளலாம் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.

இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம். வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.

இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும். வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

வெந்தயம் – மருத்துவ பயன்கள் 

நமது முன்னோர் சமையலறையிலேயே வைத்தியத்தையும் வைத்திருந்தனர். அதில் முக்கியமானது வெந்தயம். வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு, ஆல்கலாய்டு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.மேலும் கூட்டு டையோஸ்ஜெனின் உள்ளதால், ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரையை ரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும்.

வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக வெந்தயம் தேவை. அதிலுள்ள டையோஸ்ஜெனின் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.

கருப்பைக்குரிய சுருங்குதலை வெந்தயம் ஊக்குவிப்பதால், பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது. மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். உணவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால், அதிகப்படியான அமிலப் பாய்ச்சல் அல்லது நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நமது வயிற்றின் அக உறை மற்றும் குடலில், வெந்தயத்தின் பசைப் பொருள் சூழ்ந்து கொள்வதால், எரிச்சலை உண்டாக்கும் இரையக குடலிய தசைகளை இதமாக்கும். அதனை உட்கொள்வதற்கு முன்பாக, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தால், அதன் வெளிப்புறம் பசைத்தன்மையை பெறும். வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் கலந்து பருகினால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலை குறைத்து, உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். வெந்தயத்தின் பசைப்பொருள், இருமல் மற்றும் தொண்டை எரிச்சலையும் நீக்கும்.

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து (சபோனின்ஸ், பசைப்பொருள் போன்றவைகள்) உணவுகளில் இருந்து உள்ளேறிய நச்சுத்தன்மையை, உடலில் இருந்து வெளியேற்றும். இது பெருங்குடலின் சீதப்படலத்தை புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். செரிமானத்தை ஊக்குவித்து, உடலிலுள்ள தீமையான நச்சுக்களை வெளியேற்றும். இது செரிமானமின்மையை நீக்கி, மலச்சிக்கலுக்கு போக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால், அதிலுள்ள இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்துக்கள், பசியை அடக்கிவிடும். ஊற வைத்த சுத்தமான வெந்தயத்தில் இருந்து செய்யப்பட்ட பேஸ்ட்டை சரும சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாம். அதில் தீக்காயம், கொப்பளம், சரும படை போன்ற பிரச்சினைகளும் அடக்கம். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.

வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, சருமத்தில் பல அதிசயங்கள் அரங்கேறும். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.

வெந்தயத்தை உணவோடு சேர்த்து கொண்டாலும் சரி அல்லது அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவிக் கொண்டாலும் சரி, உங்கள் தலைமுடியை பளபளவென கருமையாக்கும். தினமும் இரவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த வெந்தயத்தை கொண்டு, மறுநாள் காலை தலையில் மசாஜ் செய்தால், பொடுகை விரட்டும், முடி உதிர்தலுக்கு பெரிய நிவாரணியாக இருக்கும்.

Fenugreek the Natural Herbal Cure for Diabetes and 15 other Health Benefits

Fenugreek is an annual plant in the family Fabaceae, also known as Trigonella foenum-graecum, Greek hay seed, and bird’s foot, is an herb that is commonly found growing in the Mediterranean region of the world. While the seeds and leaves are primarily used as a culinary spice, it is also used to treat a variety of health problems as an herbal supplement in Egypt, Greece, Italy, and South Asia.

Fenugreek has been found to contain protein, vitamin C, niacin, potassium, and diosgenin – a compound that has properties similar to estrogen. Other active constituents in fenugreek are alkaloids, lysine and L-tryptophan, as well as steroidal saponins -diosgenin, yamogenin, tigogenin, and neotigogenin.

Ways to consume Fenugreek
Fenugreek seeds have small, roughly angular, brownish yellow seeds. The seeds have a bitter yet pleasing flavor and potent aroma and are a characteristic taste of curry powders. The pebble-like seeds are often toasted to enhance their pungent aroma and have a powerful bittersweet, somewhat acrid taste, so use them in moderation.

The dried leaves of Fenugreek are used as an herb. The taste is bitter but addictive. An added bonus is its healthful properties – today we do not use many bitter foods that help us in controlling our appetite and this is a tasteful way of adding the bitter taste to our diet.

TOP 15 HEALTH BENEFITS OF FENUGREEK
1. Reduces Cholesterol – Fenugreek contains saponins that help reduce the body’s absorption of cholesterol from fatty foods, reduce the body’s production of cholesterol, especially the harmful low density lipoprotein (LDL) levels.
2. Prevents Diabetes – Fenugreek contains a rare amino acid (4HO-Ile) that has anti-diabetic properties. It enhancing insulin secretion under hyperglycemic conditions (for type 1 diabetes) and increasing insulin sensitivity (for type 2 diabetes). Also galactomannan, a natural soluble fiber, present in fenugreek slows down the rate of sugar absorption into blood.
3. Protects from Cancer – Fenugreek has estrogenic effects and is a possible alternative to hormone replacement therapy (HRT). Saponins and mucilage in fenugreek bind to toxins in the food and flush them out, thus protecting the mucus membrane of the colon from cancers.
4. Increases Breast Milk – Herbal tea made of fenugreek seeds contains diosgenin, works as a galactagogue, enhancing breast milk production in lactating mothers, and facilitates infant birth weight regain, in early postnatal days.
5. Eases Labor Pains: Fenugreek stimulates uterine contractions, reduces labor pain, and eases child birth process.
6. Ease Women’s Health Complaints: Compounds like diosgenin and isoflavones, with oestrogen-like properties, help reduce menstrual cramps associated with PMS, ease menopausal symptoms like hot flashes and mood fluctuations. Abundance of iron in fenugreek covers up the iron deficiency during adolescence (initiation of menstrual periods), pregnancy and breastfeeding.
7. Boosts Testosterone Levels – Significant positive effects of fenugreek on physiological aspects of male libido have been noted. It assists in maintaining healthy testosterone levels curing erectile dysfunction.
8. Aids Digestion – The mucilage in fenugreek seeds is effective against heartburn or acid reflux and soothes gastrointestinal inflammation, relieves indigestion, treats constipation, digestive problems created by stomach ulcers, and coats the stomach and intestinal lining. It also detoxifies the liver.
9. Helps Weight Loss -This thermogenic herb, with its natural soluble fiber, galactomannan, aids weight loss by suppressing appetite, providing quick energy, and modulating carbohydrate metabolism. It also helps flush out harmful toxins.
10. For Fever and Sore Throat: Herbal tea (fenugreek, lemon and honey), is used as traditional remedy to replenish the body after a bout of fever. The mucilage in fenugreek soothes cough and sore throat.
11. Hair Care: Fenugreek contains lecithin that hydrates the hair, reduces the dryness of the hair, cures dandruff, conditions the hair, and treats a variety of scalp issues which makes our hair healthy and strong.
12. Skin Care: Fenugreek has antiseptic and anti-inflammatory properties which draws out toxins accumulated underneath the epidermis and tones the outer layers of the skin and is traditionally used as a remedy for eczema, burns, abscesses, gout, skin inflammation, scars, blackheads, pimples, wrinkles, and cystic acne.
13. Heart Care: Fenugreek seed contains galactomannan (a polysaccharide), that lowers the risks of a heart attack. It is also an excellent source of potassium which counters the action of sodium to help control heart rate and blood pressure.
14. Pacifies Heartburn and Acidity: Due to the presence of high quantities of mucilage, consumption of fenugreek helps soothe digestive inflammation by coating the lining of our stomach and intestine, curing acid reflux or heartburn.
15. Nutrient source: Fenugreek seeds are rich source of trigonelline, lysine, l-tryptophan, saponins, fibers, high content of Vitamin A and C, calcium, iron, proteins, carbohydrates and trace minerals.

Side Effects of Fenugreek
While Fenugreek is generally considered to be safe when used moderately, there have been reports of a few minor side-effects. Nausea is one common side effect, while other people have reported gastrointestinal discomfort (diarrhea and/or gas). Also, when using this herb topically on the skin, it is important to watch out for skin irritations and rashes.

Fenugreek use during pregnancy is not recommended, since it has the potential to induce labor. If you are pregnant and wish to take it, you should do so only after consultation with your doctor.

If you are currently taking any oral medications, you should always use this herb at least 2 hours before or after these drugs. This is important since Fenugreek fiber has the potential to interfere with the absorption of oral medications due to its mucilaginous fiber (which gives it a moist and sticky texture).

Fenugreek is one of the oldest recorded medicinal herbs, highly esteemed by both east and west, and has been regarded as a treatment for just about every ailment known to man.

-Ps Aravindan
-மூலிகைவளம்
-curejoy.com