பனைநார் கட்டில்

பனைநார் கட்டில்இந்த பனைநார் கட்டிலினை ஏன் பயன் படுத்த வேண்டும் என்பதற்கான காரணம் என்னால் உணரபட்டவை.

1. நமது உடலில் உண்டாகும் வெப்பத்தை சமபடுத்தி உடல் சூட்டை தணிக்கும் அதனால் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் வெப்பம் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் மூலம் சிறுநீரகங்கள் அதன் பணியை துரிதமாக செய்து உடலுக்கு ஒத்திசைவுவான சூழலை உருவாக்குவதன் மூலம் உடலில் பித்தம் அதிகரிக்காமல் உடல் குளிர்ச்சியாக இருக்க பெரியளவு உதவி புரியகூடும் இந்த பனைநார் கட்டில்.

2. உடல் சூட்டை தணிப்பதால் முடி உதிர்தல் 90% வரை மட்டுபடும் அதுமட்டுமின்றி சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதால் உடல் இயக்கம் சரியாக இயங்கி இரத்த ஓட்டங்கள் சரியாக இருப்பதால் இரத்த அழுத்தம் சரியாக நடைபெறும் பட்சத்தில் தூங்கி எழும்போது புத்துணர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி தலைவலி போன்ற பிரச்சினைகள் இருக்க வாய்ப்பு மிக மிக குறைவு.

3. பனைநார் நமது தோலில் நேரடியாக படும்போது வியர்வை துவாரங்கள் சீர்செய்வது மட்டுமின்றி உடலில் உள்ள இறந்த கலங்களை வெளியேற்ற ஏதுவாக செயல்படுவதாக சுவடிகளில் நான் படித்ததுண்டு.

4. அதுமட்டுமல்ல இது நமது முன்னோர்களின் அறம் சார்ந்த ஓர் அறிவியல். அதை கடைபிடிக்க பயன்படுத்த முயல்வோம். செயற்கையாக உருவாக்கும் மெத்தையை விட இது 100 சதவீதம் உயர்வானதாக இருக்கக்கூடும்.

-Chellam Selva