நட்சத்திரங்களுக்குண்டான நவரத்தினங்கள்

“27 நட்சத்திரங்களுக்குண்டான நவரத்தினங்கள்”

நவரத்தினங்கள்அசுவணி – வைடூரியம்
பரணி – வைரம்
கிருத்திகை – மாணிக்கம்
ரோகிணி – முத்து
மிருகசீரிடம் – பவளம்
திருவாதிரை – கோமேதகம்
புனர்பூசம் – புஷ்பராகம்
பூசம் – நீலம்
ஆயில்யம் – மரகதம்
மகம் – வைடூரியம்
பூரம் – வைரம்
உத்திரம் – மாணிக்கம்
அஸ்தம் – முத்து
சித்திரை – பவளம்
சுவாதி – கோமேதகம்
விசாகம் – புஷ்பராகம்
அனுசம் – நீலம்
கேட்டை – மரகதம்
மூலம் – வைடூரியம்
பூராடம் – வைரம்
உத்திராடம் – மாணிக்கம்
திருவோணம்  – முத்து
அவிட்டம் – பவளம்
சதயம் – கோமேதகம்
பூரட்டாதி – புஷ்பராகம்
உத்திரட்டாதி – நீலம்
ரேவதி – மரகதம்

 

கற்களின் தரம் அறிவது எப்படி???

முத்து – நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

மரகதம் – கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.

பச்சைக்கல் – குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.

வைரம் – சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.

பவளம் – உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

கோமேதகம் – பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

புஷ்பராகம் – சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

வைடூரியம் – பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.

நீலக்கல் – பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆச்சார்யா