கால் ஆணி verruca

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%bfபாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கும் வருகிறது. கால் ஊன்றி நடக்க முடியாமலும், செருப்பு கூட அணியாமலும் வலியால் அவதிப்படுகின்றனர்

அளவு குறைந்த காலணிகளை அணிவது உட்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்படக் காரணம்

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது. காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளை பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை

வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்.

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

அம்மான் பச்சரிசி செடியை உடைத்து, அதில் இருந்து வரும் பாலை எடுத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகும்.

மருதாணி இலை கொஞ்சம், மஞ்சள் துண்டு கொஞ்சம் இரண்டையும் எடுத்து நன்றாக மையாக அரைக்கவேண்டும். ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு தூங்குவதிற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்தால் குணமாகிவிடும்.

அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.

ஓட்ஸை எடுத்து நீர் விட்டு 5 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி சிறிது நேரம் வைத்திருந்து தாங்கும் அளவு சூட்டில் கால்களை அந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் கால் ஆணி மற்றும் வலி குறையும்.

வெள்ளறுகுயை அரைத்து கால் ஆணி மீது வைத்து கட்டினால் கால் ஆணி குறையும்.

பிண்ணாக்குக் கீரையை அரைத்து, சிறிது மஞ்சள் தூள் கலந்து, கால் ஆணிகளில் போட்டால் அவை குறையும்.

மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.

1 கிராம் சமையல் சோடாவை எடுத்து எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள். பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

– பாட்டி வைத்தியம்
-ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்