கல்பாசி

கல்பாசிகல்பாசி, இந்தியாவில் மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படும் உலர்ந்த பாசி. கடற்பாசி என்பதும் கல்பாசி என்பதும் ஒன்று அல்ல. கல்பாசி என்பது காட்டுப் பகுதிகளில் பாறைகளில், மரக்கிளைகளில், பனை தென்னை மரங்களின் மீது தேமல் பட்டதுபோல படர்ந்து வளரும் பாசி.

கல்பாசிப்பூவுக்கு ஆங்கிலத்தில் ‘பிளாக் ஸ்டோன் ஃபிளவர்’ black stone flower என்று பெயர். கல்பாசி, சிறிது கசப்புச் சுவை கொண்டது.

black stone flowerமரத்தின் பட்டைகளில் தேமல் பட்டது போல படர்ந்து கிடக்கிறது பாசி. தூரில் இருந்து உச்சிக்கிளை வரைக்கும் ஒட்டியிருக்கிறது. செதில் செதிலாக நீட்டிக் கொண்டிருக்கும் இந்த பாசிகளை மரத்தின் பட்டைக்கு நோகாமல் செதுக்கி எடுக்க வேண்டும்.

அந்தக்காலத்தில் பாறைகளில்தான் வளருமாம். இப்போது மரங்களிலும் ஏறப் பழகி விட்டது. இந்திய சமையலில் தவிர்க்க முடியாத அங்கம். உணவுக்கு வாசனையை மட்டும் தராமல் சத்தையும் வாரி வழங்குகிறது இந்தப் பாசி. இதைச் சுரண்டி எடுத்து விற்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் கொடைக்கானலைச் சுற்றிலும் வசிக்கும் பளியர், புலையர் சமூகப் பழங்குடிகள்.

கல்பாசிப்பூ வலி நிவாரணி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

செரிமான மணடலத்தில் அழற்சி போன்றவை ஏற்படுவதைத் தடுக்கவே கல்பாசிப்பூவை மசாலா பொருட்களில் சேர்க்கிறார்கள். கல்பாசிப்பூ செரிமானத்தை மேம்படுத்தும். பிரியாணிக்கு வாசம் சேர்க்கும் பாசி.

நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் குணமாக்கும்.

உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

ஆன்டிபாக்டீரியல் மருந்தாகச் செயல்படுகிறது.

சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

வெறுமனே கல்பாசியைச் சாப்பிடக் கூடாது. உணவுப்பொருளோடு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.

-penmai.com
-kungumam.co.in

தொகுப்பு – thamil.co.uk