ரம்புத்தான் பழம்

ரம்புத்தான் பழம் ரம்புத்தான் பழம் ஒரு வெப்ப மண்டல பழம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். ரம்புத்தான் என்ற வார்த்தைக்கு தோல் போன்ற முடி என்று பொருள்.

இது ஆப்பிரிக்கா, கம்போடியா, கரீபியன், மத்திய அமெரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் கொடைக் கானல் பகுதியில் விளைகிறது. இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது.

ரம்புத்தான் பழத்தின் புறத்தோல் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் மேற்புறத்தில் மென்மையான முடிகள் போன்று காணப்படும். இதனை பாதியாக மேல் தோலை நீக்கினால் சதைப்பகுதி காணப்படும். இதுவே சாப்பிடும் பகுதியாகும். இதனுள் விதை சற்று நீள்வட்ட வடிவில் காணப்படும். ரம்புத்தான் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது. இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும்.

ரம்புத்தான்ரம்புத்தான் பழங்களின் சர்க்கரை அளவு பழங்களின் சதையின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் நீர்ச்சத்து – 82.3 கிராம், புரதம் – 0.46 கிராம், காபோவைதரேட் – 16.02 கிராம், சர்க்கரை – 2.9 கிராம், நார்சத்து – 0.24 கிராம், கல்சியம் – 10.6 மி.கிராம், பொஸ்பரஸ் – 12.9 மி.கிராம், அஸ்கார்பிக் அமிலம் – 30 மி.கிராம் உள்ளது.

ரம்புத்தான் வளர்ச்சி நீர் கிடைப்பதை பொறுத்து புதிய கிளைகள் மற்றும் இலைகள் உருவாக்கும். திராட்சை போல சிறிது ஒன்றாக குழுவாக இருக்கும். வளர்ச்சி நிலையை பொறுத்து சதை, வெவ்வேறு சுவையை கொண்டிருக்கும், ரம்புத்தான் அதிக அமிலம் எனினும், லிச்சியை ஒத்த இனிப்பு, புளிப்பு மற்றும் மணம் சுவை கொண்டிருக்கிறது.

இப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும். இதனால் இரவு நேரங்களில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

தற்போது பழங்களை அதிகம் சாப்பிடாமல் இரசாயனம் கலந்த குளிர்பானங்களை விரும்பி அருந்துகின்றனர். இவை உடலுக்கு பல தீங்குகளை இழைக்கக்கூடியது. அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

-கூவலப்புரம்