செலரி – இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும்

மூலிகையின் பெயர் – செலரி Celery
தாவரப்பெயர் – Apium graveolens
தாவரக்குடும்பம் – Apiaceae
பயன்தரும் பாகங்கள் – சமூலம்

செலரிஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம். செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப் படுத்தப்படுகின்றன.

சாலட்களிலும், காலிப்ளவர், காளான் மஞ்சூரியன் உணவுகளிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது.

செலரி என்ற கீரை வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம் ஊரில் கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப்படுவதைப் போல இந்த செலரி கீரை சீனாவில் பயன்படுத்தப்படுகிறது.

செலரியின் மருத்துவக் குணங்களுக்காக 300 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கீரை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மிகவும் நறுமணமுள்ள செலரியினை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும். வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, கரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட்(Salad) செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது

செலரி.செலரியில் உள்ள சத்துக்கள் : 100 கிராம் செலரியில் கிடைக்கும் கலோரி 37 ஆகும். இதன் இலைகளில் 88% ஈரப்பதமாகும்; புரதம் 6.3%, கொழுப்பு 0.6%, நார்ச்சத்து 1.4%, காபோவைதரேட் 1.6%, தாது உப்புகள் 2.1% ஆகும். தாது உப்புகளும் விட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவற்றுடன் விட்டமின் A, விட்டமின் B விட்டமின் C போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது.

மருத்துவக் குணங்கள்

உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, லூகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன.

1994 ஆம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மின்க்லீ என்பவர் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டார். தினமும் அவர் இரண்டு செலரித் தண்டுகள் வீதம் ஒரு வாரம் வரை சாப்பிட்டு, அத்தொல்லையிலிருந்து குணமாகி இயல்பான நிலைக்கு வந்துவிட்டார். இவர் மகன் குலாங் டிலீ, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் செலரியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வித இரசாயனப் பொருளை ஊசி மூலம் எலிகளுக்கு ஊட்டினார். அந்த எலிகளின் இரத்த அழுத்தம் 12 முதல் 14 சதவிகிதம் வரை குறைந்திருந்தது. இரத்த அழுத்தம் குறைகிறதே என்று இதை அதிகமாகச் சாப்பிடவும் கூடாது. இந்த உண்மையையும் இவர் கண்டுபிடித்துள்ளார். அளவுடன் செலரியை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோயைப் பரிபூரணமாகக் குணமாக்கிக் கொள்ளலாம்.

செலரி..இதில் உள்ள மக்னீசியமும், இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்கவை. அவ்விரண்டும் அதிக அளவில் இருப்பதால் இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன. இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது.

இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.

உடல் வளர்ச்சிக்குப் புரதம் தேவை. பிற காய்கறிகளில் அதிக பட்சம் 2% முதல் 3% வரை புரதம் உள்ளது. ஆனால், அது செலரியில் 6.3% ஆக இருப்பது குறிப்பிடத் தக்கது.

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

இதில் உள்ள தாது உப்புகளால் இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம்.

வலிப்பு நோயால் ஏற்பட்ட இசிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி நோய் முதலியவை குணமாகும். இதற்காகச் செலரித் தண்டு, இலை ஆகியவற்றின் சாற்றை காரட் சாறுடன் சேர்த்து அருந்த வேண்டும். இந்த முறையில் தினமும் ஒரு வேளை அருந்தினால் நரம்பு நோய்கள் குணமாகும்.

புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும்.

celery seedசிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாது. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.

செலரியின் விதைகள் சிறுநீர் நன்கு பிரிய பயன்படுகின்றன. வயிற்றுப் பொருமலைக் குணமாக்குகின்றன. இந்த விதைகளைக் காயவைத்து இடித்துத் தூளாக வைத்துக்கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் ஏற்படும்.

யுனானி வைத்தியத்தில் செலரி வேரைச் சிறுநீரகக் கற்களைக் கரைக்க மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

செலரியின் வேரைக் காய வைத்துப் பொடியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி பொடியுடன் அதே அளவு தேனும் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இப்படிச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.

செலரியின் இளந்தளிரிலும் தண்டிலும் உள்ள தாது வைட்டமின் சத்து மற்றும் புரதச் சத்து ஆகியவைகளினால் இது ஒரு முக்கியமான மூலிகை செடிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஒரு சிறந்த நறுமண சக்தியை கொண்டுள்ளது. மனிதனின் மூளைப் பகுதியை திறம்பட செயல்படுத்தும் தன்மை இந்த நறுமண எண்ணெய்க்கு உண்டு. இது முடக்கு வாதம் கீழ் முடக்கு வாதம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது மலமிளக்கியமாக பயன்படுகிறது.

இந்த செலரி கீரையில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால் உணவைக் கட்டுப்படுத்த முடியும். இதில் கலோரியும் குறைவாக உள்ளது. செலரி கீரையை மற்ற உணவுகளோடு சேர்த்துச் சாப்பிடுவது நலம்.

 

7 Health Benefits of Celery Seeds7 Health Benefits of Celery Seeds

Celery seed are seeds taken from the celery plant. They have been used for medicinal purposes for thousands of years in many parts of the world, though they remain relatively new to western cultures. Celery seed can be taken in capsule or tablet form and can also be ingested raw. Crushed celery seed is even used as tea. Here are 7 health benefits of celery seed:

Cancer Prevention
One of the most exciting health benefits of celery seeds is cancer prevention. The antioxidants in celery seed may help lower the risk of cell damage and chronic inflammation, which are known to contribute to many different types of cancer. Preliminary studies of mice show that celery seed contains anti-carcinogenic enzymes that help inhibit the growth of tumors and cleanse the body of toxins.

High In Antioxidants
Celery seeds contain many substances that act as antioxidants in the body including flavonoids, a group of antioxidants known for their ability to help prevent free radical damage to the cells and DNA.

Diuretic
Celery seed can help increase urine flow, which may be useful in treating water retention and other urinary problems.

Anti-Inflammatory & Pain Relief
Celery seed has long been used to treat arthritis and gout and is thought to be an effective pain reliever and muscle relaxer. One study showed that consumption of celery seeds twice per day lead to a significant reduction of the pain associated with these conditions.

celery seedsHigh In Calcium
Celery seed is an excellent source of calcium, which makes it beneficial to maintaining healthy bones and teeth. Calcium can also help with weight loss and reduce the risk of cardiovascular disease.

Lowers Blood Pressure
Studies on animals show that celery seed can help lower blood pressure. This may be due in part to its diuretic properties. Many diuretics prescribed for blood pressure effect the balance of potassium and sodium in the body, which leads to unwanted side effects. Celery seed, however, has been shown to offer the benefits of lowering blood pressure without these side effects. The high calcium content in celery seed may also help lower blood pressure.

Mosquito Repellant
Studies show celery seed can be an effective mosquito repellant. This may be useful in preventing diseases caused by mosquito bites like malaria.

-velichaveedu.com
-ta.vikaspedia.in
-healthdiaries.com

தொகுப்பு – thamil.co.uk