முட்டைக்கோவா மருத்துவக் குணங்கள்

முட்டைக்கோஸ் முட்டைக்கோவாஉருண்டு திரண்ட முட்டைக்கோஸ் (முட்டைக்கோவா) சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்.

* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.

* பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற இரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.

* முக்கியமான நோய் எதிர்ப்பொருளான விட்டமின் சி  முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் விட்டமின் சி கிடைக்கிறது. தொடர்ச்சியாக விட்டமின் சி’ உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

* தீங்கு விளைவிக்கும் ‘பிரீ-ரேடிக்கல்’களை சுத்தப்படுத்தும் தன்மை விட்டமின் சி-க்கு உண்டு. ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உறிஞ்சி அகற்றும் அளவை கணக்கிட்டால், 100 கிராம் பச்சை முட்டைக்கோசானது, 508 மைக்ரான் ரேடிக்கல்களை விரட்டி அடிக்கிறது. சிவப்பு முட்டைக்கோஸில் 2 ஆயிரத்து 252 மைக்ரான் அளவு ரேடிக்கல்களை சுத்தப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

* விட்டமின் பி-5, விட்டமின் பி-6, விட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய விட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

முட்டைக்கோஸ்-thamil.co.uk* பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

* முட்டைக்கோஸில் விட்டமின் கே நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் விட்டமின் கே -விற்கு உண்டு

– Thiru Malai and Subramaniyan Subramaniyan.

 

முட்டைக்கோஸ் ஜூஸ்முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்

பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த காய்கறி கொண்டு செய்யப்படும் ஜூஸைக் குடித்தால், உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அல்சர்
முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும்.

புற்றுநோய்
முட்டைக்கோஸ் ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இதுதான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஐசோசையனேட் நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் நல்ல பாதுகாப்பை வழங்கும்.

கண்புரை
கண்புரை நீடித்தால், அது பார்வையை இழக்கச் செய்யும். இந்த கண்புரையைப் போக்க அறுவை சிகிச்சை மட்டும் தான் சிறந்த வழி அல்ல. தினமும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவதன் மூலமும் கண்புரையைத் தடுக்கலாம்.

சரும பிரச்சனைகள்
முட்டைக்கோஸ் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இதனால் இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக இதில் உள்ள விட்டமின் C, சரும பிரச்சனைகள் விரைவில் குணமாக உதவும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்
முட்டைக்கோஸ் ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆய்வுகளிலும் முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால், அதில் உள்ள ஹிஸ்டிடைன் என்னும் பொருள் நோய்க்கிருமிகளை வலிமையுடன் எதிர்த்துப் போராடி நோய்கள் அண்டுவதைத் தடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூளைக்கு நல்லது
முட்டைக்கோஸ் ஜூஸ் மூளைக்கு நல்லது. முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே, ஆந்தோசையனின், மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்கி, ஒரு செயலில் மனதை ஒருமுகப்படுத்த உதவும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

உடல் எடை குறையும்
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடித்து வர, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைய உதவும். முக்கியமாக முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு.

கொலஸ்ட்ரால் குறையும்
முட்டைக்கோஸ் ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஜப்பானிய ஆய்வு ஒன்றிலும், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கடுமையாக குறைந்திருப்பது தெரிய வந்தது.

கல்லீரல் சுத்தமாகும்
முட்டைக்கோஸ் ஜூஸில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது பருகி வர கல்லீரலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு, கல்லீரல் சுத்தமாகி, அதன் செயல்பாடும் மேம்படும்.

இரத்த சோகை
முட்டைக்கோஸ் ஜூஸில் ஃபோலிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இரத்த சோகை என்று வரும் போது புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸைப் பருகி வர விரைவில் குணமாகும்.

ஜூஸ் செய்யும் முறை
பாதி முட்டைக்கோஸை எடுத்து சுடுநீரில் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, பின் அதனை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும்.

குறிப்பு

*முட்டைக்கோஸை ஜூஸ் போட பயன்படுத்தும் முன், எப்போதும் அதனை உப்பு கலந்த நீரிலோ, சுடுநீரிலோ அல்லது வினிகரிலோ 30 நிமிடம் ஊற வைத்துக் கொண்டால், அதில் உள்ள புழுக்கள் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுமையாக வெளியேறும்.

*முட்டைக்கோஸ் ஜூஸ் மூலம் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், அதனை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும்.

* ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக இதனைப் பருகக்கூடாது. ஒரு நாளைக்கு 1 டம்ளர் மட்டும் போதுமானது. அதிலும் கால் டம்ளர் முட்டைக்கோஸ் ஜூஸ் என்றால், அத்துடன் முக்கால் டம்ளர் கரட் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இந்த ஜூஸில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அதன் தன்மை குறைந்துவிடும்.

-இயற்கை மருத்துவம்

தொகுப்பு – thamil.co.uk