கோணற்புளி

மூலிகையின் பெயர் கோணற்புளி
தாவரவியல் பெயர் Pithecellobium dulce
தாவரகுடும்பம் – Fabaceae
வேறு பெயர்கள்  – கோணப் புளியங்காய், கோணக்காய், சீனிப்புளியங்காய், கொடுக்காய்ப்புளி, Manila Tamarind
பயன்தரும் பாகங்கள்  – இலை, பூ, காய், பழம், மரம்.

கோணற்புளி

சங்க இலக்கியத்தில் தமிழர்களின் தொன்மையான மரங்களில் ஒன்றாக கொடுக்காய்ப்புளி மரம் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த மரத்தின் காய்கள் எளிதில் உதிராது என்பதால் ‘உகா மரம்’ என்ற பெயரில் குறிப்புகள் காணப்படுகின்றன.

“கொடுக்காய்ப்புளி மரத்தின் கிளைகள் புறவு நிலம்போலக் காணப்படும். புறவு நிலம் என்பது முல்லை நிலத்தில் பயிர் செய்ய வயல் வயலாகத் தடுக்கப்பட்ட நிலம் ஆகும். கொடுக்காய்ப்புளி, இறால் மீன்போல சுருண்டு இருக்கும். பாலைநில மக்கள் வில்லில் அம்பு தொடுத்து கொடுக்காய்ப்புளி காய்களை வீழ்த்தி உண்பார்கள்” என சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 274-வது பாடலில் பாடல் ஆசிரியர் உருத்திரனார் விளக்குகிறார்.

வளரியல்பு – விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும். இந்த மரங்கள் முட்களுடன் இருப்பதால் வேலிக்காகவும் கிராமங்களில் நடுவதுண்டு.

கோணற்புளி ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி, அவரை போன்ற தோற்றம் உடையவை.  இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும்.

பறவைகளின் எச்சங்கள் மூலம் கோணற்புளி விதைகள் வீட்டுத் தோட்டங்களிலும் விழுந்து, வளர்ந்து பல்லுயிர் பெருக்கமும் உண்டானது.

முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இந்தமரங்கள் விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது.

மருத்துவப் பயன்கள்

கோணற்புளி.மருத்துவ குணம் கொண்ட கோணற்புளி மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியன மாதவிடாய் சிக்கல், நீர்க்கடுப்பு, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது.

கோணற்புளி சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால், கோடை காலத்தில் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் சக்தியாக விளங்கியது.

இதன் இலைகள் ஆடு, முயல் உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறந்த தீவனமாகவும் விளங்குகிறது.

நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும். கோணற்புளி மரங்களில் தயாரிக்கப்படும் மரச்சாமான்கள் நீடித்து உழைக்கும்.

 

கொடுக்காய்ப்புளி-கோணற்புளிHealth Benefits of Manila Tamarind

Natives use camachiles in a number of traditional remedies : a concoction of the fruit and astringent bark treat ailments ranging from bronchitis, diarrhea, hemorrhages, sores, liver problems and spleen issues. In Eastern Nepal, parts of the camachile treat fever, the stem combats dysentery, and the leaves help with intestinal disorders. The Spaniards initially assumed that camachiles were

beneficial for the liver : they extrapolated that the seeds represent the liver itself, and the white aril surrounding the flesh symbolized the liver’s fat. No studies support this theory. According to the book, “Huastec Mayan Ethnobotany,” the Huastec Indians of Mexico’s San Luis Potosi used parts of the tree to manage toothaches, sore gums and mouth ulcers.

Manila tamarinds are exceptionally high in vitamin C, which bolsters the immune system, staves off strokes and reduces phlegm. It’s also full of cancer-fighting antioxidants.

Its high thiamine content helps the body convert sugars into energy, which impacts the mood: greater conversion helps stabilize stress levels

According to a 2012 study published in the Journal of Ethnopharmacology, camachile fruit extracts exhibited strong anti-ulcer activity comparable to the standard drug, omeprazole.

A 2011 study published in the Evidence Based Complementary and Alternative Medicine found that fruit extracts protected the liver from oxidative stress.

Researchers found potential in the camachile’s antioxidants’ ability to fight off liver disease (hepatic oxidative dysfunction, to be specific).

A 2012 study published in Natural Product Research indicates that camachiles are non-toxic and safe for consumption despite the occasional minor throat irritation.

-theindianvegan.blogspot.co.uk
-ennumeluththum.blogspot.co.uk

தொகுப்பு – thamil.co.uk