பாட்டி வைத்தியம்

பாட்டிவைத்தியம் - thamil.co.uk* தேயிலைகளை நன்கு கசக்கி பசை போலாக்கி சுத்தமான வெள்ளைத் துணியில் முடிந்து, ஃப்ரீஸரில் சிறிது நேரம் வைத்து பின்பு அதை எடுத்து கண்களின் மீதும் கண்களைச் சுற்றியும் ஒத்தடம் தர, கண்களின் அடியில் ஏற்படும் ‘பை’ போன்ற வீக்கம் போன்றவைகள் நீங்கி கண்கள் புத்துணர்வு பெறும்.

* ஆலம் இலையின் காம்பில் வரும் பால் சருமப்படை, தோல் போன்றவைகளுக்கு நல்ல மருந்து.

* நம் பற்களுக்கு பளபளப்பும், நல்ல வெண்மையும் தரக்கூடியது, பிரியாணி இலை. இதைப் பற்களில் வைத்துத் தேய்க்க பற்கள் பளபளப்பாகும். வாய் நாற்றமும் தொலையும்.

* ‘ஆஸ்டிரஜன்’ astragin குணத்தைக் கொண்ட புதினா இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து, மிதமான சூடு வரும்வரை ஆற விட்டு, அதைப் பயன்படுத்தி முகம் கழுவுவது சருமத்திற்கு நல்லது.

* வாழையிலையில் தொன்னை அமைத்து அதில் பொறுக்கக்கூடிய சூட்டில் எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்வதும் சிறப்பம்சம்.

* கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

* கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

* மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

* சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்காது.

* முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும்.

* வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால் காது வலிக்கு நல்ல பலனைத் தரும்.

* தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.

* மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி இளம் சூடாக இருக்கும்போது சில துளிகள் காதில்விட வலி குறையும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகிய சரக்குகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் அகலும்.

* தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றை தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து ஒவ்வொரு தைலத்திலும் ஒவ்வொரு துளி கலந்து காதிலே விட்டு பஞ்சடைத்து வந்தால், காதில் ஏற்படும் வலியுடன் ஒழுக்கு இருந்தால் குணமாகும்.

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

– Ganesh Kumar