நிலாவாரை / சென்னா

மூலிகையின் பெயர் – நிலாவாரை / சென்னா SENNA
தாவரப்பெயர் – CASSIA ANGUSTIFOLIA
தாவரக்குடும்பம் – LEGUMINOSAE
பயன்தரும் பாகங்கள் – இலை,காய்கள்.
வேறுபெயர்கள் – நிலாவாரை, நிலாவக்காய்.
வகைகள் – C.acutifolia, C.obovata. C.itlica. ALFT – 2 senna.

சென்னா வளரியல்பு – நிலாவாரை தென் அரேபியாவைப் பிறப்படமாகக் கொண்டது. இந்தியா, தென் அரேபியா, யேமன் நாடுகளில் வளர்கிறது. இது செம்மண், களிமண், வளம் குறைந்த மணற்பாங்கான நிலம் மற்றும் களர், உவர், தரிசு நிலங்களில் வளர்வது. காரத்தன்மை 7-8.5 வரை இருக்கலாம். 3வது மாதத்திலிருந்து இலை பறிக்கலாம். இவ்வாறு மூன்று முறை பறிக்கலாம். இது 2 அடி உயரம் வரை வளரக்கூடியது.

இது 18 வது நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது. இது கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லியிலும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, விருதுநகர் மாவட்டங்களிலும் கடப்பா, புனேயிலும் பயிரிடப்படுகிறது. ஆசியாவில் கிட்டத்தட்ட 500 சிற்றினங்களில் 20 வகையான சிற்றினங்கள் இந்தியாவைச் சார்ந்தவை.

செடியின் இலைகள் காய்கள் மற்றும் செனோசைடு விழுது ஆகியவை ஜெர்மனி, ஹாங்கேரி, ஜப்பான், நெதர்லாந்து, அமரிக்கா மற்றும் ரசியா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதையினை விதைக்கும் முன்பு 12 மணி நேரமேனும் நீரில் ஊறவைத்த பின் விதைக்க வேண்டும். விதைத்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கும்.

மருத்துவப்பயன்கள்

cassia angustifolia seedநிலாவாரை இலைகளை முழுவதும் முதிர்ந்து கருநீல நிறமுள்ள இலைகளைப் பறிக்க வேண்டும். காய்கள் இளமஞ்சள் நிறமாக மாறும்போது காய்களை அறுவடை செய்யலாம். பூப்பதற்கு முன்பு மொட்டாகத் தேவைப்படும் மருத்துவத்திற்கு மொட்டுகளைப் பறித்துக் கொடுக்கலாம். மருத்துவத்தில் சென்னா இலை, இலைத்தூள், அதன் கிளை சிறு நறுக்குகள், விதை மற்றும் ஒவ்வொன்றின் பொடிகள் மருந்தாகவும், தேனீர் தயாரிக்கவும் பெரிதும் பயன்படுகின்றன.

சருமத்தில் ஏற்படும் சிரங்குகள், மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து. மலம் இளக்கியாகப் பயன்படுவதுடன் நச்சுக் கொல்லியாகவும் பயன்படுகிறது.

பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கர்ப்பமாக உள்ளவர்களும் இந்த மருந்துகளை சாப்பிடக்கூடாது. 12 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.

இரத்தக் கொதிப்பக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு நாளைக்கு இரு வேளை மட்டும் 10 நாட்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது.

உடலின் எடையைக் குறைக்க இந்த மருந்து பயன்படுகிறது.

வெளிநாடான சைனா, ஜப்பான், அமரிக்கா போன்ற நாடுகளில் இதன் தேனீர் விரும்பிக் குடிக்கிறார்கள். வெளிநாட்டிற்குத்தான் இந்தச் செடியின் பாகங்கள் அதிகமாக ஏற்றுமதியாகிறது.

HEALTH BENEFITS OF  SENNA LEAF HERB

The senna leaf, also known as Cassia angustifolia or Cassia senna is a shrub native to North Africa and Arabia. There are about 50 known species of senna.The leaf has been used for centuries as a natural laxative,cleansing agent and anti-inflammatory.It can be taken as a tea or in capsules or tablets. Study shows that it is best to take senna with aromatic herbs such as cardamom,peppermint,fennel and ginger which can help diminish a build up of gas in the stomach that can ensue due to the herb’s strong purgative actions.

SENNAUSES OF SENNA LEAF

It is excellent for helping with constipation
A great colon cleanser-According to Traditional Chinese Medicine,senna leaf helps to clear away heat accumulated in the large intestine which helps the body rid stagnant food that has accumulated in the organs.
Known to help with anal lacerations and hemorrhoids as it helps reduce swelling and heal the area.
Can alleviate skin conditions-Senna leaf contains essential oils,resin and tannin. Acetone and ethanol content help fight against micro organisms that can cause acne. In Ayurvedic medicine, senna is made into a paste and used as a compress to heal,ringworm,burns and wounds.
Senna is used as a thickening agent and the seeds are used in Thai cuisine.
Similar to henna the leaves are used as a hair colour lightener.
Senna is also known to help with heartburn,bloating,nausea,gas and belching associated with dyspepsia.
It is a fast acting weight loss laxative.
Caution must be taken when using senna as it must not be overused. It is not to be taken during pregnancy,breastfeeding and menstruation.

The uses of the senna leaf is sometimes misunderstood but it has lots of benefits.

-மூலிகைவளம்
-missydeedotorg.wordpress.com

தொகுப்பு – thamil.co.uk